Tuesday, September 26, 2006

தமிழியல் மாநாட்டை முன்வைத்து…

-அங்கும் இங்குமாய் சில (தனிப்பட்ட) குறிப்புக்கள்-

(1)
சென்ற வெள்ளியிலிருந்து தொடர்ந்து மூன்று நாள்களாய் ரொரண்டோவில் தமிழியல்: திணையும் தளமும் நிலையும் என்ற தலைப்பில் மாநாடு நடந்தேறியது. மூன்றாம் நாள் பிற்பகல் அமர்வில், ஈழத்து இலக்கியம்: படைப்பின் கவித்துவம், திறனாய்வின் நெறிமுறைகள், வெளியீட்டின் தொழில்நுட்பம் என்ற பிற்பகல் அமர்வில் நா.சுப்பிரமணியன், எம்.கண்ணன், வ.கீதா, தேவகாந்தன் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
பேராசிரியர் நா.சுப்பிரமணியன், ஈழத்து படைப்புக்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை முன்வைத்திருந்தாலும், ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் உலகத்தரமாய் உயர்ந்து நிற்கின்றது என்று கூறியது மிகவும் வியப்பாயிருந்தது. ஈழத்து இலக்கியம் 80களிலும், 90களிலும் தீவிரமாய் இயங்கிய தளத்திலிருந்து மிகவும் பின் தங்கி சோர்ந்த நிலையில் காணப்படுவதை இன்று தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் எந்தப்படைபாளியும் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகின்றேன். அதிலும் 2000களில் எஸ்.பொ முன்வைத்த கோசமான புலம்பெயர் இலக்கியந்தான் இனி தமிழ் இலக்கியத்துக்கு தலைமையேற்கும் என்ற கூற்று ஒரு நகைச்சுவையாகி நீர்த்துப்போய்விட்ட இன்றைய காலகட்டத்தில் இன்னும் இந்தப் பேராசிரியர் இப்படியான கருத்துக்களை முன்வைப்பது அபத்தமாய்த்தான் இருக்கின்றது. ஈழத்தில் இஸ்லாமியர்களின் படைப்புக்கள் தனித்துவமாய் துலங்குகின்றது என்று பேராசிரியர் வைத்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும், சோலைக்கிளியினதும், என்.ஆத்மாவினதும் கவிதைகள் ஒரு தனி முஸ்லிம் தேசியத்தை வேண்டி நிற்கின்றன என்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. முஸ்லிம்களை ஒரு தனித்தேசியமாக ஏற்றுக்கொள்வதில் என்னைப்பொறுத்தவரையில் மறுப்பு இல்லாதபோதும், சோலைக்கிளியின் அனேகமான தொகுப்புக்களை வாசித்தவளவில் அவரது கவிதைகள் தனித்தேசியத்தை வேண்டிப்பாடும் தொனியை எங்கேயும் காணவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
(ஆனால் அவரது மூன்றாம் மனிதன் நேர்காணலில் அவரது வேறொரு கோணம் வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ளவேண்டும்).
இவற்றுக்கப்பால் என்னை வசீகரித்த உரைகள் எம்.கண்ணனினதும், வ.கீதாவினதும் ஆகும். எம்.கண்ணன் ஆரம்பத்திலேயே, யாழ் விரிவுரையாளர் சனாதனனுக்கு கனடீய தூதகரத்தால் விஸா மறுக்கப்பட்டதற்கு எதிராக எந்தவொரு சின்ன முணுமுணுப்பைக் கூட மூன்று நாள்களாய் நடந்த அரங்கில் எந்த ஒரு அறிவுஜீவியாலோ பிறராலோ வைக்கப்படவில்லை என்பது தனக்கு மிகுந்த விசனத்தைத் தருவதாய் குறிப்பிட்டுத்தான் தனது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழக-ஈழ இலக்கிய உறவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன பற்றி மிக அருமையாக ஒரு உரையை வழங்கியிருந்தார். 1983 கலவரத்திற்கு முன், அவ்வவ்போது ஈழத்து படைப்பிலக்கியங்கள் தமிழகத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்தபோது அது ஒரு வெளிப்புறமாகவே வாசிக்கப்பட்டு தொடர்ந்து ஒருவித இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்திருக்கின்றது என்றும், இன்னும் 1983ம் ஆண்டின் கலவரத்தின் பின் ஈழத்து அரசியல் விளங்கிக்கொள்ளப்பட்டவளவுக்கு ஈழ இலக்கியம் நேர்மையான முறையில் அணுகப்படவில்லை என்பதை தெளிவாக தனது பேச்சில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். 90களின் பின் புலம்பெயர் சூழலால் வருகின்ற சந்தைப்படுத்தல் முறையினால் தமிழக பதிப்பகங்கள் புலம்பெயர் இலக்கியவாதிகளை அரவணைத்துக்கொள்ள, ஈழத்து/புலம்பெயர் இலக்கியவாதிகளும் அவர்களும் வலையில் விழுந்துகொண்டிருப்பது தனக்கு விசனம் அளிப்பதாய் கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ந்தும் ஈழத்துப்படைப்புக்கள், தமிழகத்தில் ஒரு சமனற்ற முறையில் தொடர்ந்து வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும்படுகின்றது என்பது ஒரு முக்கிய அவதானமாகும். ஈழத்து நிலப்பரப்பை, சூழ்நிலையை ஒரளவுக்காவது புரிந்துகொள்ளாமல், அந்தப்படைப்புக்களை எழுந்தமானமாய் வாசித்து விளங்கிக்கொள்ளமுடியாது என்று கண்ணன் கூறி சு.வில்வரத்தினத்தின் இரண்டு கவிதை வரிகளை உதாரணமாய் கூறினார். ஒரு கவிதையில் முடிகின்ற, ‘எனக்குள் ஆனையிறவு என்ற சொற்றொடரையும், ‘கொக்கட்டிச் சொலை காற்றில் சொல்லியது என்ன?’ என்று தொடங்குகின்றன இன்னொரு கவிதையையும் அதன் பின்னணியை ஒரளவாவது விளங்கிக்கொள்ளாமல் நேர்மையான வாசிப்புச் சாத்தியங்கள் தமிழ்நாட்டில் நடைபெற சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் ஆங்கில இலக்கியத்தையோ, பிரெஞ்சு இலக்கியத்தையோ அதன் பின்னணியை கொஞ்சமாவது விளங்கிக்கொண்டு வாசிப்புக்களை செய்கின்ற தமிழக இலக்கியவாதிகள் ஈழத்து படைப்புக்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அக்கறைகொள்வதில்லை என்று கண்ணன் கூறியது என்னளவில் முக்கியமாயிருந்தது.
கண்ணன் கூறிய இன்னொரு புள்ளிதான் முக்கியமானது. ஒவ்வொரு ஈழ/புலம்பெயர் படைப்பாளிகள் தாங்கள் தமிழகத்தில் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, ஒவ்வொரு படைப்பாளிக்கும் அறம் சார்ந்த விடயம் இருக்கின்றது என்றும் அதிலிருந்து எந்த படைப்பாளியும் இலகுவில் தப்பிவிடமுடியாது என்று கூறி காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களின் அரசியல் பின்னணிகளை மிக விரிவாக எடுத்துரைத்திருந்தார். காலச்சுவடுக்கும் தினமலருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றதெனவும், காலச்சுவடுக்கு விளம்பரங்கள் வழங்கி ஆதரவளிக்கும் சிறிராம் சிட்ஸ், கிருஸ்ணா ஸ்வீட்ஸ் போன்றவை தீவீர ஆர்.எஸ்.எஸ்காரர்கள் என்றும் இந்தப்பின்னணி தெரிந்துகொண்டு அரசியல் உள்ளுணர்வுடன் இயங்கவேண்டிய புலம்பெயர் படைப்பாளிகள் காலச்சுவடினூடாக தங்கள் படைப்புக்களை கொண்டுவருவது நியாயமாகாது எனவும் கூறியிருந்தார். அதேபோன்று தமிழினி வசந்தகுமாரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றும், தீவிர ஆர்.எஸ்.எஸ்காரான அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார் என்றும், அந்தவளவில் தமிழினியால் தொகுப்பு கொண்டுவந்த அ.முத்துலிங்கமும், காலச்சுவட்டுடன் நெருங்கிய தொடர்புடைய சேரனும் கேள்விகளுக்கு அப்பால் தப்பமுடியாது என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
வ.கீதா, ஈழத்துப்படைப்புக்களை மூன்றுவிதமான எல்லைகளுக்குள் பிரித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். முதலாவது பிரிவாய் நனவிடைதோயும் நினைவுகளுக்குள் ஈழத்துப் படைப்புக்கள் இருக்கின்றன எனவும், மற்றொரு வகையாய் தனது தமிழ் அடையாளத்தை ஈழத்துக்குள்ளும் புலம்பெயர் தேசத்திலும் தேடிக்கொண்டிருப்பதாயும், மூன்றாவது பிரிவாய் போராட்டம் குறித்ததுமான படைப்புக்களுமாய் இருக்கின்றன எனவும் வகைப்படுத்தியிருந்தார். ஈழத்து/புலம்பெயர் படைப்புக்களை கண்ணனைப் போல வ.கீதாவும் ஆர்வத்துடன் வாசித்து வருகின்றார்ர் என்பதை அவரது பேச்சினூடாக அறியமுடிந்தது. தமிழ் அடையாளம் என்பது தேவையில்லை என்று 90 களில் பேசத்தொடங்கிய ராஜ் கெளதமன் பிற்காலத்தில் பல்டியடிக்கத் தொடங்கி, புலமைப்பித்தனின் சாதித்திமிரையும், பாரதியின் மறைந்துகிடக்கும் இந்துத்துவம் குறித்தும் கேள்விகள் எதுவும் எழுப்பாது ஏற்றுக்கொள்வதையும் வெளிப்படையாக எடுத்துக்கூறியிருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள்/ஈழத்து அரசியல்/இலக்கியம் குறித்து இரண்டு விதமான போக்குகள் (புலிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று ஒருபுறமும், இன்னொரு புறம் புலிகள் தவறே செய்யாதவர்கள் என்றும்) மட்டுமே காணப்படுவதாயும், ஈழத்து அரசியலால் நேரடியாகப் பாதிக்கப்படாத தமிழகத்தவர்கள் ஏன் ஒரு நேர்மையான விமர்சனத்தை முன்வைக்க அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், பாலஸ்தீனிய அறிவுஜீவி எட்வேர்ட் சயீட்டைப் போல ஏன் நம்மால் இருக்கமுடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார் (தமிழகத்துக்கு மட்டுமில்லாது புலம்பெயர் தேசத்தில் உள்ள ஈழத்தமிழரும் இது குறித்து கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம்; அவசியமானதும் கூட). தொடர்ந்து ஈழத்து/புலம்பெயர் விமர்சனங்கள் உணர்ச்சி நிலையில் நின்று கொண்டிருப்பதால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை எனவும் அதைத் தாண்டி அறிவுபூர்வமான தளத்துக்கு நகரும்போது மட்டுமே உருப்படியான காரியங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளக்கூடியது. மேலும் பாலஸ்தீனியப் படைப்புக்களுக்கு நிகராய் வீரியத்துடன் யுத்த அவதிகளினூடாக வெளிவந்திருக்கும் சாத்தியமுள்ள ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் ஏன் நனவிடைதோய்தல்களுடன் மட்டும் தேங்கிப்போயிருக்கின்றன என்ற கேள்வியை, நமது ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் அனைவரும் தமக்குள் எழுப்புவது அவசியமாகின்றது. எதிரி, துரோகி என்ற வார்த்தைப் பிரயோகங்களைத்தாண்டி ஈழத்து/புலம்பெயர் விமர்சன முறைகள் நேர்மையான நடுநிலையான நோக்கில் நகரவேண்டும் என்று கீதா கூறியபோது என்னாலும் ஒத்துப் போகமுடிந்தது.
