Tuesday, September 26, 2006

யுத்தமொன்றில் தோற்று
வீட்டுக்காவலை விரும்பித்தேர்கையில்
சாளரமும் சாலையோர மனிதர்களும்
நிறங்களை உதிர்த்து
கரைத்தனர்
நாட்களில் கரியவர்ணத்த
நினைவுக்கும் நனவுக்குமிடையில்
அலைந்து திரிந்து
கறுப்பும் வெளையுமாய்
ஒரு ஓவியத்தை
வரைய முயல்கையில்
நீ நுழைகிறாய்
ஒரு பாடல் வேண்டுமென்ற
அவ்வளவு எளிதல்ல
ஒரு பாடலை
உருவாக்குதல
நளினமான வரிகளும்
தெறித்துவிடா இசையும்
தேயிலையைப் பாலில் அளவாய் கலந்தாற்போல்
சுவைக்கின்ற குரலும்
நல்ல பாடலுக்கு அவசியம
மேலும்
தயாரில்லை நான்
வனப்புமிகு வார்த்தைகள்
இறுதியில்
குருதிதேய்ந்து
குரூரமாய் நகைப்பதை
சகித்துக்கொள்
‘தயங்காதே
தொடங்குக போரை
விழுப்புண் ஏற்குமுன் மேனியை
நெய்தோய்த்த என் கூந்தலால் தடவி
ஆற்றி அனுப்புவேன்
அடுத்த நாளும்..’
அலைவரிசைகளில் வந்து விழும்
தோற்றபோரின் முன்கேட்டகுரல்.
ஏற்கனவே
புதுப்பாடல்
புனையக் கேட்டு வந்தவர்களை
உதறித்தள்ளியது மாதிரி
உன்னையும்
ஆக்கியிருக்கலாம்
தொலைதூரத்துத் தாரகையாய்.
(2)
பின்னிரவில்
மயிலிறகு வீசி
மடியில் கிடக்கும்
பிரிவில்
பசலை படர்ந்து
வெம்பித் தவிர்க்கும்
சங்ககாலப் பெண்ணுமல்ல

போர்க்களத்தில்
வீசுகின்ற வாளாயும்
தாங்குகின்ற கவசமாயும்
மாறிவிடத்துடிப்பவளின்
மொழி கிள்ளிப் புனைவேன்
கவித
முடிக்கவேண்டிய ஓவியத்தின்
மீதிக் கோடுகள்
உன் இதழில் அசையக்கண்டபின்
சாளரம் உடைத்து
சாலையோர மனிதனுமாயினன்
நான்.


மாசி 24, 2006
ஓவியம்: Frida (Self-Portrait, 1929)

1 comment:

டிசே தமிழன் said...

1
டிசே தமிழன் says:
March 17th, 2006 at 11:05 am edit
நளினமான வரிகளும்
தெறித்துவிடா இசையும்
தேயிலையைப் பாலில் அளவாய் கலந்தாற்போல்
சுவைக்கின்ற குரலும்
நல்ல பாடலுக்கு அவசியம
இதை அனைத்தும் மீறி எழுதுபவரின் உணர்வும், சூழலும், ரசிப்பவரின் மன நிலையும் கூட முக்கியம் என நினைக்கிறேன்.நன்ற
By தேன் துள
தம்ப்ரீ… வயசு ராச
By Anonymous
(missed comments…DJ)
2
selvanayaki says:
March 17th, 2006 at 12:59 pm edit
மௌனமாயிருக்கும் மனிதர்கள் சிலசமயங்களில் நிறையச் சொல்லிவிடுவது மாதிரி மென்மையாய், அமைதியாய் இருக்கும் இக்கவிதைகளும் நிறையச் சொல்கின்றன டிசே. நன்றி. தொடர்ந்தும் கவிதைகள் எழுதி இடுங்கள்.
3
டிசே தமிழன் says:
March 17th, 2006 at 5:58 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
4
வசந்தன் says:
March 17th, 2006 at 6:53 pm edit
எனக்குத்தான் ஒரு பளாயும் விளங்கேலப் போல.
ஒருவேளை ‘சாமி’ எண்டதாலயோ?
எதுக்கும் என்ர ‘பிளவாளுமை’ விளக்கம் தருவாரெண்டு நினைக்கிறன்.
5
டிசே தமிழன் says:
March 19th, 2006 at 10:19 pm edit
//எதுக்கும் என்ர ‘பிளவாளுமை’ விளக்கம் தருவாரெண்டு நினைக்கிறன். //
சிட்னியில் இருக்கிற உமது பின்வாளுமையும் நீர் ‘கெதியாய்- கெரியாய்’ என்று ‘விளக்கிய’ விசரில் ஒளிந்து திரிந்துகொண்டிருக்கின்றார். பாவம் அந்தாளைவிடும், ஏதோ விசேசத்திற்காய் June R பார்த்துக்கொண்டாவது சந்தோசமாய் இருக்கட்டும்.
6
maram says:
March 19th, 2006 at 11:04 pm edit
//யுத்தமொன்றில் தோற்று
வீட்டுக்காவலை விரும்பித்தேர்கையில்
சாளரமும் சாலையோர மனிதர்களும்
நிறங்களை உதிர்த்து
கரைத்தனர்
நாட்களில் கரியவர்ணத்தை//
நினைத்துப்ப் பார்த்தேன் இப்படி நடந்தால் எப்படி இருக்குமென !!.
//அவ்வளவு எளிதல்ல
ஒரு பாடலை
உருவாக்குதல்//
ம்??.
7
டிசே தமிழன் says:
March 20th, 2006 at 10:10 am edit
//ம்??. //
மரம், நல்லவேளை ‘ம்’ என்று கேள்விக்குறியோடு மட்டும் விட்டுவிட்டீர்கள். அப்படியா!! என்று ஆச்சரியக்குறி எதுவும் போட்டு என்னைச் சிக்கலில் மாட்டாததற்கு நன்றி.
8
செந்தூரன் says:
March 21st, 2006 at 7:30 am edit
அகத்தின் அடியிலிருந்து எழுகின்ற அகத்தின் ஓசை அருமை. கவிவரிகளில் கலைக்கு வறுமை.. ஆனால் கனத்தில் நிறைவு. கவிதைகளில் என்னைக் கவர்ந்தீர்கள். நன்றி.
9
டிசே தமிழன் says:
March 21st, 2006 at 11:28 pm edit
செந்தூரன் பின்னூட்டத்துக்கு நன்றி.