Friday, September 22, 2006

அவளுக்காய் ஒரு மழைப்பொழுதில் எழுதியவை

(Tuesday, May 9th, 2006 at 11:38 am )

பசுமை விரித்த புல்வெளியில்
மஞ்சளாய் பூத்திருக்கிறது
நேசம்
வலசை போய்
மரங்களில் வந்தமரும் பறவைகளின்
சிறகில் மிதக்கின்றன
எல்லைக்கோடில்லா
நிலப்பரப்புக்கள
மதியப்பொழுதில்
பெயரறியா நிலப்பரப்பை
உதிர்க்கும் பறவை
எனக்காய் விட்டுப்போகின்றது
நெடுந்தூரப்பிரிவின்
வாதையை.
……………………..
எழுதிமுடிக்கும்
என் ஒவ்வொரு வாக்கியத்திலும்
தெறிக்கிறது இரத்தம்
என்கிறாய
மழைபொழிந்து
குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய
நிலப்பரப்பை
குருதியலைகள் மூர்க்கமாய்
கரைத்துக்கொண்டிருக்கின்றத
ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்ததையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை.
……………………
சிறு பாலம்
நேற்றுப் பெய்த மழையில்
சிலிர்த்தபடி பாயும் சிற்றாறு
வெறுமையைக் கசியவிடுகின்ற
மரப் பெஞ்(சு)
வெயிலில் காய்ந்தபடியிருக்கும்
இரண்டு ஊஞ்சல்கள்
ஓடித்திரியும் முயல்கள்
இவற்றுடன் கூடவே நான
பருவங்கள் மாற மாற
காத்திருக்கின்றோம்.
இயற்கை:
ஒதுக்கிவைப்பதில்லை அகதிகளை
நேற்றுவரை என்னசெய்தாய் யென்றும்
கேள்விகளைக் கேட்பதுமில்லை
நீ இயற்கை
(அல்லது என்னோடு எப்போதும் இருப்பவள்).
……………
நகரம் பிதுக்கித்தள்ளுகிறது
தனக்கான அவதிகளினூடு
என்னையும
ஒரு செர்ரிப்பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள
நான் ஓடவேண்டும்
அல்லது ஓடிக்கொண்டிருப்பதாய்
நடிக்கவாவது தெரிந்திருக்கவேண்டும
நகரம்
ஏற்றுக்கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்.
நீயொரு
மரம் நடமுயல்கின்றாய்
எனக்குள
தரிசாகிக்கொண்டிருக்கும் மனதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது.
…………
வாசித்து முடிக்கா
புத்தகங்கள்….
எனக்குள்
கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்றா
பதட்டத்தை உருவாக்கின்ற
தேநீரருந்திக்கொண்டிருக்கும் ஓர்பொழுதில்
என்றென்றைக்குமாய்
முடிந்துவிடா பிரதியாய்
நமது இருப்பு
நீளவேண்டுமென்கிறாய
ஒரு புத்தகத்தையே
சுவாரசியமாய் வாசிக்கத்தெரியாதவன்
உயிருள்ள பிரதியை…..?
உன் விரல்கள்
பற்றியிருக்கும்
என் கரம் நடுங்குறும்
குற்றவுணர்வு இன்னும் கூடி.
……….
ஒரு காதல்சோடி
கடந்துபோன பாதையில் நடக்கத்தொடங்கும்
ஒருவன் - இன்று
யாரோடு முரண்படுவது
யாருக்கு முகத்தைத் திருப்பிக்காட்டுவது எனும்
நாளாந்த பட்டியலை மறந்துவிடுகின்றான
முடிதிருத்துபவனின்
கத்தரிக்கோல்விரல்கள்
சிருஷ்டிக்கும் கலைதேடி
வெயிலின் விழிகளும்
கண்ணாடிதாண்டி நீளும
ஆண்களுக்கான சலூனில்
தற்செயலாய் நுழைந்துவிடும்
ஒரு பெண்
எல்லா ஒழுங்கையும்
கலைத்துவிட்டுச் செல்கின்றாள்
நினைவு ஒருபறவையாகி
உன்னைச்சேருமிக்கணத்தில்
ஒரு நட்சத்திரம் உன் கூந்தலில்
அமரட்டும்.

1 comment:

Anonymous said...