(2)
அண்மைக்காலமாய் மற்ற ஊடகங்களில் மட்டுமில்லாது வலைப்பதிவுகளிலும், புலிகளின் தரப்பு துரோகிகள் என்று கூறினால் புலியெதிர்ப்புச் செய்பவர்கள் பாசிஸ்ட் என்று நொய்ந்துபோன வார்த்தைப்போர் செய்துகொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை புலியெதிர்ப்பாளர்கள்/ சனநாயகவாதிகள் பற்றிய நம்பிக்கை பொய்த்துபோனது சென்ற ஆண்டு நடந்த சிவராமின் படுகொலையை அடுத்துத்தான். எனக்குத் தெரிந்த ‘நடுநிலை’ நண்பர்களில் பாதிப்பேர் இந்தப்படுகொலையை அறிந்து, முதலில் கூறியது சிவராம் புலியின் ஆள் ஆகவே அவரைப் போட்டுத்தள்ளியது பெரிய விடயமில்லை (இதேயேதான் புலிகளின் ஆதரவாளர்கள் துரோகிகள் என்று பிலாக்கணம் பாடும்போது இந்த நண்பர்களுக்கு கோபம் வருவது வேறுவிடயம்). மிச்ச நடுநிலைவாதிகள் கூறியது என்னவென்றால், சிவராம் முந்தி புளொட்டில் இருந்தபோது யாரையோ இரண்டு பேரை போட்டுத்தள்ளுவதற்கு உடந்தையாக இருந்தார் ஆகவே இந்தக்கொலை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றார்கள். அட நாசமாய்போனவர்களே ஒரு கொலை நடந்தால் முதலில் அனைத்து விமர்சனங்களைத்தாண்டி கண்டனத்தைச் சொல்லி முதலில் மனிதாபிமானத்துடன் இருக்க முயற்சி செய்யுங்களடா என்றுதான் மனதில் கூறிக்கொண்டேன். இவ்வாறான அதே காரணங்களைத்தான் புலிகள் மாற்று இயக்கதவர்களை போட்டுத்தள்ளும்போது புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வெளிச்சாயம் மட்டும் இந்த இரண்டு தரப்புக்கு வித்தியாசமே தவிர உள்ளுக்குள் இரண்டு தரப்புக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது பொதுவான ‘தமிழ்’ இரத்தம் போலும்.
இப்படி மேலும் சிலவிசயங்களில், புலிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாது இந்த ‘சனநாயகவாதிகளும்’ இருக்கின்றார்கள் என்று புரிந்துபோனதன்பின் ஒருவித சலிப்புத்தான் இவர்கள் மீது என்னளவில் வந்தது. மேலும் சிவராம் துவக்கோடு பாதுகாவலர்கள் சகிதம் பிற்காலத்தில் திரிந்தவரும் அல்ல. பேனா ஒன்றை வைத்து எழுதித்தள்ளியதே அவர் செய்த தவறு. இன்னமும் ராஜினி திரணகமவையும், சபாலிங்கத்தையும் போதும் போதும் என்று கிளிப்பிள்ளையாகும் அளவுக்கு விளாசித்தள்ளும் ‘நடுநிலையாளர்கள்’ இங்கே மட்டும் ஒளிந்துகொள்வதிலுள்ள அரசியல்/விமர்சனப்புள்ளிகள் சுவாரசியம் வாய்ந்தவைதான் (உடனே இப்படிச்சொன்னதால் மேலே சொன்னவர்களின் கொலைகளை ஒத்துக்கொள்கின்றேன் என்று விமர்சனக்கத்திகளுடன் நண்பர்கள் வராதிருக்க இறைவன் இரட்சிப்பாராக).
தனிமனிதராய் மட்டும் இருந்து, வெளிநாடு வந்து சுமுகமாய் வாழ்வதற்கு வசதி இருந்தும் (அல்லது நமது நடுநிலையாளர்களின் வாதத்தின்படி சொல்வதாயிருந்தால், வன்னியில் புலித்தலைமை பொங்கிப்படைக்க வெட்டி ஏப்பமிட்டு எழுதிக்குவிக்க வசதியிருந்தும்) தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும் ஒரு மனுசன் கொழுப்பில் இருந்திருக்கின்றான் என்றால் அவனின் மரணத்தை மரியாதை செய்யவேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தாற்கூட கேலிக்குரியதாக்கச் செய்யத்தேவையில்லை. அதே போல ஒரு மார்க்சியவாதி, சிவத்தம்பி பாஸிஸ்ட் என்று தொடங்கி ஒரு கட்டுரை எழுத சிரிப்போடு அரைகுறையாய் வாசித்துவிட்டு விலகிவந்தாயிற்று. (அடுத்ததாய் பாஸிஸ்ட் பட்டியலில் சிவசேகரம் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன). சிவத்தம்பியோடு, அவரது இலக்கிய/அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு. ஆனால் இன்றும் கொழும்பில் ஒரு இடர்பாடுடைய வீட்டில், அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால் நமது மனித விழுமியங்களின் அள்வீடுகள்தான் என்ன? இவ்வாறான பொழுதுகளில் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு, இவ்வாறான் ‘அறிவுஜீவிகள்’, ‘சனநாயகவாதிகள்’ புலிகளுக்குப் பதிலாக களத்தில் நின்றிருந்தால் எங்கள் மக்கள் நிலைதான் என்னவாயிருக்கும்? ஏதோ தன்ரை பாட்டில் இருக்கும் மனிதரை எல்லாம் பாஸிஸ்ட் என்று ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் நிகராய் எழுதிக்குவித்தால், இவர்களின் கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் இன்று புலம்பெயர் சூழலில் இருந்துகொண்டு ஒற்றைவரியாவது எழுதும் சுதந்திரம்கூட என்னைப்போன்றவர்களுக்கு இல்லாது போயிருக்குமோ என்ற அச்சந்தான் எனக்குள் எழுகின்றது.
மேலும் இன்னொரு புள்ளியையும் குறிப்பிடவேண்டும், (என்னால்) பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் விமர்சனத்தத்துவார்த்த கட்டுரைகளை ஒருபோதும் முழுதாய் ஆர்வத்துடன் வாசிக்கமுடிவதில்லை (எனது பலவீனமாயும் இருக்கலாம்). தங்களைத் தீவிர மார்க்சியவாதிகள் என்று பலர் எழுதும் ‘அரசியல் நடுநிலைக்கட்டுரைகளை’ விட எனக்கு சோபாசக்தி போன்றவர்களின் படைப்புக்கள் தரும் பாதிப்பும் மாற்றமும் அதிகமானது. உதாரணத்துக்காய், சோபாசக்தியின் தேவதை சொன்ன கதையில் வருகின்ற, விலைமாதராய் இருக்கும் பெண், ஒரு வியட்னாமிய போராளிப்பெண்ணின் மகள் என்று முடியும் இடமும், தேசத்துரோகியில் ரணில் விக்கிரமசிங்கவே வேசம்போட்ட ஒரு கடும் இனத்துவவாதி எனவும், அவரோடு புலிகளின் தலைமை நம்பிக்கை கொள்வதை கேலிசெய்வதுமாயும் முடியும் கதையும், அண்மையில் எழுதப்பட்ட ஒரு கதையில் பசியின் கொடுமையைச் சொல்லி இறுதியில் ஒரு (மாற்று) இயக்கத்தவனாய் இருந்து கடைசிச்சோற்றுக்கவளத்தை வாயில் வைக்கமுடியாமல் சினைப்பரடியில் இறந்துபோகின்றவனின் துயரை கசியவிடுகின்ற கதையும் தருகின்ற பாதிப்புக்களை என்னளவில் (தனிப்பட்டவளவில்) பத்துப்பக்கக் கட்டுரைகள் தருவதில்லை. ஜெயமோகனின் கட்டுரைகளின் அளவைப் பார்த்து அந்த மனுசன் எப்போது இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கட்டுரை எழுதுவார் என்று யோசிப்பதுண்டு. இப்போது அவர் அதிகம் எழுதாது அமைதியாயிருக்கும் காலத்தை நமது மார்க்சிய நண்பர்கள் குத்தகைக்கு எடுத்து எழுதித்தள்ளுகின்றார்கள் போலும். ஜெயமோகன் தனது கட்டுரைகளில் தன்னை எப்படியாவது ஓரிடத்திலாவது பீடத்தில் கொண்டு போய் அமர்த்திவிடுவதுபோல, இந்த மார்க்சிச நண்பர்களும் உலகத்து எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்க மார்க்சிசம் மட்டுமே ஒரே மாற்று மருந்து என்பதைக் குறிப்பிட ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
அண்மையில் கனடாவில் புலிகளைத்தடைசெய்தபோது பல ‘நடுநிலையாளர்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்ததாய் கேள்விப்பட்டிருக்கின்றேன் (’தேனீ’ தளத்தை வாசித்திருந்தால் நிறையத் தெரிந்திருக்கும். ஆனால் நான் ‘நிதர்சனம்’ போன்ற தீவிர புலி ஆதரவுத்தளங்களை வாசிக்காததுபோல தேனீப்பக்கமும் போகாமல் என் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றேன்). ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளில் பலர் ஒருவிடயத்தை இலகுவாய் மறந்துவிட்டிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். ஈழத்தில் இருக்கும் வரை நாங்கள் எவரையும் கொலைசெய்யவில்லை தும்புக்கட்டையோடும் விளக்குமாற்றுடன் தான் அங்கே இருக்கும்வரை போராடிக்கொண்டிருந்தோம் என்று கூறுவதை நாங்கள் ‘நம்பினாலும்’ கனடீய அரசாங்கம் நம்பப்போவதில்லை. அவர்களுக்கு எல்லா இயக்கங்களும் புலிகள்தான்;பயங்கரவாதிகள்தான். ஒருவர் ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று அறிந்தார்கள் என்று எந்தக்கேள்விகளும் இல்லாது ‘நீ பயங்கரவாதி’ என்று அனுப்பிவிடுவார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும். நான் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வருகின்றது. ஒரு முன்னாள் இயக்கத்தவரை இங்குள்ள உளவு நிறுவனம் அவர் ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று கண்டுபிடித்து விசாரிக்க, இவர் புலிகள் பற்றிய தகவல்களைத் தருகின்றேன் என்னை நாடு கடத்தவேண்டாம் என்று கேட்டிக்கின்றார். கனடீய உளவுநிறுவனமும் இவரிடம் வறுகவேண்டியதை வறுகிவிட்டு பிறகு அனாதரவாய் கைவிட்டுவிட அந்த நபர் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார். இன்று புலி என்று ஒருவரை நாடுகடத்தினால் கூட அவருக்கு ஆதரவாய் குரல் எழுப்ப இங்கே குரல்கள் இருப்பதையும் மற்ற இயக்கத்தவர் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாடு கடத்தினால் எந்தக்குரலும் எழும்பாத அவலச்சூழலில்தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதை அறியாது - புலிகளைப் பயங்கரவாதிகளாய் அறிவித்துவிட்டார்கள் -என்று நமது ‘நடுநிலையான’ நண்பர்கள் குதூகலிப்பது மிகவும் அவலமானது. புலியைத் தடைசெய்ததை உற்சாகமாய் உரையாடிக்கொண்டும்/எழுதிக்கொண்டும் இருக்கும் நமது ‘நண்பர்களுக்கு’ (அடிக்கடி கூறும்) சோபாசக்தியின் மேற்கோளான, ‘நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன். ஆனால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன்’ என்பதை இன்னொருமுறை நினைவூட்டி இப்படியிருந்த்தல் நியாயந்தானா என்று கேட்கவேண்டுமா என்றும் தெரியவில்லை.
