Tuesday, September 26, 2006

நண்பகல் தாண்டி
நீளும் துயிலில்…
இழந்து வந்த ஊரை
துருவக்கரடி
பன்றியிறைச்சியாய் கடித்துக்குதறும்
கனவு முளைக்கும
ஒரு போராளி
ஏதேனுமொரு ஒழுங்கையின் திருப்பத்தில்
சந்தித்துவிடும் எதிரியைப்போல
தொலைபேசி அழைப்பு
திடுக்குறச் செய்கிறது
துயில் கலைத்த
வெளியே தோட்டத்தில்
அரும்பிக்கொண்டிருக்கும்
தக்காளியினதும் ஸ்ராபெரியினதும்
மினுமினுப்பில்
கவிதைகளாகின்றன
அவளது கன்னப்பருக்கள
ஒத்த அலைவரிசையுள்ள
நண்பனுடன்
நெடுந்தூரம் பயணிக்கையில்
சுட்டெரிக்கும் வெயிலையும்
காரில் காத்திருக்கும் கணங்களையும்
கடந்துவிட முடிகின்றது
புத்தரின் சாந்தத்துடன
நீச்சல் தெரியாதவனையும்
வசீகரிக்கும் கடலை
காதலியின் ஈரவிதழ்களாய்
கவ்விக் களிக்க
மேற்கினில் மறையும்
சூரியன் நாணிச்சிவந்த
நீரில் ஊறவைத்த
உடம்பை
பச்சைமிளகாய்க கொத்துரொட்டி
துவட்டி விட
மதுவும்…
கடலளையும் நங்கையரின் மொழியும்…
நினைவுபடுத்தும்
பீத்தோவனின் எழுதிமுடிக்கா
இசைக்கோர்வையின் இதத்த
எல்லாம்
அற்புதமாய்த்தான் தெரிந்தன
பத்துவயதுப் பையன்
சுழியில் மூழ்கி
மூச்சிழந்த அந்த நொடிவர
கொலைகளை
ஆடையில் ஒட்டிக்கொள்ளும்
கடற்கரை மணலைப்போல
உதறித்தள்ளி நகர்ந்துகொண்டிருப்பவனுக்கும்
வலிக்கத்தான் செய்கின்றது
மரணம்
சிலவேளைகளில்.

1 comment:

டிசே தமிழன் said...

1
Thangamani says:
July 11th, 2006 at 11:55 am edit
//ஒதத அலைவரிசையுள்ள
நண்பனுடன்
நெடுந்தூரம் பயணிக்கையில்
சுட்டெரிக்கும் வெயிலையும்
காரில் காத்திருக்கும் கணங்களையும்
கடந்துவிட முடிகின்றது
புத்தரின் சாந்தத்துடன்//
Nice.
2
Flying_Dragon says:
July 11th, 2006 at 1:51 pm edit
டீசே இன்னொருமுறை ‘உங்கள்’ கவிதை! வாசிக்க நன்றாயிருக்கிறது.
//நண்பகல் தாண்டி
நீளும் துயிலில்…
இழந்து வந்த ஊரை
துருவக்கரடி
பன்றியிறைச்சியாய் கடித்துக்குதறும்
கனவு முளைக்கும
ஒரு போராளி
ஏதேனுமொரு ஒழுங்கையில்
சடுதியாய் சந்தித்துவிடும் எதிரியைப்போல
தொலைபேசி அழைப்பு
திடுக்குறச் செய்கிறது
துயில் கலைத்து
//
3
Chandravathanaa says:
July 11th, 2006 at 3:49 pm edit
கொலைகளை
ஆடையில் ஒட்டிக்கொள்ளும்
கடற்கரை மணலைப்போல
உதறித்தள்ளி நகர்ந்துகொண்டிருப்பவனுக்கும்
வலிக்கத்தான் செய்கின்றது
மரணம்
சிலவேளைகளில்.
சிலவேளைகளில் மட்டுந்தானா?
4
Chandravathanaa says:
July 11th, 2006 at 3:56 pm edit
உங்கள் கதைசொல்லியும் Gang fightsக்கும் கொமென்ற் எழுத முடியாதா?
இதை சில வருடங்களுக்கு முன்னர் எங்கோ வாசித்தேன். ஈழமுரசில் என்று நினைக்குpறேன்.
இது உங்கள் கதையா?
5
Padma Arvind says:
July 11th, 2006 at 8:11 pm edit
சில வேளைகளில் மட்டும் வலிக்கும் போதுதான் பயமாய் இருக்கிறது. கவிதையின் வரிகள் சொல்லும் கருத்துக்கள் உண்மை
6
டிசே தமிழன் says:
July 11th, 2006 at 11:45 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
….
/சிலவேளைகளில் மட்டுந்தானா? /
&
/சில வேளைகளில் மட்டும் வலிக்கும் போதுதான் பயமாய் இருக்கிறது./
சந்திரவதனா & பத்மா: எண்ணிக்கைக் கணக்கில் கொலைகளை தினமும் ஊடகங்ளில் வாசித்து வாசித்து மரத்துப்போகின்றவனுக்குக் கூட, மரணங்கள் சிலவேளைகளில் அதிர்ச்சியைத் தருகின்றது என்றுதான் குறிப்பிட விளைந்தேன். பத்மா குறிப்பிட்டதுபோல -அப்படியிருத்தல் கூட- அச்சத்தைத்தான் தருகின்றது.
7
டிசே தமிழன் says:
July 12th, 2006 at 8:03 am edit
/உங்கள் கதைசொல்லியும் Gang fightsக்கும் கொமென்ற் எழுத முடியாதா?
இதை சில வருடங்களுக்கு முன்னர் எங்கோ வாசித்தேன். ஈழமுரசில் என்று நினைக்கிறேன்.
இது உங்கள் கதையா?/
சந்திரவதனா, அந்தக் கதை(?)யை எழுதியது நானெறுதான் நினைவு :-). எழுதிய காலத்தில் -ஐந்து வருடங்களுக்கு முன்- நண்பரொருவர் பாரிஸிலிருந்து வரும் ஏதோ ஒரு சஞ்சிகையில் பிரசுரிப்பதற்காய் என்னிடம் வாங்கி அனுப்பியிருந்தார் (’அம்மா’வுக்கு என்று நினைக்கின்றேன்). ஈழமுரசிலும் வந்ததா என்று தெரியவில்லை. எப்போதோ எழுதப்பட்டது என்பதால்தான் பின்னூட்டம் எழுதப்படுவதை தடுத்து வைத்திருந்தேன். இப்போது அந்த optionஐ எடுத்துவிடுகின்றேன். நன்றி
8
Kannan says:
July 15th, 2006 at 12:14 am edit
:dj: ,
:nalla:
:cheers: ,
:)
9
டிசே தமிழன் says:
July 17th, 2006 at 1:56 pm edit
கண்ணன், நீங்களும் சிரிப்பான்/சிரிப்பிகளோடு விளையாடத் தொடங்கியாச்சா :(?