Tuesday, September 26, 2006

கனவு

கத்தரிப்பூ விளக்குகள்
இரவைப் பாம்பெனக் கவ்வுகையில்
ஜந்துதலை நாகத்தின் நாவுகளிலிருந்து
தீர்ந்துபோகா காமசூத்ராவின்
கடைசிப்பக்கங்களை வாசிக்கும்
தாகத்துடன் இறங்கிவரும்
தேவதைகளின் ஆடைகள்
மேற்கிலிருந்து தென்கிழக்குநோக்கி நகரும்
வால்நட்சத்திரங்களாய் ஒளிர்கின்றன
மதுவும் இசையும்
வர்ணக்கலவையாய் வயிற்றினிலிறங்கி
கால்களில் தீ பற்றியெரிந்து
சாத்தான்கள் முகமூடி கிழிக்க
மப்பும் மந்தாரமாய் மழை
பொழியத் தொடங்குகிறது
தேவதைகள்
நவீன ஓவிய ஒப்பனைகள்
கலைந்துவிடாதிருக்கும் சிரத்தையெடுப்பினும்
தமக்கான கிறுக்கலின்
தூரிகையைத் தெரிவுசெய்யும்
சுதந்திரவெளி
கனிகின்ற களிகாலத்தின் பெருமிதத்தில்
பூனைமயிரின் வேரினிலிருந்து
நறுமணத்தை பரவவிடுகின்றனர்
கால்களில்
பொஸ்பரஸ் எரிமலையாய்ப் பொங்கினாலும்
தூரிகையில் வர்ணந்தெளிக்கும் குறுகுறுப்புத்திரண்டாலும்
இளவரசிகளின் அனுமதியின்றி
கங்குகளை அணைத்துவிடமுடியாது
பெரியண்ணர்கள் கண்காணிக்கின்றனர்;
ட்ராகன்கள்
தேவதைகளின் வளைவுகளில்
யார் தூரிகையால் முதலில் வரைவதெனும் போட்டியில்
இடிகளை முழங்கச்செய்து
வாட்களை மின்னலாக்கிப் போரிட்டு
கசியும் இரத்தத்தைப் பனியில்
துடைத்துவிட்டு
மீண்டும் நெருப்புக்கங்குகளை
பெருமிதத்துடன் பற்றவைக்கின்றன
விடிகாலை
நான்கு நாற்பத்துமூன்றில்
தம் நெருப்பை
ஏதோ ஒரு கோட்டில் ஓவியமாக்க உடன்பட்டு
அணைத்துக்கொள்ளும்
தேவதையும் சாத்தானும்
தெருவோரத்தில் அநாதரவாய் உறைந்துநிற்கும்
காரின் கண்ணாடியை
வீடற்ற ஒருவன் தட்டுகின்றபோது
அவசர அவசரமாய்
மனித ஒப்பனைகளை
அப்பிக்கொண்டு நகர
எல்லாம் கனவெனச் சிதறும்.

பங்குனி 28, 2006

1 comment:

டிசே தமிழன் said...

1
flying_dragon says:
March 28th, 2006 at 1:06 pm edit
ட்ராகன்கள் :devil1: :Angel: தேவதைகளைத் துரத்தும் தேவையை கொஞ்சநேரம் ஒதுக்கிவிட்டு பெரியண்ணன்களோடு அளவளாவி அன்பைச் சம்பாத்திக்கொண்டால் எல்லாம் சுபமாய் முடியும்..
அது சரி ..வாரம் வெள்ளி இர வு தவறாமல் ஒரு கனவா? நனவா? :dj:
2
flying_dragon says:
March 28th, 2006 at 1:08 pm edit
ஒருவரி விட்டு ஒருவரி பொறுக்கி இரண்டுகவிதைகளாக் போட்டிருக்கலாம். :clown:
3
டிசே தமிழன் says:
March 28th, 2006 at 3:14 pm edit
ப்ளையிங்_ட்ராகன், நீங்கள் ப்ரதர்-இன்-லோக்களைப் பற்றிக் கவலைப்படுகின்றீர்கள் போலத் தோன்றுகின்றது :-).
/அது சரி ..வாரம் வெள்ளி இர வு தவறாமல் ஒரு கனவா? நனவா?/
இன்று செவ்வாய்க்கிழமையானப் பிறகும், வெளியே போன வெள்ளிக்கிழமை இன்னும் கனவிலோ நனவிலோ நிற்பது எனக்கா இல்லை உங்களுக்கா :)?
4
Filying_dragon says:
March 28th, 2006 at 4:35 pm edit
பொருத்தமில்லாத பின்னூட்டத்துக்கு மிகவும் பொருத்தமுள்ள பின்னூட்டம்..:cheers:
5
Brenden says:
April 1st, 2006 at 12:19 pm edit
:), :(, :p, :O, :rol:, :faint:, :dj:, :visil:, :doubt:, :ninaippu:, :clown:, :stop:, :q, :anti:, :adi:, :dance:, :elvis:, :kelvi:, :alien:, :nalla:, :che:, :shy:, :Angel:, :devil1:, :devil2:, :cool:, :cheers:, :devil1:
6
டிசே தமிழன் says:
April 1st, 2006 at 3:46 pm edit
பிரண்டன் ‘சார்’, உங்களுக்குத்தான் சிமிலிகளின் அருமை தெரிகிறது :-((((. அருகில் ஒரு பிரம்பு இருந்தால் ‘தேவலை’.
7
Mathy Kandasamy says:
April 1st, 2006 at 5:05 pm edit
ஆ!!! இதென்ன கூத்து. இண்டைக்கு மத்தியானம் அண்ணா வீட்டிலை டீசேக்கு என்னாச்சு, சில பேரின்ர காத்து (அ) காத்துக்கறுப்பு ஏதாவது அடிச்சிற்றோ எண்டு நினைச்சண்டு இந்தக் கவிதையைப் பார்த்தண்டு (கவனிக்க - பார்த்தண்டு) இருந்தனான். எனக்குப் பக்கத்திலை பெரியவர் உக்காந்திருந்தவர். இந்தச் சிரிப்பிகளை எங்கருந்து எடுத்தனீங்க எண்டும் கேட்டண்டு இருந்த ஆளிட்ட, உங்கடை அசின் பற்றிச் சொன்னோடன ஆரெண்டு தெரிஞ்சிற்றிது. நான் இங்கால வர துள்ளி விளையாடி இருக்கிறேன் போலக்கிடக்கு.. :che:
பிரம்பால நல்லாப் போடுங்க. என்னை மட்டும் விட்டிருங்கோஓஓஓ.. :O
8
டிசே தமிழன் says:
April 1st, 2006 at 10:17 pm edit
/இந்தக் கவிதையைப் பார்த்தண்டு (கவனிக்க - பார்த்தண்டு) இருந்தனான்./
நக்கல் கூடிப்போச்சு :q.

/பிரம்பால நல்லாப் போடுங்க/
அது பிரண்டனுக்கு அல்ல,அவருக்கு ஒழுங்காய் பிராக்குக்காட்டாத அத்தைக்கு இரண்டு கொடுத்தால் அவர் தானாய் திருந்துவார் :).