இவ்வாறான் ஒரு அரசியல் நிலைமை புலம்பெயர் சூழலில் இருக்கின்றபோதுதான் எனக்கு வ.கீதா, எம்.கண்ணன் போன்றவர்களின் நேர்மையான கருத்துக்கள் வசீகரிக்கின்றன. துரோகியோ பாஸிஸ்டோ என்றோ பொத்தாம் படையாக விமர்சிக்காமல் ஒரு பொதுநிலைப்பாட்டில் இருந்து நேர்மையாய் கருத்துக்கள் கூறுகின்ற சூழ்நிலை இன்னும் வராதது புலம்பெயர்சூழலின் சாபக்கேடே என்றுதான் கூறவேண்டும்.
இறுதியாய் கேள்விகளுக்கான நேரத்தில், கண்ணன் கூறிய ஒரு விடயத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எம்.கண்ணன், காலச்சுவடு, தமிழினி மீது வைத்த விமர்சனத்தை மறுத்தும், தமிழினி வசந்தகுமார் சு.வில்வரத்தினத்தைவிடவும் அதிகம் கஷ்டப்பட்டவர் எனவும் குறிப்பிட்ட ‘காலம்’ செல்வம், சு.ராவும் காலச்சுவடு கண்ணனும் ஈழத்தமிழர் விடயங்களில் அக்கறையுள்ளவர்கள் எனவும், தமிழினி வசந்தகுமார் இராஜீவ் காந்தி கொலையுடன் கஷ்டப்பட்டவர் என்று கூறி கண்ணனின் கருத்தை மறுதலித்திருந்தார்.
அப்போது எம். கண்ணன், இத்தகை தரவுகளோடு காலச்சுவடின் பின்னணியை அடுக்கியபின்னும் காலச்சுவடுக்காய் வக்காலத்து வாங்குவதும், தமிழினி வசந்தகுமார் தனது நண்பர் என்றும் வசந்தகுமாரின் வழக்கு குறித்த உள்விவாகரத்து அரசியலை வெளிப்படையாக தன்னால் வைக்கமுடியும் என்றும், எல்லாவற்றையும் மீறி சு.வில்வரத்தினம் என்ற கவிஞர் புங்குடுதீவில் பிறந்து போரில் நிமிர்த்தம் அலைந்துழந்து திருகோணமலை என்று இன்னொரு மூலையில் வாழ்ந்து ட்சூனாமியால் எல்லாம் பாதித்ததை மறந்து/மறுத்து காலச்சுவடுக்காயும், தமிழினிக்காயும் உங்களைப்போன்றவர்கள் வக்காளத்து வாங்குவது தனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கின்றதென வெளிப்படையாகவே கூறினார். உண்மையில் இவ்வாறான ஒருவித உயர்வழிப்பாட்டு நிலையில்தான் இன்னும் பல ஈழத்தவர்கள் தமிழகத்து பதிப்பாளர்களையும், படைப்பாளிகளையும் அளவுக்குமீறி (அது சுந்தர ராமசாமியாய் இருந்தால் என்ன, அ.மார்க்ஸாய் இருந்தால் என்ன) ஒருவித பீடத்தில் வைத்து வழிபடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனமானது.
இந்தியா தனது அரசியலை ஈழத்தமிழரில் புகுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கி அதன் துயரத்தை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும், நீங்களே மீண்டும் பின்னணி அரசியல் தெரியாமல் இலக்கிய விடயங்களிலும் தமிழகப்பதிப்பாளர்களுடன் நெருங்குவது குறித்து அவதானமாயிருக்கவேண்டும் அல்லவா? என்று அரசியலில் மட்டுமின்றி இலக்கிய விடயத்திலும் கவனமாய் இருக்கவேண்டுமென கண்ணன் கூறியதை புலம்பெயர்ந்த/ஈழ நண்பர்கள் கவனத்தில் கொள்வார்களா?

Monday, May 15th, 2006 at 8:03 am

1 comment:

இளங்கோ-டிசே said...

1
Natkeeran says:
May 15th, 2006 at 8:51 am edit
தமிழ் மாநாடு நோக்கி பல நிறைவுகளும், அதேவேளை பல விமர்சனங்களும் உண்டு. தமிழ் மாநாடு நடந்தது சாதனை, விமர்சனங்களை சந்தர்ப்பம் வரும்பொழுது உரையாடிக்கொள்ளலாம். கண்ணன் போன்ற ஒரு சிலர் அந்த மாநாட்டுக்கு வந்திரா விட்டால், மாநாடு கிளின்ரோன் மாநாடு (http://www.kli.org/) போன்றுதான் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கும்.
2
வெற்றி says:
May 15th, 2006 at 9:24 am edit
டி.சே,
நீங்களும் மாநாட்டுக்கு வந்திருந்தீர்களா? நான் வெள்ளி பிற்பகலும், சனி முற்பகலும் கலந்து கொண்டேன். முனைவர்.சுரேஷ் கனகராஜா , முனைவர் Mark Whittaker, முனைவர். ஸ்ரான்லி தம்பையா ஆகியோர்களின் ஆய்வுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களின் ஆய்வுகள் பற்றி இவ் வார இறுதியில் ஓர் தனிப் பதிவு போட உள்ளேன்.
தங்களின் பதிவு சற்று நீளமானதாக இருப்பதால், இன்று இரவு முழுப் பதிவையும் வாசித்த பின்னர் என் கருத்துக்களைச் சொல்கிறேன்.
பி.கு: மேலே உள்ள படத்தில் கண்ணாடியுடன் நிற்கும் தாடி வைத்தவர் நீங்களா?
3
டிசே தமிழன் says:
May 15th, 2006 at 9:52 am edit
/மேலே உள்ள படத்தில் கண்ணாடியுடன் நிற்கும் தாடி வைத்தவர் நீங்களா?/
அது எம்.கண்ணன்.
4
MixEdApe says:
May 15th, 2006 at 10:17 am edit
டிஜே
அவசியமான பதிவு, அருமையான பதிவு என்றெல்லாம் சொல்லுவதாலே பதிவின் இயல்புக்கு ஒரு வண்ணம் போடவிருப்பமில்லை.
நீங்கள் தொட்டிருக்கும் புள்ளிகள் கோடுகளாக இணைக்கப்படவேண்டியவை. குறிப்பாக, வீடு எரிகின்றபோது, சரியான மார்க்ஸியக்கொள்ளிக்கட்டையைத் தேடுகின்றவர்களை இயங்கியமார்க்ஸியமே ஏற்றுக்கொள்ளாது. அடுத்ததாக, தமிழகப்பெரும்பதிப்பகங்களிலே தஞ்சம் கோருகின்ற படைப்பு ஆளிகள் (ஆழிகளோ?) குறித்த கருத்து. சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டது. இது குறித்தும் இப்படியான படைப்பாளிகள் குறித்தும் பேச முற்பட்டால், ‘உன்னாலே பதிக்கமுடியவில்லை என்ற பொறாமை’ என்பது தொடக்கம் ‘இந்திய எதிரி’ என்பது வரைக்கும் எதிர்(ரி)க்கருத்து வந்து விழும்.
மூன்றாவது, ஈழ/புலம்பெயர் இலக்கியங்களின் சாத்தியம் குறித்தது; ஷோபா சக்தியுடன் அவரின் அரசியல் குறித்து முரண்பட எத்தனையோ இருக்கின்றன. ஆனால், அவரைப்போல, வேறெந்த புலம்பெயர் படைப்பாளியும் நம்பிக்கையூட்டவில்லை (இன்றைக்கும்).
5
ஈழநாதன் says:
May 15th, 2006 at 10:34 am edit
டி.சே பல நாட்களின் பின்னர் அறுத்து உறுத்து ஒரு விமர்சனக் கட்டுரை.பலநாட்களின் பின்னர் இங்கேயும் ஒரு மாற்றுக்கருத்தாளரைச் சந்தித்தேன் இன்று தமிழர் படுகொலை செய்யப்பட புலிகள்தான் காரணமாம் அவர்கள் சும்மா இருந்தால் இராணுவம் ஏன் அப்படிச் செய்யப்போகிறதாம் இராணுவம் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யுமாம்.கதை முடிவில் கேட்டேன் அண்ணை எப்ப நாட்டை விட்டுப் போனீங்கள் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து ஏழிலை என்றார்.
நடுநிலைவாதம் என்பதே பம்மாத்து என்று அடிக்கடி உணர்த்துவதற்காகாவது இவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
6
டிசே தமிழன் says:
May 15th, 2006 at 12:49 pm edit
annon, நீங்கள் முதல் இட்ட பின்னூட்டம் இந்தப்பதிவோடு நான் விளையாடியதால் வினையாகிப்போய் அழிந்துவிட்டது. எனது மின்னஞ்சலில் உங்கள் பின்னூட்டம் இருக்கும் என்பதால் இன்றிரவுக்குள் அதை மீள்பதிவு செய்கின்றேன். இப்போதைக்கு மன்னிக்கவும்.
7
சின்னக்குட்டி says:
May 15th, 2006 at 1:22 pm edit
டிசே …மாநாடு விபரங்களை ..விமர்சன பார்வையில் பதிவாக தந்ததுக்கு நன்றி…
ஈழத்தவர் இலக்கியங்களில். உள்ள..ஈழ்த்தவர்களின் பிரேதச மொழி நடையினை தமிழகத்தவர்களினால் விளங்கி கொள்ளமுடியாமிலிருக்கிறது என்று முன்பு ஒரு முறை வைக்கப்பட்டது…..ஞாபகம் இருக்கிறது . அதே நேரத்தில். ஒரு காலத்தில் தமிழக இலக்கியங்களில் அவர்கள் தான் அவர்களுடைய அய்யராத்து பிரச்னைகளை ஆக்கிரமித்திருந்தன .. அவாள் மொழி நடையில் உள்ளதை நாங்கள் படித்தோம். தானே…
8
டிசே தமிழன் says:
May 15th, 2006 at 4:44 pm edit
annon says:
அறிவுஜீவி எட்வேர்ட்
சயீட்டைப் போல ஏன் நம்மால்
இருக்கமுடியவில்லை என்றும்
கேள்வி எழுப்பினார
Good question, was she talking about her and S.V.Rajadurai.
