Friday, September 22, 2006

தாய்

(March 08,2006)

உன்னுடன் துணைவர முடியாது
என் எல்லை முடிகிறது
காரிலிருந்து நீ இறங்குவாய்
இனி என்னுடைய பிள்ளையை வெளியுலகம் எடுத்துக்கொள்ளும்.
நீ இயல்பெனக் கொண்ட உன்னுடைய மௌனத்தை
இனி இவர்கள் என்ன செய்வார்கள்…
மென்மையான இந்த பூக்களின் இதழ்களை
எப்படி நாசம் செய்வார்கள். ..
நீ இறங்கிச் செல்வதை நான் வெறுக்கிறேன்- இத்தோடு
என் உரிமை பறிகிறது
அருகிருந்து, என்னுடைய உடம்பினுள் கை போட்டு,
இதயத்தை இழு…த்துவிட்டு ஏதோ செல்கிறது
இதயம் அவ்விடத்தில், ஸ்தம்பிக்கிறது என் உலகம்-
நீ நடக்கிறாய்
உன் புதிய பாடசாலை, உத்தரவாதங்கள் தராது
என் வெறித்த விழிகளை திமிருடன் நெரிக்கிறது
இவ் உயர் பாடசாலையில்
சிறுவர்களின் ஆண் குறிகளை
பெண்களின் உதடுகள் உறிஞ்சுமாம்…
நோஞ்சான் பையன்களை
பயில்வான் மாணவர்கள் போட்டு அடிப்பார்களாம்…
கேள்வியுற்றவைகளை நினைத்தபடி
நான் என்ன செய்வேன்
கொஞ்சமும் முதிர்ச்சியற்று,
உன் கரம் பற்றி
உன் வகுப்பறைகளுக்கு கூட வந்து
உன்னுடன் இருந்து, நீ பேசாதபோது ‘அவர்களுக்கு’ விளக்கம் சொல்லி,
உனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொல்லி, நீ நன்றாக வரைவாய் என்று சொல்லி,
உன்னுடன் எல்லோரும் ஏன் நண்பர்களாக வேண்டும் என்று சொல்லி… இன்று முழுதும்
இனி ஒவ்வொரு நாளும் உன்னுடன் கூடவர விரும்புகிறேன், உனக்குப் பாதுகாப்பாய், உனது பலமாய்…
கொடியவர்களே! ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்.
நொடிக்கொருதரம் பாத்துப் பாத்து, பொத்தி பொத்தி வளர்த்த என் மகவை, என்னைப் போல கவனிப்பீர்களா? அவனருகாமையில் செல்கையில் உங்களது வாகனங்களின் வேகத்தை தயவுசெய்து குறைப்பீர்களா? மேலும்,
அவனுடைய ஆண் குறியை, சிறந்த ஓவியனுக்குரிய அவனது கரங்களை, அவனது அலட்சியத்தை
அவனதழகிய விழிகளை தயவு செய்து துவம்சம் செய்யாதிருப்பீர்களா?
அவன் அன்பால் மூடப்பட்ட குழந்தை.
உலகைப் புதிப்பிக்க போகிற இன்னொரு உயிரம். பேராபத்துகளை வெல்கிற வயதை அவன் அடையவில்லையே…
அலட்சியமாக வளர்ந்துவிட்டான்.
*
பொடிச்சியின் வ்லைப்பதிவிலிருந்து நன்றியுடன் இந்தப் பதிவை மீள்பிரசுரிக்கின்றேன். எழுதியவர் தனது பெயரை வெளியிடவிரும்பவில்லை என பொடிச்சி முன்பு ஒருமுறை கூறியிருந்ததாய் நினைவு. இதைவிட ஒரு அருமையான கவிதையை எழுதி, இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது தாயாருக்கு பரிசாகக் கொடுத்துவிடவும் முடியாது.

1 comment:

பின்னூட்டங்கள் said...

1
தங்கமணி says:
March 9th, 2006 at 3:43 am edit
உங்கள் அம்மாவுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்! வாழ்த்துகள்!
2
டிசே தமிழன் says:
March 9th, 2006 at 8:44 am edit
தங்கமணி, வாழ்த்துக்கு நன்றி.
3
Flying_Dragon says:
March 9th, 2006 at 10:29 am edit
உங்கள் அம்மாவுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்!
Happy B’Day to her.
4
சன்னாசி says:
March 9th, 2006 at 10:52 am edit
முன்பு படிக்கையிலேயே பிடித்திருந்த கவிதை. உங்கள் தாயாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
5
Snegethy says:
March 9th, 2006 at 11:35 am edit
Ammavuku pirantha naal vaalthukal DJ.Kavithai maadum kuduthu eematha mudiyaathu :-)
6
ராம்கி says:
March 9th, 2006 at 11:49 am edit
அம்மாவுக்கு அன்பும் வாழ்த்துக்களும்..
7
டிசே தமிழன் says:
March 9th, 2006 at 12:22 pm edit
அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.
….
//Kavithai maadum kuduthu eematha mudiyaathu//
சினேகிதி, அதுதானே பூக்களின் படம் போட்டிருக்கின்றேனே :-).
8
Mathy Kandasamy says:
March 9th, 2006 at 12:39 pm edit
என்னுடைய வாழ்த்தை நேரில் தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன் டீசே. :)
கவிதை: பொடிச்சி எடுத்திட்ட கவிதைகளில் மிகவும் பிடித்த கவிதை. எடுத்திட்டமைக்கு நன்றி!
-மதி