Tuesday, September 26, 2006

Pain is Power: Mixtape

‘We are losing control
We no-where to go
Bodies flying everywhere
We lost our homes
Screamin’ n crying’
…….
Run 4 ur LIFE’
சென்ற சனிக்கிழமை நீண்டகாலத்துக்குப் பிறகு வெளிநிகழ்வு ஒன்றுக்குப் போயிருந்தேன். இந்நிகழ்வு நான் இதுவரை சென்றிராத -ஆனால் பார்க்கவிரும்பிய- ஒரு வளாகத்தில் நடந்ததால் உற்சாகத்துடன் செல்ல, அந்த மாணவர்கள் ட்சுனாமிக்காய் நிதிசேர்ப்பதற்காய் இக்கலைநிகழ்ச்சியை நடந்துகின்றார்கள் என்று பிறகு அறிந்தபோது மனதுக்கு இன்னும் இதமாயிருந்தது.
இதற்கு முன், தமிழ் இளைஞர்கள் ராப்பர்களாக மாறவேண்டும் என்றும், இயலுமாயின் mixtape வெளியிடுவது மிகச் சிறந்தது என்றும் ஒரு பதிவில் எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அப்படி ஒரு mixtape, அந்நிகழ்வில் ராப் பாடல்கள் பாடிய நண்பர்களால் வெளியிடப்பட்டது என்னளவில் மகிழ்ச்சியாயிருந்தது.
Pain is Power என்கின்ற இந்த mixtapeல் பதின்நான்கு பாடல்கள் இருக்கின்றன. முதலாவது intro பாடல் திருக்குறளை தமிழ்லும் ஆங்கிலத்திலுமாய் ராப் இசைப்பின்னணியில் தவழவிட்டிருப்பது வித்தியாசமான முயற்சி. வழமையான தமிழ்ச்சினிமாப் பாடலுக்கான ஆறு ரீமிக்ஸ் பாடல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், M.I.A வின் அமேசன் பாடலுக்கான ரீமிகஸும் Kanye Westன் Jesus Walks மற்றும் Diamonds are Forever பாடலுக்கான ரீமிக்ஸும் அருமையாக இருக்கின்றன.

இந்த இசைத்தட்டைப் பற்றி பதிவாய் எழுதத்தூண்டியதுக்கு, இந்த இளைஞர்கள் தாங்களாகவே இசைகோர்த்துப் பாடிய பாடிய மூன்று பாடல்கள்தான் காரணம். ஒரு பாடல் ஈழத்துப் போர்க்கால வாழ்வைச் சொல்கின்றதென்றால், மற்றொரு பாடல் ட்சூனாமி அழிவையும், பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தைப் பற்றியும் கூறுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியும் உதவிகளும் இன்னும் வேண்டியிருக்கின்றது என்று நமக்கு அந்தப்பாடல் நினைவுபடுத்துகின்றது. Pain is Power என்கின்ற இந்தப்பாடலில். இடையில் இந்த இயற்கை அனர்த்தங்களின்போது வெகுசன ஊடகங்களில் கூறப்பட்ட செய்தித் துளிகளை இடைக்கிடை சேர்த்து, ஒரு பிரார்த்தனை போன்ற வடிவத்தில் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பாடல் ஈழத்தமிழர் பற்றிய புலத்தில் உள்ள stereo typed விசயங்களைக் (Yo, we are straight up man என்று ஆரம்பித்து) கேள்விக்குட்படுத்துவதுடன், ஈழப்போராட்டத்துக்கு தங்களைமாதிரியான இளைஞர்களின் ஆதரவு என்றும் உண்டென்றமாதிரி பாடல் நிறைவு பெறும். Little Empire, DJ LP போன்றோர் உட்பட பலர் இதில் பங்களித்துள்ளனர்.
நான் சென்றிருந்த கலைவிழாவிலும், தாங்களாகவே இசைகோர்த்த மூன்றுபாடல்கள் உட்பட வேறு சில (காதல் சம்பந்தப்பட்ட) பாடல்களையும் இந்த இளைஞர்கள் மேடையில் பாடியிருந்தனர் என்பதையும் குறிப்பிடவேண்டும். தொடர்ந்து இவர்கள் தமது சுவடுகளை இன்னும் அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் இந்தப் புலம்பெயர் மண்ணில் பதிக்கட்டும்.