It is dangerous to toe a neutral line as you will get fired by both
sides (pro and anti LTTE).And one group (nedumaran,suba.
veerapandian) promotes worship of LTTE in
the name of tamil nationalism.Others are totally
anti LTTE. You can be critical of both LTTE
and Sri Lankan govt. but everytime you cannot
prove your loyalty by taking anti or pro LTTE
stand.If you say 20 words say 10 against LTTE
10 against the SL govt and you are safe.If not you are branded as a
stooge or as anti tamil. No body bothers about the real issues and needs
of eelam tamils and their aspirations.
(This comment came from annon…DJ)
9
டிசே தமிழன் says:
May 15th, 2006 at 8:38 pm edit
நற்கீரன், வெற்றி: நீங்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியதால் உங்கள் பார்வைகளை வாசிக்க மிகவும் ஆர்வமாய் இருக்கின்றேன். விரைவில் எழுதுங்கள்.

/நீங்களும் மாநாட்டுக்கு வந்திருந்தீர்களா? நான் வெள்ளி பிற்பகலும், சனி முற்பகலும் கலந்து கொண்டேன்./
வெற்றி,மூன்று நாள்களிலும் பிற்பகல் அமர்வுகளில் மட்டுமே நான் கலந்துகொண்டிருந்தேன்.
….
/ ஷோபா சக்தியுடன் அவரின் அரசியல் குறித்து முரண்பட எத்தனையோ இருக்கின்றன. ஆனால், அவரைப்போல, வேறெந்த புலம்பெயர் படைப்பாளியும் நம்பிக்கையூட்டவில்லை (இன்றைக்கும்)./
ப்ரோ, உங்கள் பார்வையை கிட்டத்தட்ட ஒத்ததே எனது பார்வையும்.
…..
சின்னக்குட்டி, மாநாட்டில் நடந்த எதனையும் விரிவாக நான் தரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். பிற நண்பர்கள் அதுகுறித்து எழுதி விவாதங்களை உருவாக்கினால் புலம்பெயர் சூழலில் தமிழ் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடும்.
என்னை வசீகரிக்கின்ற எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களே ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து அசட்டையீனங்களுடனும் அக்கறையின்மையுடன் இருக்கும்போது சாதாரண வாசகர்களை நோக்கி எல்லாம் எந்தளவுக்கு விரல் நீட்டமுடியுமோ என்றும் தெரியவில்லை. அண்மையில் ஜம்பது சிறுகதைகளையும் அந்தப்படைப்பாளிகளையும் விகடனில் அறிமுகப்படுத்தி ஒரு தொடர் எஸ்.ரா எழுதியபோது, எந்த ஒரு ஈழ/புலம்பெயர் படைப்பாளியும் வராதபோதே எஸ்.ராவின் தமிழ் உலகம் இந்தியாவுக்குள் மட்டும் நிற்கின்றது என்பது தெள்ளிடை வெளிச்சமாயிருந்தது. ஆனால், அவரைப்போன்றவர்கள் அப்படியே ஒரு பெரிய ஜம்ப் பண்ணி இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜரோப்பா என்றெல்லாம் போகமுடிகின்றது ஆனால் பக்க்கத்தில் இருக்கும் ஈழத்துக்கு சிறகை அசைக்கக் கஷ்டமாய் இருக்கிறது. என்ன செய்ய சொல்லுங்கள்?
/அவர்கள் தான் அவர்களுடைய அய்யராத்து பிரச்னைகளை ஆக்கிரமித்திருந்தன .. அவாள் மொழி நடையில் உள்ளதை நாங்கள் படித்தோம். தானே… /
இதை நீங்கள் எழுதும்போதுதான், ஒரு நண்பர் கூறிய இன்னொரு விடயம் நினைவுக்கு வந்தது. யாழ்ப்பாணத்து சாதித்திமிர் பிடித்த உயர்வர்க்கத்தவர்கள் அங்குள்ள பஞ்சம மக்களை உங்கள் மொழி கொச்சையானது என்று ஒதுக்கி வைத்துக்கொண்டே இன்னொரு விதமான கொச்சை மொழி பேசிக்கொண்டு வந்த குமுதம்,விகடன் போன்றவற்றை தங்களுக்குள் அனுமதித்ததின் உளவியல் சுவாரசியம் நிறைந்தது; ஆராயப்படவேண்டியது என்று.
….
annon; நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், எந்தப்பக்கமும் சாயாமல் தாம் சரியென்று நினைப்பதை வெளிப்படையாகக் கூறுபவர்களும் தமிழகத்தில் இருக்கின்றார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
10
டிசே தமிழன் says:
May 15th, 2006 at 8:59 pm edit
ஈழநாதன் ஒரு விடயத்தை மட்டும் கூறிக்கொள்கின்றேன். சிலவருடங்களுக்கு முன் பதிவுகள் விவாதக்களத்தில் இப்படியான ‘நடுநிலைமை’ பிரச்சினை வருகின்றபோது அங்கு விவாதிக்கும் ‘நடுநிலை’ நண்பர்கள் உடனே UTHR(J)அறிக்கைகளோடு ஓடிவருவார்கள் (இப்போது தேனீயை தூக்கிக்கொண்டு வருவதுபோல). நகைச்சுவை என்னவென்றால் சமீபத்திய சேரன் - மகாதேவன் பிரச்சினையில் -நான் இதுவரை அறியாத- பல உள்விவகாரங்கள் வெளியே வந்திருக்கின்றன (தேனீ வாசிக்காதவன் என்று சொல்லிவிட்டு இப்படிச் சொல்கின்றானே என்பவர்களுக்கு நான் இந்தத்தளத்தில்தான் இவற்றை வாசித்தேன் என்று கூறிக்கொள்கின்றேன்). சேரன் எழுதியதைப் பாருங்கள்…
UTHR(J)க்கு உறுதுணையாக இருந்த ராம்.மாணிக்கலிங்கம், மனோரஞ்சன் போன்றவர்கள் வெளிப்படையாக சந்திரிக்கா அரசை ஆதரித்துச் செயற்பட்டவர்கள். ராம். மாணிக்கலிங்கம் சந்திரிக்காவினுடைய ஆலோசகராக சந்திரிக்கா பதவியிலிருந்து விலகும்வரை பணிபுரிந்தவர். மனோரஞ்சன் இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனத்திலும் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் சந்திரிக்கா அரசால் நியமிக்கப்பட்டவர். யாழ்ப்பாணத்தை இலங்கைப் படையினர் கைப்பற்றிய பிற்பாடு, அங்குள்ள மக்கள் பிரஜைகள் குழுக்களை அமைத்து இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று துண்டுப்பிரசுரம் அடித்தவர்கள்
ஆக இவங்கள் எல்லாம் எப்படி உண்மையான மனிதாபிமானிகளாக இருக்கமுடியும்? இவர்கள் அறிக்கைகளை தயாரித்து ‘நடுநிலையாளர்கள்’ ஆகின்றார்கள் என்றால், எப்படி சந்திரிக்கா செம்மணி, முல்லைத்தீவு, மடு என்று பொதுமக்களைக் கொன்றுகுவிக்க குவிக்க அவரின் நிழலில் இருந்துகொண்டே அறிக்கை தயாரிக்கமுடிந்தது என்று நமது ‘அறிவுசீவிகளுக்கு’ ஏன் கேள்விகள் எழுவதில்லை? இந்த அறிக்கை எழுதுகின்றவர்கள் எல்லாம் எந்தச் சார்பும் இல்லாது இருப்பவர்கள் என்று என்னைப்போன்று நம்பிக்கொண்ட பலரை இவர்களைப்போன்றவர்கள் ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்களை நம்பி மக்கள் போனால், அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை போலத்தான் ஆகிப்போகும்.
….
ஆக இந்த விடயத்தை இத்தனை காலமும் தனக்கு கஷ்டம் வராதவரை சேரனாலும் பொதுப்பார்வைக்குக் கூறாமல் மறைத்து வைக்கமுடிகிறது. உண்மைகளை தெரிந்துகொண்டோ/தெரியாமலோ இந்த அறிக்கைகள் எந்தச் சார்புமில்லாது நேர்மையானது என்று எமக்கு (பதிவுகள் போன்ற இணையதளங்களில்) பிற ‘நடுநிலை’ ஆசாமிகளால் இவற்றைக்கொண்டே ‘நடுநிலை/சனநாயக’ பாடம் நடத்தவும் முடிகின்றது. நாமும் வழமைபோல அட இவங்கள் அந்தமாதிரி கதைக்கின்றாங்கள் என்று வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டு அவ்வவ்போது ‘ம்’ போட்டு பக்கவாத்தியம் வாசிக்கவேண்டியதுதான்.
11
தங்கமணி says:
May 16th, 2006 at 2:05 am edit
டிசே. நல்ல, தகவல்கள் தருகிற பதிவு.
1. காலச்சுவடு பற்றிய அரசியல் வெளிப்படுத்தப்படவேண்டியதும், புரிந்துகொள்ளப்படவேண்டியதுமான ஒன்று. காலச்சுவடின் அரசியல் சுந்தரராமசாமியின் இயங்குதளத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தனிப்பட்ட முறையில் நான் அறிந்துகொண்ட சில தகவல்கள் எனக்கு சுந்தரராமசாமி பற்றிய புரிதலை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறது. அது அவரை மார்க்சியவாதியாக காட்டவில்லை.
2. மார்க்சியம், நடுநிலை, ஜனநாயம போன்ற கருத்துகளை தவிர்த்து அதை போதிப்பவர்கள் அனைவரும் இன்று பாசிஸ்டூகளாக அவர்களால் குற்றம் சாட்டப்படுகிறவர்களை விட மோசமா குற்றங்களையும், ஒடுக்குமுறைகளையும் செய்யக்கூடியவர்கள் என்பது எனக்கு முன்பே தெளிவாக விளங்கிப்போனது. நீங்கள் குறிப்பிட்ட படி, இன்று புலிகளின் இடத்தில் அவர்கள் இருந்திருந்தால், புலிகளை நல்லவர்களாக்கி விடக்கூடிய சகல திறமையும் கொண்டவர்கள் இவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பதிவுக்கு நன்றி.
12
Kana praba says:
May 16th, 2006 at 2:23 am edit
என்னய்யா நடக்குது உங்க கானடா நாட்ல, ஒரு எழவும் வெளங்கலியே அய்யா
13
Kana praba says:
May 16th, 2006 at 7:48 am edit
மன்னிக்கவும் டீச
என் பகிவை முழுமையாக்காமல் விட்டுவிட்டேன். நான் விசனப்பட்டது சேரன்VS மகாதேவன் பிரச்சனை. சிங்களவன் எங்களை ஒருபக்கம் கூறுபோடுறான். அதுபோதாதெண்டு இவயள் வேற..
