Tuesday, September 26, 2006

ஏழு குறிப்புக்கள்

(1)
உன் விரல்கள்
வயலினை தொட்டகணத்தில்
மின்னல் தெறிப்பில்
வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கத் தொடங்கின
அறையெங்கும

தங்கள்பாட்டில் பறக்கும்
பூச்சிகளின் சுதந்திரம்
எனை உறுத்தி
சிறகுகளை பிச்சுப்போட
கொடுமை தாளாத
வயலின்
மலைப்பாம்பாகி
நெரிக்கிறது கழுத்த

கனவா என்று
விழிக்கின்றேன் நான்
இல்லை
நிஜந்தான் என்கிறது
என் வார்த்தை தினம் கொல்ல
உதிரும் உன் கண்ணீர்த்துளிகள்.

(2)
பதின்மங்களில் முகிழ்கையில்
எப்போது வளாகம் என்கிறார்கள்
வளாகத்தில் உலாவுகையில்
எப்போது வேலை என்கிறார்கள்
வேலையில் ஸ்திரமாகையில்
எப்போது கல்யாணம் என்கிறார்கள்
துணையுடன் பொழுதைக் கழிக்கையில்
எப்போது குழந்தைகள் என்கிறார்கள

அனைத்துக் கேள்விகளுக்கும்
விடையறியாது தவிப்பினும்
திருப்பிக் கேட்க
ஏதேனும் ஒரு கேள்வியையாவது
வாய்வசம் வைத்துக்கொள்ளுங்கள

அதுதான்
உறுதி செய்யும்
பிறருக்கு
வெறுப்பை ஊட்டி
உங்கள் இருப்பை.

(3)
குறிப்பிட்ட நேரத்தில் வேலை
குறிப்பிட்ட நேரத்தில் உறக்கம்
குறிப்பிட்ட நேரத்தில் கணணியின் முன்னமர்தல்

எல்லாம் ஒழுங்கு தவறாத இலயத்தில்
நிகழ்ந்துவிடுகின்ற
கொலைகளும் தான்.

(4)
திறக்கப்பட்ட
ஒரு புத்தகத்தின்
இரண்டு கதாபாத்திரங்களானோம்
நாம

தாபத்தோடும்
நேசத்தோடும்
வக்கிரங்களோடும்
சுவாரசியமாய் நகர்ந்தது கத

மூடிவைக்கப்பட்ட புத்தகத்தின்
முடிவு
இப்போது நினைவினில்ல
திரும்ப
பக்கஙகளுக்குள் நுழையவும் முடியாது
வாசித்து முடிக்கையில்
இருந்த உணர்வு
கண்ணீரா உவகையா என்றும் தெரியாத

அவதி
காதல்.

(5)
விடுதலைப் போராட்டங்கள்
அற்புதமானவ

எனக்கான உலகம் விரிந்தபோது
எல்லாப் புரட்சிகளின் பின்னும்
இரத்தம் படிந்த வரலாறு
மினுங்கியது வலித்தத

இயல்பாய் ஏற்பதா
எதிர்த்துக் கேள்வி கேட்பதா
திணறித் தவிப்பினும்
புரட்சிகள் அவசியமென்பதை
உரத்துக் கூறுவதில்
உறுத்தல் எதுவுமில்ல

அவலமும் குரூரமும்
சுவடுகள் பதிக்கா
ஒரு புரட்சியை
எவரேனும் ஒருவர் நிகழ்த்திக் காட்டுகையில்
தற்கொலை செய்துகொள்வார்
கடவுள்.

(6)
இப்போது
அதிகம் குடிக்கிறேன்
வீட்டுக்கும் குறித்த
நேரத்துக்குச் சென்று சேர்ந்துவிடுவதுமில்ல

சமூகம் மீதான
கோபமே
எனது குடியென்று
யாரேனும் ஒரு கவிஞன்
எழுதியிருக்கவும் கூடும

எனக்கு அப்படியில்லை;
கொண்டாடிக்கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றிவாழ முடியா
என் சுயத்தை
போதையுடன்.

(7)
குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள

87களில்
கொடுமிருளாய் துரத்திய
சம்பவங்களில்
எனது பிரார்த்தனை
என்றுமே வளர்ந்துவிடக்கூடாது
என்ப்தாய் இருந்தத

இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம்பெய்தபடி
இரவுகளை வெறித்துப்பார்க்கின்றனவோ…?

(நண்பன் கார்த்திக்கிற்கு)
(Thursday, June 15th, 2006 at 9:54 am)

1 comment:

இளங்கோ-டிசே said...

