Tuesday, September 26, 2006

Thursday, June 1st, 2006 at 10:38 am

By டிசே தமிழன்
மதுக்குவளையின் விளிம்பிலமர்ந்த
எலுமிச்சையாய்
நிலவு மிதக்குமோர் பொழுதில்
ஒப்பனைகள் நீக்கி
மன்னிப்புக்கேட்கத் தொடங்குகின்றேன்
சட்டகங்களுக்குள் அகப்பட்டிருக்கும் மனிதர்களின்முன

வெளியே
இன்னமும் உருகிவழியும்
வெம்மையைத் தவிர்க்க
ஏசி நிறையுமென் அறையினுள்
நுழைகின்றான்
இவான் எனுமொரு சிறுவன

வெறுமையையும் முடிவிலா கவலையையும்
அறையினுள் அலையவிட்டு
மேசையில் குழந்தையொன்றின் குருதிதோய்ந்த உடலை
வெறித்துக்கொண்டிருப்பவனைக் கண்டு
பதட்டம் நிரம்புகிறது அவனது விழிகளில

குழந்தைமையை
அவன் தொலைத்துவிடாதிருக்கும்
கவனத்துடன் கரம்பற்றி
நடக்கத்தொடங்குகின்றோம்
கோரையும் நாலுமணிப்பூக்களும் நிறைந்த வரம்புகளினூட

வயல்கள் முடிந்து
பிள்ளையார் கோயில் முளைக்க
ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருக்கின்றாய்
கேணியின் மூன்றாவது படியில்

விலத்திக்கொண்டு
போக நினைப்பதெல்லாம்
பிணியாய் ஒரு சுழலில்
சிக்கவைத்துக்கொண்டிருக்கும் அவலத்தை
உடைந்த கண்ணீர்த்துளியொன்றின்
உப்புக்கரிப்புடன் பகிர்கையில்…
செய்வதறியாது திகைத்து
என்னை ஆரத்தழுவ வருமுன்னை
அதிகாரம் குறுக்கிடுகிறது
அன்றைய பொழுது அஸ்தமித்துவிட்டதென்ற
வந்த இவான்
இடையில் எங்கே போனான்
என்ற பதட்டத்துடன்
நாம் வீடு திரும்புகையில்
முன்னர்
மேசையிலிருந்த குருதிதோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது
நெஞ்சில் ஆணிகளாய் அறைகிறத
குழந்தைகள் தொலைந்துகொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க்கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்.

1 comment:

டிசே தமிழன் said...

1
Flying_drangon says:
June 1st, 2006 at 11:39 am edit
கருத்து சொல்லப்பட்டவிதம் மிகவும் அருமை!
2
சாந்தகுணசீலதேவன் says:
June 1st, 2006 at 2:20 pm edit
குழந்தைகள் தொலைந்துகொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க்கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்..
நண்பரே நீவிர் தொட்டிருக்கும் இடம் இது.
3
selvanayaki says:
June 1st, 2006 at 4:23 pm edit
///குழந்தைகள் தொலைந்துகொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க்கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்.. ////
வலியும், நெகிழ்வுமாய் இருக்கிறது டிசே இவ்வரிகளைக் கடக்க. எனக்குப் பிடித்த உங்களின் கவிதைகளுள் இதுவும் ஒன்றாகக்கூடும்.
4
யாரோ says:
June 1st, 2006 at 4:26 pm edit
அருமை!
5
டிசே தமிழன் says:
June 2nd, 2006 at 7:53 am edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
6
Crescent Moon says:
June 2nd, 2006 at 9:07 am edit
///குழந்தைகள் தொலைந்துகொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க்கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்.. ////
DJ.., it’s not always like that..
nesikkirathu enpathu.. it’s like giving birth again.. for people who’re born in such a country.. n who lives in such a world with all those cruelties.. it might be the only way of escape..
;-)
7
Padma Arvind says:
June 2nd, 2006 at 10:36 am edit
குழந்தைகளை தொலைப்பதில் எல்லோருக்குமே பங்கு இருக்கிறது. அதுதான் பெரும்பாலான சமயங்களில் சினம் கொள்ள செய்கிறது.அதிலும் எதற்காக என்பதும் தெரியாமல் தொலைகிறார்களே என்பதும் உணராமல் போகும் போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் சொல்லவந்த கருத்தில் இருந்து விலகி போய்விட்டேனா என்று புரியவில்லை, ஆனாலும் என் சிந்தனை அங்கேதான்
8
செல்வராஜ் says:
June 2nd, 2006 at 11:32 am edit
டிசே, கவிதை நன்றாயிருக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. ஏன் நன்றாய் இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியுமா என்று இன்று மூன்றாம் முறையாகப் படிக்கிறேன்.
விவரிக்கிற காட்சிகளும், சொல்கிற கருத்துக்களும் கண்முன்னே கவிதையாய் விரிகின்றன. ஒரு வலியை உணர்த்துகின்றன.
9
டிசே தமிழன் says:
June 2nd, 2006 at 8:10 pm edit
Crescent Moon, நீங்கள் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் /it might be the only way of escape/ நேசம் என்பது இயல்பாய் அல்லவா இருக்கவேண்டும், ஒரு தப்பித்தலுக்காய் அங்கேபோகின்றோம் என்றால் அது இயல்பானது இல்லை அல்லவா? இயல்பாய் இருக்கவேண்டியதே இயல்பின்றிப்போய்க்கொண்டிருக்கின்றதே… என்ற அர்த்தத்தில்தான் மேலே குறிப்பிட விளைந்தேன். கருத்துக்கு நன்றி.
….
/ நீங்கள் சொல்லவந்த கருத்தில் இருந்து விலகி போய்விட்டேனா என்று புரியவில்லை/
பத்மா, அப்படியேதும் இல்லை. எல்லாக் கோணங்களிலும் யோசித்துப் பார்ப்பதுதானே எல்லா விடயங்களுக்கும் நல்லது.

செல்வராஜ், உங்கள் பின்னூட்டம் நெகிழ்வைத்தருகின்றது. நன்றி.
10
Madhunila says:
June 6th, 2006 at 11:50 am edit
நன்றாக இருக்கிறது. :)
11
maram says:
June 6th, 2006 at 8:58 pm edit
//வந்த இவான்
இடையில் எங்கே போனான்
என்ற பதட்டத்துடன்
நாம் வீடு திரும்புகையில்
முன்னர்
மேசையிலிருந்த குருதிதோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது
நெஞ்சில் ஆணிகளாய் அறைகிறது//
அவலத்தை அப்படியே காட்டுகிறது வரிகள்.
12
டிசே தமிழன் says:
June 7th, 2006 at 10:16 am edit
மதுநிலா, மரம் நன்றி.