14
karupy says:
May 16th, 2006 at 8:56 am edit
டீசே, அருமையான பதிவு நல்ல காலம் தாங்கள் வெள்ளி காலை வரவில்லை. மிகவும் கலர்புல்லாக தலைப்புகள் முருகன், மடல், குறத்தி என்று இருந்தது. ஆய்வுக்காகத் தெரிவு செய்யும் தலைப்புகள் சமகால மக்களுக்கு எந்த வகையிலாவது உபயோகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் சொன்னது. அடுத்த நாள் அமர்வில் கண்ணன் முதல் நாள் அமர்வை நன்றாகக் கடிக்கவும் செய்தார்.
15
ஈழநாதன் says:
May 16th, 2006 at 9:14 am edit
டி.சே மலை முழுங்கியளால் மலையை முழுங்கத் தான் முடியும் சமிபாடடைய வைக்கமுடியாது தொண்டைக்குழிக்குள் வரட்டா வரட்டா என்று குத்திக்கொண்டேயிருக்கும் மலை.
இண்டைக்கும் UTHR(J)ஐ உதாரணம் காட்டுற நிறையப் பேரைப் பார்த்திருக்கிறன் அவர்களுக்கு ராஜன் கூலும் சிறீதரனும் இப்ப எங்கேயென்றே தெரியாது இப்பவும் ராஜனி திரணகம தான் அந்த அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிற நினைப்பு
16
Thirumavalavan says:
May 16th, 2006 at 10:36 am edit
தலைவா!
1.
உங்கள் பதிவு பார்த்ததன் பின் முதல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமை வருத்தம் தருகிறது.
2. இந்திய அரசியல் போலவே இலக்கிய அரசியலும். இதில் யாரை யார் நம்புவது. வந்திருந்த புதியவரும் கூட இந்த (பதிப்பக) இலக்கிய அரசியலுக்குள் உள்ளவர்தான். (அடையாளம் என்ற பதிப்பகம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டார். தகவல் தவறாகவும் இருக்கலாம்.) அதுவல்ல பிரச்சனை. புகலி;ட இலக்கியம் நீத்துப்போய் விட்டது உண்மைதான். இதற்காண காரணம் தமிழக இலக்கிய மேலாண்மைதான். பின் நவினத்துவம் தலித்தியம் என்கிற சொலாடல் கவர்ச்சியும் அ. மார்க்ஸ், சாருநிவேதா போன்றவர்களின் வெளிநாட்டு வருகைகளும், எமது இந்திய மோகமும் இயல்பாகவே அடித்து சென்றுவிட்டது. நாங்கள் இப்பொழுதும் இதையேதான் செய்துகொண்டிருக்கிறேம். முடிவாக தேவகாந்தன் சொன்னதே சரி. எமக்கென்றொரு பதிப்பகம், விமர்சன உலகம், வாசகர் வட்டம் இல்லாத வரை ஈழத்து இலக்கியம் தனித்து தளிர்த்து வளர முடியாது.
பிரமிள் எப்படி இன்று தமிழக கவிஞர் இனங்கானப்படுகிறாரோ அதே போல நாளை N~hபாசக்தியும் ஆகலாம். ஆவார். யாருடைய வாக்குகளையும் வேத வாக்காக எடுக்காதீர்கள். எல்லோர் மீதும் சந்தேகம் கொள்ளுங்கள். கேள்விகளை எழுப்புங்கள்.
3. இந்தக் கூட்டத்தில் ஜீவனுடைய புத்தகம் ( கண்ணணால் கொடுக்கப்பட்டது) ஒன்றை சுட்டுவிட்டார்கள் என்பது துயரம். இதுவும் பதிவுசெய்யப்பட வேண்டியதுதான
திருமாவளவன்
17
பொடிச்சி says:
May 16th, 2006 at 11:31 am edit
//இந்த அறிக்கை எழுதுகின்றவர்கள் எல்லாம் எந்தச் சார்பும் இல்லாது இருப்பவர்கள் என்று என்னைப்போன்று நம்பிக்கொண்ட பலரை இவர்களைப்போன்றவர்கள் ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்களை நம்பி மக்கள் போனால், அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை போலத்தான் ஆகிப்போகும்.//
டீ.சே.: இப்போதைக்கு -மேலுள்ள உங்களது வரிகளை இட்டு- ஒரு கேள்வி:
மனித உரிமை வாதிகள்/அறிக்கை எழுதுபவர்கள் எந்த சார்பும் அற்றவர்கள் என்று நீங்கள் எப்போது நம்பிக் கொண்டீர்கள்?
என்றைக்கு நீங்கள் (அறிக்கை தயாரிக்கிற)”இவங்கள” நம்பினீர்கள் எண்டிறதோட
இன்றைக்கு சேரன் தன்ர கட்டுரையில சொல்ற “உள் விவகாரங்கள்” உடனடியா “உண்மை”யானதெப்படி? அது உண்மையாய்த்தான் இருக்க வேண்டும் என்று என்ன அடிப்படையில் முடிவுக்கு வந்தீர்கள்?
உங்களட கையில இருக்கிற “உண்மை”க்கு ஃபிற் பண்ற மாதிரி அவர் சொல்லும்போது மட்டும் உண்மை விளம்பல்; அல்லாதபோது “அரசு சார்பு.”
இது என்ன அரசியல் டீ.சே?
+
இந்தப் பதிவில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் புலி சார்பா புலி எதிர்ப்பா ஏன் நடுநிலமைவாதியா என்பது கூடத் தெரியவில்லை. அதாவது பாசிஸ்ட் என்றும் இல்லாத (அந்தப் பெரிய பக்கக் கட்டுரை எழுதுபவர்கள் போல), தலைவர் என்றும் “புலி வால்” பிடிக்காத (இவங்க எப்படி கட்டுரை எழுதுவார்கள் என உதாரணம் வரவில்லை), அதேநேரம் சொல்லப்படுகிற நடுநிலமைவாதிகளையும் “விமர்சிப்பதால்”- அப்படியும் அல்லாமல் பக்கஞ்சாரா ஒரு பதிவே எழுதியதாக இதை யாரும் கொள்ளலாமோ என்னவோ!!
ஆனால் எனக்குத்தான் முடியவில்லை. எல்லோருக்கும் சார்புகள் உண்டு. சார்புகளின் அடிப்படையில்தான் சாரத்திற்கே வருவது. உங்களது சார்பே தெரிவிக்காத இந்தப் பதிவின் தோற்றத்தைப் பார்க்கிறபோது “மற்றவர்கள்” சொல்லுவதுகூட தேவலாம் போல இருக்கிறது.
முன்பும் ஒரு பிள்ளை பாலியல் வன்புணரப்பட்டபோது நீங்கள் அதற்கொரு “கவிதை” எழுதனீர்கள். அதில் நீங்கள் சொன்னது ஞாபகம் (இது தொடர்பாய் நீங்கள் தேனீ படிப்பதில்லை தொடர்பாய் யாரும் கேட்டிருவினை போல, நானும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்; அதற்கு எழுதாததற்கு பெரிதாய் காரணமொன்றுமில்லை. வாழ்வின் அன்றாட அலைவுகளுள் எழுதுவது தள்ளிப் போய்விட்டது. திரும்பவும் “அதே” பிரச்சினை வருகிறபோது ஞாபகம் வருகிறது; அவ்வளவே).
அதிலும் “நடுநிலைமையாளர்கள்” (என நீங்கள் நம்புபவர்கள்) உங்களது பிரச்சினைக்கு வந்திருந்தார்கள். சேரனைக்கூட (பெயர் சொல்லாமல்) “திசைகள்” என இழுத்திருந்திர்கள் (குறைந்த பட்ச அறம்: பெயர் சொல்லல்).
அந்தப் பெண் இராணுவத்தால்வன்புணரப்படுவது பற்றி இதற்கு என்ன சொல்வார்கள் என்பது உங்கட கேள்வி.
நீங்கள் அந்தக் கவிதையை எழுதுவதற்கு ஏதுவான சம்பவம் நடக்க முன்தான் மட்டக்களப்பில் ஒவ்வொருநாளும் (கருணா - வன்னிப் புலிகள் மோதலில்) குறைந்தது ஒரு பிள்ளையாவது இறந்துகொண்டிருந்தான். அந்தப் பெண்ணொத்த வயதுகள்தான். நீங்கள் அதப் பற்றி ஏன் ஒரு கவிதையும் எழுதவில்லை டீ.சே?
அங்கும் ‘ஒரு பெண்” அல்ல பல பெண் அம்மாக்கள் அழுதார்களே! அப்போ கேக்கலாமா,எங்கே போனார்கள் விடுதலைப்புலி அனுதாபிகள் என்று?
சார்புகள் தான் எல்லாவற்றுக்கும் காரணம்; அது உங்களுக்குப் பொருந்துமெனில் எல்லோருக்கும் பொருந்தும். எமது சார்புகளை கடக்கிற நிகழ்வுகள் எம்மை உணர்ச்சிரீதியாவும் தூண்டுகிறது. அந்தவகையில் (நிச்சயமா எனது சார்புகளின் படிக்கு) தம் பெயர்களுக்க முன்னால XXXX இயக்கப் பேரோட தெருவில நாய்களைப் போல செத்துக் கிடக்கிறவர்கள் பற்றி அவர்களுக்கு அர்ப்பணிக்கும் ‘க/விதைகளை எழுதலாம். அவரவர்க்கு அவரவர் உணரச்சிகள் நேர்மையானவை.
18
டிசே தமிழன் says:
May 16th, 2006 at 8:20 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
19
டிசே தமிழன் says:
May 16th, 2006 at 8:32 pm edit
/முடிவாக தேவகாந்தன் சொன்னதே சரி. எமக்கென்றொரு பதிப்பகம், விமர்சன உலகம், வாசகர் வட்டம் இல்லாத வரை ஈழத்து இலக்கியம் தனித்து தளிர்த்து வளர முடியாது.
/
திருமாவளவன். நீங்கள் குறிப்பிட்ட இந்தப்புள்ளி முக்கியமானது என்று நினைக்கின்றேன். மற்றும்படி…
/எல்லோர் மீதும் சந்தேகம் கொள்ளுங்கள். கேள்விகளை எழுப்புங்கள்./
இது உண்மையானது. அடையாளமாயிருதாலென்ன, விடியலாயிருந்தாலென்ன, கறுப்பு பிரதிகளாய் இருந்தால் என்ன அவற்றின் அரசியல் பின்னணிகளை விளங்கிக்கொண்டே படைப்புக்கள் வெளியிடுவதில் படைப்பாளிகள் கவனமாயிருக்கவேண்டும் என்பதைத்தான் கூறவந்தேன்..
/இந்தக் கூட்டத்தில் ஜீவனுடைய புத்தகம் ( கண்ணணால் கொடுக்கப்பட்டது) ஒன்றை சுட்டுவிட்டார்கள் என்பது துயரம்./
சின்னவயசிலிருந்தே பிடித்த பொருள் கிடைக்காதுவிட்டால் களவெடுப்பதில் (கள்ள மாங்காயிலிருந்து) -என்னையும் சேர்த்துத்தான் - ஒரு திரில் இருப்பதுமாதிரி இப்படி சுடுவது அடிக்கடி எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கின்றதுதானே :-). நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் மீண்டும் ஜீவனுக்கு கிடைத்துவிட்டது என்று அறிந்தேன்.