15 Responses to “அவளுக்காய் ஒரு மழைப்பொழுதில் எழுதியவை”
1
MixEdApe says:
May 9th, 2006 at 2:32 pm edit
/ஆண்களுக்கான சலூனில்
தற்செயலாய் நுழைந்துவிடும்
ஒரு பெண்
எல்லா ஒழுங்கையும்
கலைத்துவிட்டுச் செல்கின்றாள்/
இது தொட்டுவிட்டது. (இதை வைத்தே ஒரு விளம்பரம் அமெரிக்கத்தொலைக்காட்சியிலே ஓடும்).
கவிதையின் மிகுதிக்கான கருத்து: தம்பிக்கு இப்போதைக்கு அவசரமாகக் கல்யாணம் கட்டிவைக்கவேணும்.
/ஆண்களுக்கான சலூனில்
தற்செயலாய் நுழைந்துவிடும்
ஒரு பெண்
எல்லா ஒழுங்கையும்
கலைத்துவிட்டுச் செல்கின்றாள்/
…. ஆண்களுக்கான ‘பாத்ரூமில்’
வேண்டுமென்றே நுழைந்துவிடும்
ஒரு பெண்
Just Kidding இலோ Girls Bahaving Badlyலோ
காட்சி பதிந்துகொண்டு செல்கிறாள்
:devil2:
2
yaro says:
May 9th, 2006 at 2:33 pm edit
//அவளுக்காய் ஒரு மழைப்பொழுதில் எழுதியவை //
அவள் இப்ப எங்க?
:ninaippu:, :dj:
3
Flying_dragon says:
May 9th, 2006 at 2:58 pm edit
சூப்பரப்பு!!!
//சிறு பாலம்
நேற்றுப் பெய்த மழையில்
சிலிர்த்தபடி பாயும் சிற்றாறு
வெறுமையைக் கசியவிடுகின்ற
மரப் பெஞ்(சு)
வெயிலில் காய்ந்தபடியிருக்கும்
இரண்டு ஊஞ்சல்கள்//
எங்கேயோ பார்த்த காட்சி ஒன்று நினைவுக்கு வந்து போனது.
வேண்டாம் வேண்டாம் கமர்கட்டு
வேண்டும் வேண்டும் கால்கட்டு! :clown:
4
Flying_dragon says:
May 9th, 2006 at 3:00 pm edit
//Just Kidding இலோ Girls Bahaving Badlyலோ
காட்சி பதிந்துகொண்டு செல்கிறாள்//
பார்த்தது போதும், அந்த டிவிடையை எனக்கு அனுப்புங்கோ :devil1: , :devil2: ,
5
சின்னக்குட்டி says:
May 9th, 2006 at 4:43 pm edit
//நகரம்
ஏற்றுக்கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்.//
உண்மை தான் /ஆண்களுக்கான சலூனில்
தற்செயலாய் நுழைந்துவிடும்
ஒரு பெண்
எல்லா ஒழுங்கையும்
கலைத்துவிட்டுச் செல்கின்றாள்/
ஏனுங்க…………
6
பாலாஜி-பாரி says:
May 9th, 2006 at 4:51 pm edit
நன்று.
7
KanaPraba says:
May 9th, 2006 at 6:07 pm edit
இதை…இதை… இதைத்தான் எதிர்பார்தேன்:-)
இப்படியான நல்ல கவிதைகள் பிறப்பதற்காக நிறையபேர் காதல் தோல்வியடைய வாழ்த்துக்கள்.
8
கிஸோ says:
May 9th, 2006 at 7:26 pm edit
அருமையான வரிகள்…புத்தகங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துபோன பொழுதிலும்…
9
டிசே தமிழன் says:
May 9th, 2006 at 9:27 pm edit
/தம்பிக்கு இப்போதைக்கு அவசரமாகக் கல்யாணம் கட்டிவைக்கவேணும்/
என்று சொல்லும் அண்ணாவே,
/’வேண்டும் வேண்டும் கால்கட்டு’/
என்று துடிக்கின்ற இந்த ப்ளையிங் ட்ராகன் தம்பிக்கு தாங்கள் ஒரு மஞ்சள் கயிற்றையோ அல்லது ஆகக்குறைந்தது வரப்போகும் பெண்ணிடம் ஒரு மூக்கணாங்கயிறையோ கொடுத்து அனுப்பிவைத்தால், நானும் இன்னும் நான்குவரி நிம்மதியாய் இங்கே எழுதலாம் :-).
….
/அவள் இப்ப எங்க?/
&
/நிறையபேர் காதல் தோல்வியடைய வாழ்த்துக்கள்./
‘யாரோ’வும், கானா பிரபாவும் சந்தடிசாக்கில் தங்களின் ‘அவளை’த் தேடுவதால் நான் உங்களை முன்னே செல்லவிட்டு வழியொதுங்கி வாழ்த்தி நிற்கின்றேன் :-).
….
சின்னக்குட்டி, பாலாஜி-பாரி மற்றும் கிஸோ நன்றி
10
yaro says:
May 10th, 2006 at 6:05 pm edit
//யாரோ’வும், கானா பிரபாவும் சந்தடிசாக்கில் தங்களின் ‘அவளை’த் தேடுவதால் நான் உங்களை முன்னே செல்லவிட்டு வழியொதுங்கி வாழ்த்தி நிற்கின்றேன் :-).//
ஓம் ஓம் பரந்த உள்ளம் விரிந்த சிந்தனை…. எவ்வள்வு காலத்துகளை அப்பு உப்பிடி சொல்லி காலம் தள்ள போறியள்…
11
டிசே தமிழன் says:
May 10th, 2006 at 8:52 pm edit
/ எவ்வள்வு காலத்துகளை அப்பு உப்பிடி சொல்லி காலம் தள்ள போறியள்… /
அவனவன் எல்லாம் யார் மார்க்கண்டேயர் ஆவது என்று அடிபடும்போது எனக்கு மட்டும் உந்த ‘ஆசை’ வரக்கூடாதா என்ன :-)?
12
annon says:
May 14th, 2006 at 11:06 pm edit
ஆண்களுக்கான சலூனில்
தற்செயலாய் நுழைந்துவிடும்
ஒரு பெண்
எல்லா ஒழுங்கையும்
கலைத்துவிட்டுச் செல்கின்றாள்
That is why i prefer unisex salon :)
13
Kannan says:
May 15th, 2006 at 8:58 am edit
சும்மா, உந்த ‘DJ’ smiley எப்படி வாரதெண்டு பாக்க; அப்புறம் இதையெல்லாம் படிச்சனான் எண்டும் சொல்ல…
:dj:
14
annon says:
May 15th, 2006 at 11:06 am edit
:),
15
டிசே தமிழன் says:
May 15th, 2006 at 2:39 pm edit
anon :-)
…..
கண்ணன், விரைவில் ஈழத்தமிழரின் பேச்சு வழக்கிற்கு வந்துவிடுவியள் போலக் கிடக்கிறது :).