1
சாந்தகுணசீலதேவன் says:
June 15th, 2006 at 10:03 am edit
குறிப்பிட்ட நேரத்தில் வேலை
குறிப்பிட்ட நேரத்தில் உறக்கம்
குறிப்பிட்ட நேரத்தில் கணணியின் முன்னமர்தல
எல்லாம் ஒழுங்கு தவறாத இலயத்தில்
நிகழ்ந்துவிடுகின்ற
கொலைகளும் தான்.
:shy:
2
selvanayaki says:
June 15th, 2006 at 11:13 am edit
நல்ல கவிதைகள்.
3
டிசே தமிழன் says:
June 15th, 2006 at 8:09 pm edit
நன்றி.
4
ஷ்ரேயா says:
June 15th, 2006 at 8:44 pm edit
என்னளவில் ஒவ்வொன்றும் கதை சொல்லிப் போகிறது டிசே. குறிப்பாக 2, 3 & 7.
(6) - :kelvi: ஐந்தாம் முறையாகத் திரும்ப வாசிக்கோணும்.
5
டிசே தமிழன் says:
June 16th, 2006 at 2:30 pm edit
/(6) - ஐந்தாம் முறையாகத் திரும்ப வாசிக்கோணும்./
ஷ்ரேயா, இப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டாம். ஒரேயொருமுறை தாகசாந்தி செய்தால் எல்லாம் ‘தெளி’வாகும் :-).
……
பின்னூட்டத்துக்கு நன்றி.
6
maravantu says:
June 17th, 2006 at 10:41 am edit
I like the poems 1,2,4 & 6
enrum anbagalaa
maravantu
7
டிசே தமிழன் says:
June 17th, 2006 at 9:23 pm edit
பின்னூட்டத்துக்கு நன்றி ‘மரவண்டு’ கணேஷ்.
8
கார்திக்வேலு says:
June 17th, 2006 at 10:25 pm edit
சிறப்பாக அமைந்துள்ளது டிசே.
வடிவம் நன்கு அமைந்து வந்துள்ளது
இன்னும் கூட வார்த்தைகளில் உங்களுக்கு கூர்மை வரும்.
//மூடிவைக்கப்பட்ட புத்தகத்தின்
முடிவு
இப்போது நினைவினில்லை//
//அவலமும் குரூரமும்
சுவடுகள் பதிக்கா
ஒரு புரட்சியை
எவரேனும் ஒருவர் நிகழ்த்திக் காட்டுகையில்
தற்கொலை செய்துகொள்வார்
கடவுள்.//
//எனக்கு அப்படியில்லை;
கொண்டாடிக்கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றிவாழ முடியா
என் சுயத்தை
போதையுடன்.//
குறிப்பிடத்தகுந்த வரிகள்
9
pot"tea"kadai says:
June 17th, 2006 at 10:34 pm edit
நன்று!
இப்போதைக்கு அடிக்கடி 2ம், அவ்வப்பொழுது(அடிக்கடி?) 6ம் இறுமாப்போடு பொருந்தி வருகிறது.
10
டிசே தமிழன் says:
June 18th, 2006 at 8:33 am edit
கார்த்திக்வேலு & பொட்’டீ’கடை நன்றி.
….
/அவ்வப்பொழுது(அடிக்கடி?) 6ம் இறுமாப்போடு பொருந்தி வருகிறது./
பெயரில் ‘டீ’யை வைத்துக்கொண்டு இப்படிச் சொல்வது எல்லாம் நியாயமா பொட்’டீ’கடை :-)?
11
pot"tea"kadai says:
June 18th, 2006 at 10:30 am edit
“டீ”க்கடையில் சரக்கு வித்தா தானே தப்பு, ஆனா கடை மொதளாலி கல்லா கட்டிட்டு நல்லா :nalla: “குயில்” ஏத்தலாமில்ல…:-))
பேர்ல “pot” இருக்கறதுக்காக “pot” அடிக்க முடியுமா என்ன? ;)
12
யாரொ says:
June 18th, 2006 at 12:26 pm edit
//என் வார்தை தினம் கொல்ல//
இது இப்படி தானா வரும்.
எழுத்துக்களை எல்லாம் விரைவில் தொகுப்பாக்க முயற்சிக்கலாமே??
ஒவ்வொன்றும்
13
யாரொ says:
June 18th, 2006 at 12:29 pm edit
:nalla: nalla என்ன சிரிப்பான் வருகிறதென்பதற்கான சோதனை
14
டிசே தமிழன் says:
June 18th, 2006 at 6:45 pm edit
பொட்’டீ’ கடை :-)
……
—–//என் வார்தை தினம் கொல்ல//
இது இப்படி தானா வரும்.
எழுத்துக்களை எல்லாம் விரைவில் தொகுப்பாக்க முயற்சிக்கலாமே??
ஒவ்வொன்றும் ———
யாரொ, வார்தை என்பது வார்’த்’தை என்பதாய்த்தான் வந்திருக்கவேண்டும். வழமைபோல எழுத்துப்பிழைதான் (மாற்றிவிட்டேன்..நன்றி). /என் வார்த்தை ஒவ்வொன்றும் தினம் கொல்ல…/ என்றும் எழுதலாம்தான். கொஞ்சம் வார்த்தைகளைக் குறைத்துப்பார்க்கும் முயற்சியில்தான் அவ்வாறு மேலேயுள்ளவாறு எழுதினேன். நன்றி.
15
சுடர்விழி says:
June 26th, 2006 at 7:58 am edit
“பதின்மங்களில் முகிழ்கையில்
எப்போது வளாகம் என்கிறார்கள்
வளாகத்தில் உலாவுகையில்
எப்போது வேலை என்கிறார்கள்
வேலையில் ஸ்திரமாகையில்
எப்போது கல்யாணம் என்கிறார்கள்
துணையுடன் பொழுதைக் கழிக்கையில்
எப்போது குழந்தைகள் என்கிறார்கள்”
-நல்ல எதார்த்தம்…ரொம்ப அருமையான படைப்புக்கள்..
16
டிசே தமிழன் says:
June 28th, 2006 at 7:38 am edit
நன்றி சுடர்விழி.
17
Chandravathanaa says:
July 21st, 2006 at 4:58 am edit
ஆழ்ந்த கருத்துக்களோடு மிகவும் நன்றாக இருக்கின்றன கவிதைகள்.
நச்சென்று சிறிதாக இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரிய கதையைச் சொல்கின்றன.
18
டிசே தமிழன் says:
July 21st, 2006 at 9:11 pm edit
நன்றி சந்திரவதனா.