20
டிசே தமிழன் says:
May 16th, 2006 at 8:36 pm edit
/
//இந்த அறிக்கை எழுதுகின்றவர்கள் எல்லாம் எந்தச் சார்பும் இல்லாது இருப்பவர்கள் என்று என்னைப்போன்று நம்பிக்கொண்ட பலரை இவர்களைப்போன்றவர்கள் ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்களை நம்பி மக்கள் போனால், அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை போலத்தான் ஆகிப்போகும்.//
டீ.சே.: இப்போதைக்கு -மேலுள்ள உங்களது வரிகளை இட்டு- ஒரு கேள்வி:
மனித உரிமை வாதிகள்/அறிக்கை எழுதுபவர்கள் எந்த சார்பும் அற்றவர்கள் என்று நீங்கள் எப்போது நம்பிக் கொண்டீர்கள்?
என்றைக்கு நீங்கள் (அறிக்கை தயாரிக்கிற)”இவங்கள” நம்பினீர்கள் எண்டிறதோட
இன்றைக்கு சேரன் தன்ர கட்டுரையில சொல்ற “உள் விவகாரங்கள்” உடனடியா “உண்மை”யானதெப்படி? அது உண்மையாய்த்தான் இருக்க வேண்டும் என்று என்ன அடிப்படையில் முடிவுக்கு வந்தீர்கள்?
உங்களட கையில இருக்கிற “உண்மை”க்கு ஃபிற் பண்ற மாதிரி அவர் சொல்லும்போது மட்டும் உண்மை விளம்பல்; அல்லாதபோது “அரசு சார்பு.”
இது என்ன அரசியல் டீ.சே?/
பொடிச்சி, மனித உரிமைவாதிகள் சார்பற்று இருக்கின்றார்களோ இல்லையோ எனக்குத் தெளிவாகத் தெரியாது. ஆனால் ‘முறிந்த பனை’ போன்ற ஆவணத்தை வாசித்துவருகின்ற ஒருவன் அவ்வாறே இவ்வாறான அறிக்கைகளும் -எந்த அரசியலையும் சாராது வெளிவருகின்றது- என்றே நம்பிக்கொள்வான். சரி நான் நம்பிக்கொண்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதைவிட பதிவுகள் இணையத்தளத்தில் சில ‘ஆவிகள்’ இந்த அறிக்கை மட்டுமே உண்மை என்றமாதிரியும் இன்னொரு பக்கம் இல்லையென்ற மாதிரியும் ஒரு கருத்துத் திணிப்பை -(கவனிக்க என்னை மட்டும் குறிப்பிடுகின்றேன்) எனக்குள் விதைத்திருந்தன. சேரனின் உண்மையை -உங்களின் வார்த்தையில் சொன்னால் ·பிற்றாக்கி (நீங்கள் உங்கள் பதிவுகளில் சேரனை எப்படி பிற்றாக்கிக்கொண்டு வந்தீர்கள் என்ற சுவாரசியமான புள்ளியை பின்னால் கூறுகின்றேன்)- கொண்டு வரவில்லை. இவ்வாறான சந்திரிக்கா ஆதரவு ‘ஆசாமிகள்’தான் அறிக்கைகளின் பின்னால் இருக்கின்றார்கள் என்று சில நண்பர்கள் ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் எழுதியயபோதும், இந்த அறிக்கையை தெய்வமாக மதிக்கின்ற சில ஆசாமிகள், எதையும் பேசவிடாது உடனேயே அவர்கள் மீது புலிச்சாயத்தைத்தான் வாரியிறைத்துக்கொண்டிருந்தன (ஆதாரம் வேண்டுமெனில் பதிவுகள் விவாதத்தளத்தை மீண்டும் வாசிக்கவும்).
ஏன் நான் இப்போது சேரனின் வார்த்தைளோடு வருகின்றேன் என்றால் அவர் தனது சரிநிகர் சஞ்சிகையில் இவற்றை -சந்திரிக்காவின் ஆதரவு பின் தளத்தில் இருக்கின்றது என்று தெரிந்துகொண்டே- வெளியிட்டிருக்கின்றார். எவரும் எந்த சார்போடும் இருப்பது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இந்த ஆசாமிகள் சந்திரிக்காவுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டுதான் இந்த அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள் என்ற உண்மையை வாசிப்பவருக்கு பொதுவில் வைப்பதுதான் பத்திரிக்கை அறம் என்று நினைக்கின்றேன். இன்று புலிகளின் ஊடாக அறிகைகள் வரும்போது பொது வாசகருக்கு இது புலிகளின் அறிக்கை என்று தெளிவாகத் தெரிவதுபோல, அந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளும் அதன் அடிப்படையில் -அரசு சார்பில் வெளிவருகின்றன என்று கூறப்பட்டு- வெளிவந்திருக்கவேண்டும் என்பதே எனது கருத்து. அதைத் தெரிந்துகொண்டே மறைத்துக்கொண்டு வெளியிட்ட சரிநிகரும், அதைக் தெய்வமந்திரமாக்கி ‘ஆவியாகி’ காவிக்கொண்ட பிற ‘நடுநிலையாளர்களும்’ ஏன் அதை மறைத்தார்கள் என்ற கேள்விகள் முதலில் எழுப்பப்படவேண்டும்.
புலிகளின் அறிக்கைகள் போல, இந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளும் ஏதோ ஒரு சார்பினூடாகவே வெளிவந்துதுகொண்டிருப்பதை மறைத்து, ஏன் தாம் எந்தச்சார்பில்லாதும் இருக்கின்றோம் என்று வேசம் கட்டினார்கள் என்பதே எனது முக்கியமான வினா. மற்றும்படி புலிகளின் அறிக்கைகளிலும், இந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளிலும் உண்மைகளும் இருக்கின்றன, பொய்களும் இருக்கின்றன என்பதை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் ஏதோ புலிகளின் அறிக்கை எல்லாம் பொய், இந்தா பிடி இந்த மனித உரிமை அறிக்கைகள் ‘மட்டுந்தான்’ உண்மை என்று ஒரு கருத்துத் திணிப்போரை எப்படி ஏற்றுக்கொள்வதாம்?
இன்றையபொழுதில் திருமாவளவன் மேலே கூறுகின்ற ‘எதையும் சந்தேகியுங்கள்’ என்ற புரிதல் ஒரளவாவுக்காவது வந்திருக்கின்றது. அன்றையபொழுதில் ஒரு இலக்கிய/அரசியல் உலகில் புதிதாய் நுழைகின்ற ஒருவனாய் ( சரமாரியாக வார்த்தை நளினங்களுக்கும், தத்துவார்ந்த சிக்கல்களுக்குள்ளும் சிக்கிக்கொண்டவனாய் இருந்திருக்கின்றேன்; எனவே இவ்வாறான ‘உண்மையான’ புரிதல்களை இனியும் புதிதாய் வருபவர்கள் -முக்கியமாய் தமிழ்நாட்டு நண்பர்கள்- விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் நான் என் நிலையில் நின்று இவைகுறித்து கேள்விகள் எழுப்புவது என்னளவில் அவசியமாகின்றது). இதையேன் இப்போது சலிப்புடன் கூறுகின்றேன் என்றால், அது ஒரு சார்பில்லாது கிட்டத்தட்ட ‘முறிந்த பனை’ போல வந்திருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கும் எனக்கு அவர்களின் அறிகைகள் முழுவதையும் மீண்டும் மீள்வாசிப்புச் செய்யும் நிலைமை வருகின்றது. என்னைப்பொறுத்தவரையில் -தமது சார்பை மறைத்து- அவர்கள் செய்தது கீழ்த்தரமான அரசியல் என்றே இப்போதும் கூறுவேன்.
மற்றும்படி கவனமாய் வாசித்திருந்தீர்கள் என்றால் சேரனையும்தான் நான் குற்றஞ்சாட்டுகின்றேன். அதற்கு அவரது ‘·பிற்றாகும்’ உண்மையை வைத்தே அவரையும் கேள்விக்குட்படுத்தினேன். சேரனை நான் எந்தப்பொழுதிலும் நிராகரிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. உண்மையில் சொன்னால் சேரன் எழுதிய மறுப்புப் பதிவில் -உங்கள் வார்த்தையில் கூறினால்- எனக்கு ·பிற்றாகின்ற இன்னும் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் அது எனக்கு இந்தவிடயத்தோடு தொடர்பில்லை என்றபடியால் நான் அவற்றைக் காவிக்கொண்டு இந்தப்பதிவுக்கு வரவில்லை.
/இந்தப் பதிவில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் புலி சார்பா புலி எதிர்ப்பா ஏன் நடுநிலமைவாதியா என்பது கூடத் தெரியவில்லை. அதாவது பாசிஸ்ட் என்றும் இல்லாத (அந்தப் பெரிய பக்கக் கட்டுரை எழுதுபவர்கள் போல), தலைவர் என்றும் “புலி வால்” பிடிக்காத (இவங்க எப்படி கட்டுரை எழுதுவார்கள் என உதாரணம் வரவில்லை), அதேநேரம் சொல்லப்படுகிற நடுநிலமைவாதிகளையும் “விமர்சிப்பதால்”- அப்படியும் அல்லாமல் பக்கஞ்சாரா ஒரு பதிவே எழுதியதாக இதை யாரும் கொள்ளலாமோ என்னவோ!!
ஆனால் எனக்குத்தான் முடியவில்லை. எல்லோருக்கும் சார்புகள் உண்டு. சார்புகளின் அடிப்படையில்தான் சாரத்திற்கே வருவது. உங்களது சார்பே தெரிவிக்காத இந்தப் பதிவின் தோற்றத்தைப் பார்க்கிறபோது “மற்றவர்கள்” சொல்லுவதுகூட தேவலாம் போல இருக்கிறது./
இதை நீங்கள் கேட்பது, விடிய விடிய இராமாயணம், விடிந்தாற்பிறகு …என்ற கணக்கில் என்னிடம் வருகின்றீர்கள். சரி வாருங்கள். எனது சார்பை நான் எங்கும் ஒளித்தோ/ஒழித்ததோ ஒருபோதும் இல்லை. பதிவுகள் விவாதக்களத்திலிருந்து, வலைப்பதிவு (மயூரனின் பதிவு ஒன்றில் தெளிவாகக்கூறியிருக்கின்றேன் என்று நினைக்கிறேன்) மற்றும் நேரில் உரையாடும் நண்பர்கள் (இங்கே பின்னூட்டம் இட்ட திருமாவளவன் மற்றும் குறிப்பிட்டப்பட்ட ஜீவன்) அனைவருடனும் எனது அரசியல் புலிச்சார்பு உடையது என்று வெளிப்படையாக அறிவித்துத்தான் உரையாடுகின்றேன். நீங்களும் அதை (என் பதிவுகளினூடாக) அறிந்துகொண்டே இப்படி ஒரு சின்னத்தனமான கேள்வியோடு வருவது வியப்புத்தான். பரவாயில்லை. ஏதோ என் வாயால் இன்னொருமுறை கேட்டால் சந்தோசம் போலும் உங்களுக்கு.