(Tuesday, March 7th, 2006 at 10:59 pm )

1 comment:

டிசே தமிழன் said...

Flying_Dragon says:
March 8th, 2006 at 9:59 am edit
Yo, Where are the other songs? in net?
2
டிசே தமிழன் says:
March 8th, 2006 at 10:15 am edit
Cool down buddy. I just uploaded this song from their CD. I beleive they didn’t put their songs on the web yet.
3
Snegethy says:
March 9th, 2006 at 11:22 am edit
Samuthraganama DJ? paadalgalai inga poda mudinthal podungal.
4
Mathy Kandasamy says:
March 9th, 2006 at 1:18 pm edit
நடத்துங்கப்பூ நடத்துங்க. :cheers:
-மதி :ninaippu: :devil1:
5
MixEdApe says:
March 9th, 2006 at 2:02 pm edit
ப்ரோ
நல்ல வேலை பண்ணிருக்கீங்க. பாட்டுக்கும் அறிமுகத்துக்கும் சின்ன நண்ட
பிகு- அய்யோ! மதிமுகமான போட்டோல்லாம் போடுறாங்க பாருங்க. நீங்ககூட ஜெகூட்டணிலே சேந்தாச்சா? ஜேஜே!!
6
டிசே தமிழன் says:
March 9th, 2006 at 2:46 pm edit
//Samuthraganama DJ? //
இது என்னென்டு விளங்கவில்லை :(.
சினேகிதி, பக்கத்திலேயே புதையலை வைத்துக்கொண்டு, இசைத்தட்டு எங்கே கிடைக்குமென்று தேடக்கூடாது. உங்கள் வளாக தமிழ்க் கிளப்பின் கதவைத் தட்டுங்கள். இசைத்தட்டு தானாய்ச் சுழலும் :).
…..
மதி நீங்கள் போடுகின்ற similesயைப் பார்த்தால், நான் ஏதோ இந்த நிகழ்ச்சி முடிய, pubற்கோ அல்லது clubற்கோ போனது மாதிரிக் கிடக்கிறது :shy:. எது என்றாலும் நேரே வாங்கோ பேசித்தீர்ப்போம். இங்கே ‘மானத்தை’ Titanic கப்பல் மாதிரி கவிழ்க்கவேண்டாம் என்று மட்டும் வாஞ்சையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏப்பு இப்படி எல்லாம் ஆப்பு (or half) அடிக்கக்கூடாது :che:.
7
Mathy Kandasamy says:
March 9th, 2006 at 8:05 pm edit
:), :(, :p, :O, :rol:, :faint:, :dj:, :visil:, :doubt:, :ninaippu:, :clown:, :stop:, :q, :anti:, :adi:, :dance:, :elvis:, :kelvi:, :alien:, :nalla:, :che:, :shy:, :Angel:, :devil1:, :devil2:, :cool:, :cheers:, :devil1:
Peace! bro Peace!
8
pot"tea"kadai says:
March 9th, 2006 at 8:21 pm edit
பாட்டு நல்லாக்கீது!
எனக்கு அல்லா பாட்டும் கெடக்கிமா???
9
Snegethy says:
March 9th, 2006 at 8:26 pm edit
//Samuthraganama DJ? //
இது என்னென்டு விளங்கவில்லை .
DJ……enaku vantha mail in padi “Samuthraganam” antha nigalchi ku pear :-)
10
டிசே தமிழன் says:
March 9th, 2006 at 8:30 pm edit
மேலும் இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன…..enjoy it :dance:
11
MixEdApe says:
March 9th, 2006 at 8:47 pm edit
பாட்டுக்கு டாங்க்ஸுன்னே. ஆனா, இதுல எது ஒரிஜினல் முகமூடி எது மதிமூடி :che: பதில் சொல்லமாட்டன்னா வேணாம். ஆனா அந்த மூடிதான் இந்தமூடின்னு வாயப்பயக்கத சொல்லிடாதீங்க. ஏற்கனவே குஞ்சியழகும் குடும்பியழகும் கொயம்பி பிச்சிட்டே கெடக்குறான் சடையன் :faint:
12
டிசே தமிழன் says:
March 9th, 2006 at 9:09 pm edit