/தலைவர் என்றும் “புலி வால்” பிடிக்காத (இவங்க எப்படி கட்டுரை எழுதுவார்கள் என உதாரணம் வரவில்லை/
ஒருவிடயத்தை பேசும்போது ஏன் மற்றொன்றைப் (other) பற்றி கேள்விக்கேட்கின்றீர்கள் என்று எனக்கோ அல்லது யாருக்கோ பாடம் கற்பித்த நீங்களே (ஆதாரம் வேண்டும் என்றால் உங்கள் பதிவைத்தேடிப்பார்த்துத் தருகின்றேன்; நீங்கள் கூறிய -மற்றதை பேசுதல்- குறித்து சிறிரங்கனிடம் விவாதிக்கபோய் அடிபட்டுக்கொண்டதாயும் எனக்கு நினைவு.) சரி கற்றுத்தந்தவருக்கே மீண்டும் அதை நினைவுபடுத்தவேண்டிய நிலையை நினைத்து நோவதா, சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை. பேசப்பட்ட விடயத்தை பற்றி (’நடுநிலையாளர்கள்’) மட்டும் கேள்வி கேள், ஏன் புலிவாலை, புலித்தலைமையைப் பற்றி இந்த இடத்தில் பேசவேண்டும் என்ற ‘அந்த மற்றதைப் பேசுதலை’ வைத்து நான் உங்களைப்போல மறுக்கப்போவதில்லை.
இஞ்சை பாருங்கோ, புலிவால்களோ, புலித்தலைமையை கொண்டாடுபவர்களோ தாங்கள் ‘நடுநிலைவாதிகள்’ என்று அடிக்கொரு தரம் மேற்கோள் காட்டிக்கொண்டிருப்பதில்லை, தங்களை ‘மனித உரிமைவாதிகளாய்’ எங்கும் பிரகடனப்படுத்துவதில்லை. அவர்கள் நேர்மையாகவே நாங்கள் புலிகளை ஆதரிக்கின்றோம், புலித்தலைமையை கேள்விகள் இல்லாது ஏற்றுக்கொள்கின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றார்கள். இந்த ‘நடுநிலைவாதிகளில்’ பலர் புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் செய்துகொண்டு நாங்கள் ‘நடுநிலைமைவாதிகள்’, ‘மனித உரிமைவாதிகள்’ என்று கூறுவதைத்தான் கட்டுடைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என்கின்றேன். மேலும் ‘நடுநிலைமைவாதிகள்’ என்று கூறிக்கொள்வது ஒருவித பாஷனாகிப்போய்க்கொண்டும், தமிழகத்தில் பேட்டிகள் கொடுப்பதற்கு இல்குவான உத்தியாகவும் இருக்கவும் செய்கின்ற நிலையில் - அதை சாட்டாக வைத்து முழுமக்களுமாய் தங்கள் ‘நடுநிலைமையே’ சரியென்று முழங்கிக்கொண்டிருக்கின்றபோது இவர்கள் உண்மையில் யார் என்று வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றையபொழுதில் இன்னும் அவசியமென்றே நினைக்கின்றேன். அதுகூட ஒருவகை அரசியல் அறம் என்றே இன்னும் நான் நம்புகின்றேன். புலியை ஆதரிக்கின்றேன், எதிர்க்கின்றேன், அரசு சார்பாய் இயங்குகின்றேன் என்பவனை கட்டுடைக்கவேண்டிய தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் கருத்தை நேரடியாகச் சொல்கின்றார்கள். அதனூடாக நாம் அவர்களை விளங்கிக்கொள்ளவும் விமர்சிக்கவும்முடியும்.
இன்றைய ‘நடுநிலைமைவாதிகளில்’ பலரை கட்டுடைத்துபார்த்தால் புலி எதிர்ப்பு வாதம் ஒன்றே மிஞ்சும் என்பதுதான் மிக அவலமான விடயம். புலி ஆதரவு - புலி எதிர்ப்பை என்பவற்றைத்தாண்டி விமர்சனங்கள் போகும்போதுதான் சமூகத்திற்கு பிரயோசனமாய் எதுவும் விளையலாம். ஏன் எங்களில் எட்வேர்ட் சயீட்டைப் போல ஒருவர் புலம்பெயர் சூழலில் உருவாகவில்லை? என்ற கேள்வியின் நிமிர்த்தமே நான் என் பதிவில் இவர்களை நோக்கிக் கேள்விகள் எழுப்புகின்றேன். இப்படி -so called - நடுநிலைவாதிகளாக மட்டும் இருப்பதால் அல்லது தங்களுக்குள் சொல்லிக்கொள்வதில் ஒருவித ஆனந்தத்தை அவர்கள் அடையலாமே தவிர சமூகத்தில் எதுவும் நிகழப்போவதில்லை என்பதே அவலமான விடயம். ஒருகாலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளார்களாய் இருந்தவர்கள் எல்லாம் ஏன் இன்றைய பொழுதுகளில் புலிச்சார்புடன் வந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது இன்னொரு விவாதத்திற்குரிய புள்ளி (உணர்ச்சிவசப்படாமல் யாராவது இதை நிதானமாய் அணுகிப்பார்க்கலாம்)
மேலும், நான் /அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை/யைச் சொன்னதன் காரணம், இன்று இந்த ‘மனித உரிமைவாதிகளும்’ அவர்களைக்காவிக்கொண்டு திரிபவர்களையும் மக்கள் முற்றுமுழுதாய் நம்ப, இவர்களும் புலிகளுக்கு நிகரான அமைப்பாய் மாறினால் மக்களுக்கு என்ன செய்வார்கள்/சொல்வார்கள்? இவர்களுடைய எதிர்கால இலக்குகள்தான் என்ன? என்னவிதமான கட்டமைப்பை மக்களுக்காய் வைத்திருக்கின்றார்கள்? இல்லாவிட்டால்,ஏன் சிங்கள அரசு நல்லாய்த்தானே இருக்கின்றது என்று தமிழ்மக்களின் தலைவிதியை சிங்கள அரசிடம் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பாஸிசம் பாஸிசம் என்று புலிகளை நோக்கி அறிக்கை அம்புகள் விடுபவர்கள் இன்னொரு பாஸிச அமைப்பின் மீது நிற்பது குறித்து ஏன் பொடிச்சி உங்களைப்போன்றவர்கள் கேள்விகள் எழுப்புவதில்லை. உங்களுக்கு அக்கறை மக்கள் மீதாயிருந்திருந்தால் முதலாவது கேள்வி அவர்களின் இருப்பு நோக்கியதாய் அல்லவா இருக்கவேண்டும்? இல்லாவிட்டால் ராம்.மாணிக்கலிஙமும், மற்றவர்களும் அப்படி இருக்கவில்லை என்று எங்கையாவது ‘ஆதாரமான’ செய்திகளைக் கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டீர்களோ தெரியவில்லை.
/முன்பும் ஒரு பிள்ளை பாலியல் வன்புணரப்பட்டபோது நீங்கள் அதற்கொரு “கவிதை” எழுதனீர்கள். அதில் நீங்கள் சொன்னது ஞாபகம் (இது தொடர்பாய் நீங்கள் தேனீ படிப்பதில்லை தொடர்பாய் யாரும் கேட்டிருவினை போல, நானும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்; அதற்கு எழுதாததற்கு பெரிதாய் காரணமொன்றுமில்லை. வாழ்வின் அன்றாட அலைவுகளுள் எழுதுவது தள்ளிப் போய்விட்டது. திரும்பவும் “அதே” பிரச்சினை வருகிறபோது ஞாபகம் வருகிறது; அவ்வளவே)./
சரி நீங்கள் குறிப்பிடுகின்ற ‘கவிதை’ விசயத்துக்கு வருவோம் (கவிதையை அடியில் தந்திருக்கின்றேன்). கவிதை வாசிப்பில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாசிப்பு உண்டென்பதால் நான் என்ன நினைத்து எழுதினேன் என்று கூற தயக்கம் இருந்தாலும் நான் நினைத்ததை சொல்லிவிடுகின்றேன்.
/’இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்’
அற்புத தரிசனங்கள் தருபவர்கள்
வரலாற்றை எழுதவும்/
இந்த வரிகளில் வருவது சி.புஷ்பராஜா, தீராநதிக்கு இராணுவம் என்றால் பாலியல் வன்புணர்வு செய்யத்தான் செய்யும் என்று கூறியதன் விசனத்தால் வந்தது. இராணுவத்தை நோக்கி நான் கேள்வி எழுப்பும்போது எனக்கு இவரை நோக்கியும் கேள்வி எழுப்பவேண்டும் என்ற நினைவு வந்தது. அதுசரி அவர் சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? அல்லது கேள்விகள் கேட்கக்கூடாது என்கின்றீர்களா?
/பெண்களை
சிதைத்துச்செல்பவர்கள்
திசைகள் எங்குமலைந்து
அரசியல் பேசவும்../
இதில் குறிப்பிட்டது -நான் இலக்கியவாதிகள் என்று கேள்விப்பட்ட சிலர் பெண்களின் விடயங்களின் மிகவும் கீழ்த்தரமாய் இருந்ததைக் அறிந்து (அதில் சேரனைச் சேர்ப்பதா அல்லது இல்லையா என்பது உங்கள் வாசிப்பின் தெரிவு) எழுதியது. எனக்கு ஒரு படைப்பாளியாக, ஒரு இராணுவம் செய்வதை நான் கேள்விக்குட்படுத்தும்போது ஏதோ ஒருவகையில் நான் நம்பிக்கை வைத்திருந்தவர்களும் இராணுவத்திற்கு நிகராய் பெண்களைச் சிதைத்துவிட்டுப்போனவர்கள்தான் என்று நினைவு வரும்போது அதையும் கேள்விக்குட்படுத்தினேன். ‘கவிதை’ எலலாம் இப்படி இப்படித்தான் எழுதவேண்டும் என்ற அகராதி எதுவும் நீங்கள் வைத்திருக்கின்றீர்களா பொடிச்சி? தந்தால் அடுத்தமுறை அந்த வரைவிலக்கணத்தில் எழுதி உங்களை உணர்ச்சிவசப்படச்செய்யாமல் இருக்க முயற்சிக்கின்றேன்.
/அதிலும் “நடுநிலைமையாளர்கள்” (என நீங்கள் நம்புபவர்கள்) உங்களது பிரச்சினைக்கு வந்திருந்தார்கள். சேரனைக்கூட (பெயர் சொல்லாமல்) “திசைகள்” என இழுத்திருந்திர்கள் (குறைந்த பட்ச அறம்: பெயர் சொல்லல்).
அந்தப் பெண் இராணுவத்தால்வன்புணரப்படுவது பற்றி இதற்கு என்ன சொல்வார்கள் என்பது உங்கட கேள்வி.