பொட்’டீ’கடை, முழுப்பாடல்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த மின்னஞ்சலை ( littleempire@ttb.ca) கேள்விகளுக்கும், விபரங்களுக்கும் தொடர்புகொள்ளத்தந்திருக்கின்றார்கள். மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்களேன்.
….
சினேகிதி, நிகழ்வின் பெயர் நீங்கள் குறிப்பிடுவதாய்த்தான் இருக்கவேண்டும். கடைசி நேரத்தில் நண்பன் ஒருவனோடு போனதால் நிகழ்வின் பெயர் தெரியவில்லை.
….
ஏப்பு குழம்பினாலும் குழம்பானாலும் King Kong யாய்த்தான் போய்முடியும், என்பதால் யாராவது விரைவில் சடையனுக்குப் பதில் அளித்து பித்தம் தெளிவிக்கவும். இல்லாவிட்டால் ரொமாண்டிக் பாட்டுப் பாடி ஏப்பை தூக்கத்தில் அமிழ்த்த Naomi Wattsஜ நான் தேடவேண்டியிருக்கும் :devil1:.
13
Mathy Kandasamy says:
March 9th, 2006 at 9:38 pm edit
ஏப்பண்ணை,
இதுதான் நம்ம ஒரிஜினல் மூஞ்சி
:devil2:
நல்ல மூடுன்னா, இதை எடுத்து மாட்டிக்குவேன
:dj:
ஹெஹெஹ
-மதி
14
MixEdApe says:
March 10th, 2006 at 12:49 pm edit
/இதுதான் நம்ம ஒரிஜினல் மூஞ்சி/
அப்போ அது மூஞ்சி இல்லே moonசீ!
:devil2:
பிகு. என்னன்னாலும் இதுக்கு அந்த நாலு பேர் கேட்ட நாலு இம்பார்மேசன் கொடுத்திருக்கலாமுன்னு தோணுது :devil1
15
டிசே தமிழன் says:
March 10th, 2006 at 3:18 pm edit
தான் உண்டு தன் ‘Client’ Eastwood உண்டு என்று சமர்த்தாய் இருக்கும் நமது அருமைச் சகோதரியுடன் தனவும் ஏப்பு, என்னை ‘தண்ணித்தொட்டி தேடிவந்த கழுதைக்குட்டியாக்கி’ வன்முறையாளன் :adi: என்ற பெயரை எடுக்கச்செய்யவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றேன்.
16
MixEdApe says:
March 10th, 2006 at 3:31 pm edit
ஷமிக்கணும் கர்த்தபஸ்வாமி.
பிகு. கழுதைக்குட்டியைக் க்ழுதைக்குட்டி என்று என்று எழுதும் உம்மைப் போன்றவர்களைப் பார்த்து நான் மௌனமாக என் நாக்குக்கும் தெரியாமலே சிரித்துக்கொள்கிறேன் என்பதையும் இங்கே படிவு செய்து சுண்ணாம்புபோட விரும்புகிறேன்:devil1:
17
MixEdApe says:
March 10th, 2006 at 3:36 pm edit
SueSoon SurrenderOn இன் ‘Client’ Eastwood ஆ இல்லை இன்ன்னிக்கு ஜெயில் போன Brad Renfro ஆ? சும்மா சடையனுக்கு வந்த சந்தேகமே :doubt:
18
டிசே தமிழன் says:
March 10th, 2006 at 3:45 pm edit
//கழுதைக்குட்டியைக் க்ழுதைக்குட்டி …//
அது கழுதைக்குட்டியாகி சிரிக்கும்போது அப்படித்தான் இருப்பேன் என்பதால் குற்றுப்போட்டனான் :p.
19
UK.T says:
March 13th, 2006 at 7:02 pm edit
Just want to get some more information about the guys who produced this mixtape. Im impressed and want to know whats the crew called etc. Unfortunately i can’t read Tamil. Please email me at UKTBA@hotmail.com. Thanks
20
டிசே தமிழன் says:
March 14th, 2006 at 8:28 am edit
Sorry. I don’t know anything about these guys beyond this mixtape. Why don’t you send a mail to this email id : littleempire@ttb.ca. Hope, they may answer to your questions soon.
21
UK.T says:
March 14th, 2006 at 6:19 pm edit
Chears mate…