/
‘கவிதையை’ கவனமாய் வாசியுங்கள் பொடிச்சி, நீங்கள் விளங்கிக்கொள்ளும்/ அந்தப் பெண் இராணுவத்தால்வன்புணரப்படுவது பற்றி இதற்கு என்ன சொல்வார்கள் என்பது உங்கட கேள்வி./ என்று நான் ஒருபோதும் கேட்கவில்லை. இப்படியானவர்களின் பக்கங்களை அறிந்துகொண்டு என்னால் எப்படி இராணுவத்தை நோக்கி முற்றுமுழுதாக நீ செய்தது குற்றம் என்று- இந்தவிடயத்தில்- நேர்மையாக சுட்டுவிரல் நீட்டமுடியும்? என்ற அலுப்புத்தான் என்னுடைய கேள்வியாக அங்கே இருக்கின்றது.
மற்றும்படி,இதென்னடாப்பா, ‘நடுநிலையாளரை’ எல்லாம் கவிதையில் கூட கை சுட்டக்கூடாதா? இதில் என்ன பெரிய ‘அறம்’ இருக்கின்றது? கவிதை என்பதில் நான் சி.புஸ்பராஜாவையும் மற்ற இவையளையுந்தான் சொன்னேன் என்று முன்குறிப்போ/பின்குறிப்போ எழுதினால் அது கவிதையில்லை; கட்டுரை. இந்தாங்கோ என்று எல்லோருடைய பெயரையும் வீட்டு அட்ரசையும் (குற்றஞ்சாட்டுகின்ற லிஸ்ட் நூறைத்தாண்டினால் அப்படியே குறுங்காவியமும் எழுதலாம் போல) கவிதையில் போட்டுக்காட்டினால் கவிதையாகுமா? அப்படியென்றால்தான் அறம் ஓடிவந்து கட்டிக்கொள்ளுமா? இதென்னடாப்பா பெரிய தொல்லையாய்க் கிடக்கிறது.
சரி எல்லாவற்றையும் போதிக்க நீங்கள் பிரம்போடு வெளிக்கிடும்போது இன்னொரு ‘ம்’ போட்டு நீங்கள் கவிதை குறித்தும் கவிதையின் அறம் குறித்தும் போதிப்பதை கேட்கவேண்டியதுதான். இதில் நகைச்சுவை என்றால் அவரின் பாதிப்பு இவரில் இருக்கின்றது இவரின் பாதிப்பு இன்னொருவரில் இருக்கின்றது என்ற கவிதை விமர்சனம் எழுதி பிச்சுப்பிடுங்கிற நீங்களே பெயர்களைக் குறிப்பிட்டுத்தான் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வரைவிலக்கணம் தந்து அறம் எங்கே என்று வினாவுவதற்கு…. இன்னொரு ‘ம்’.
இப்போது உங்களின் ‘·பிற்’ உண்மையை பாவிக்கும் சூழல் குறித்து…. நீங்கள் சேரனை நித்திய காதலன் என்று நிராகரித்து ஒரு விமர்சனக்கட்டுரை எழுதிவிட்டு, பிறகு உங்களுக்கு ‘·பிற்றாகின்ற’ சேரனின் ஒரு கவிதையை -சிவரமணி பற்றிய எழுதிய- எந்த விளக்கமும் இல்லாது உங்கள் பதிவில் பிறகு பிரசுரித்துள்ளீர்கள். நீங்களும் தொப்பிக்கேற்றமாதிரி ‘·பிற்றான’ கவிதை போடுகின்றீர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். என்னாலும் -உங்களைப்போல- சேரனை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது. சேரன் அல்ல, எந்தப்படைப்பாளியையும் விமர்சனங்களுடன் உள்வாங்கிக்கொள்கின்றேன். அவ்வளவுதான்.
/நீங்கள் அந்தக் கவிதையை எழுதுவதற்கு ஏதுவான சம்பவம் நடக்க முன்தான் மட்டக்களப்பில் ஒவ்வொருநாளும் (கருணா - வன்னிப் புலிகள் மோதலில்) குறைந்தது ஒரு பிள்ளையாவது இறந்துகொண்டிருந்தான். அந்தப் பெண்ணொத்த வயதுகள்தான். நீங்கள் அதப் பற்றி ஏன் ஒரு கவிதையும் எழுதவில்லை டீ.சே?
அங்கும் ‘ஒரு பெண்” அல்ல பல பெண் அம்மாக்கள் அழுதார்களே! அப்போ கேக்கலாமா,எங்கே போனார்கள் விடுதலைப்புலி அனுதாபிகள் என்று?
/
நீங்கள் சக்கரவர்த்தியின் கவிதையொன்றை உங்கடை பதிவில் உருவிப்போட்டபடியால் நான் திருப்பிக்கேட்கமுடியாது என்று புத்திசாலித்தனத்துடன் என்னிடம் இந்தக்கேள்வியுடன் வருகின்றீர்கள் போல (இங்கேயும் பாருங்கள் நீங்கள் மீண்டும் ‘மற்றதை’ பற்றிப் பேசுகின்றீர்கள்?). நல்லது. நான் அதற்கு முன் நடந்த சம்பவங்களுக்கு நீங்கள் என்ன எழுதினீர்கள்/ எதையாவது உருவிப்போட்டீர்களா என்றோ அல்லோ இப்போது நடந்துகொண்டிருக்கும் அப்பாவி மக்களின் கொலைகளுக்கு என்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ என்றோ கேட்கப்போவதில்லை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சார்பு இருக்கின்றது. நான், நீங்கள் ஏன் அந்தக்கவிதையைப் போட்டீர்கள் அது தவறாய் இருக்கின்றது என்று நான் அங்கே வந்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தால் என்னிடம் -ஏன் உனது கவிதையை நீ எழுதவில்லை- என்று கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கின்றது. நான் அங்கே எதுவும் எதிர்ப்புக்குரல் எழுப்பாதபோது, ஏன் நீ அதுபற்றி எழுதவில்லை என்று கேள்வியோடு வருவதில் இருக்கும் அற அரசியல் தான் என்னவோ?
//அதிலும் “நடுநிலைமையாளர்கள்” (என நீங்கள் நம்புபவர்கள்) உங்களது பிரச்சினைக்கு வந்திருந்தார்கள். சேரனைக்கூட (பெயர் சொல்லாமல்) “திசைகள்” என இழுத்திருந்திர்கள் (குறைந்த பட்ச அறம்: பெயர் சொல்லல்).
/
இங்கே ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கப்பட்டாள் என்ற விசயத்தை விடவும், உங்களுக்கு ‘நடுநிலையாளரை’ போட்டு அடித்துவிட்டான் என்ற முதலில் கோபந்தான் வருகின்றது. இதைத்தான் மேலே சொன்னேன், கொலையோ, வன்புணர்வோ விமர்சனங்களை மீறி முதலில் கண்டணஞ் செய்யுங்கள். அதுதான் குறைந்தபட்ச அறமாய் இருக்கும். அதைத்தான் அனைத்து விமர்சனங்களை மீறி முதலில் நாமனைவரும் செய்யவேண்டியது. நீங்கள் அதற்கு ஒரு சிறு கண்டனம் -இப்போதுகூட- கூறாது நடுநிலையாளருக்கு கவசமாக, சரியாகத்தான் பிரயனத்தப்படுகின்றீர்கள். நல்ல விசயந்தான். மனதில் எது உறுத்திக்கொண்டிருக்கின்றதோ அதுதானே முதலில் வரும். பரவாயில்லை அங்கே சிறிரங்கனோ அல்லது வேறு யாரோ கிட்டத்தட்ட இதேமாதிரி கேள்வியோடு ஒடிவந்தார்கள் என்று நினைவு. இப்போது காலம் தாழ்த்தி ‘நடுநிலையாளர்களின் மானம்’ காக்க நீங்கள் ஓடிவருகின்றீர்கள். அவ்வளவுதான். மற்றும்படி உங்களின் விமர்சனங்களைத்தாண்டி நான் ‘கவிதை’ என்று எழுதி அங்கேயெழுப்பிய கேள்விகளில் நியாயம் உள்ளது என்று இப்போதும் உறுதியாக நம்புகின்றேன்.
அடடா, விசயத்துக்கு வருகின்றேன். நான் தேனீயை வாசிப்பதில்லை என்ற உதாரணத்தோடு நிகராய் நீங்களும் ஏதோ சொல்லிக்கொண்டு இப்போதுதான் என்னுடைய கவிதை பற்றி கருத்துக்கூறபோவதாய் வருகின்றீர்கள். நல்ல விடயம். சும்மா கண்டதை எல்லாம் வாசிக்காது, எல்லோரும் அவரவர் உடல் நலத்தில் கவனமாய் இருக்கவேண்டும்தானே. அதற்குப் பிறகு நான் தேனீயை வாசிக்காதது போல நீங்களும் நான் ‘கவிதை’ என்று கிறுக்குவதை வாசிப்பதை நிற்பாட்டியிருக்ககூடும் என்றாலும் ஒரு குறிப்புக்காய் தொடர்ந்து கொலைகளைப் பற்றி -என்னைப்பாதிக்கின்றபோது- எழுதிக்கொண்டிருந்க்கின்றேன். திருமாவளவன் முல்லைத்தீவு முகாம் சூரியனில் பாலகன் ஒருவன் தற்கொலைப்போராளியாகி மோதியது போல என்று எழுதியதுபோல, நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு முல்லைத்தீவு முகாம் வீழ்ச்சிக்கு தப்பிவந்து ஒரு இராணுவத்தினன் கூறும் செய்தி மட்டும் முக்கியமாகிப்போனதுபோல, என்னுடைய கவிதையின் இயங்குதளம் பொதுமக்களை முன்னிறுத்துவது. திருமாவளவனுக்கு, நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு இராணுவம்/போராளிகளின் மூலம் போரைப் பார்க்கமுடிவது போல நான் ஒரு பொதுமகனினூடாக யுத்தத்தைப் பார்க்கின்றேன். ஒரு பாலியல் வன்புணரப்பட்ட பெண்ணைப்பற்றி எழுதவேண்டிய உந்துதலையோ, பொதுமக்களின் பிணங்களால் ஏற்படும் உந்துதலையோ ‘கவிதை’யாக்கிப்பார்க்கின்ற மன அவசத்தை எனக்கு வாய்த்த யுத்தகால அனுபவம் தருவது ஒரு காரணமாயிருக்கலாம். சக்கரவர்த்தியிற்கு அவரது போராட்டச்சூழல் கொடுத்த உந்துதல் வெருகல் குறித்த கவிதையை எழுதப்பண்ணியிருக்கலாம். நான் சக்கரவர்த்தியிடம் போய் ஏன் நீங்கள் இந்தப்பெண் பாலியல் வன்புணரப்பட்டதைப் பற்றி எழுதவில்லை என்று - அதைப்பற்றி எழுதாது இதைப்பற்றி எழுதுகின்றாயே என்று நீங்கள் என்னிடம் விவாவது போல- கேட்கவும் இல்லை. கேட்கப்போவதுமில்லை. மற்றும்படி போராளிகள்/இராணுவம் என்பதைமீறி, மக்கள் பாதிக்கப்படுவதுதான் அனைத்தையும் மீறி என்னை பாதித்துக்கொண்டிருக்கின்றது. அவர்கள்தான் என்னுடைய முதன்மையான காரணிகள் ஆகின்றனர்.
மற்றும்படி எனது சார்பு புலிச்சார்பு என்பதை நான் மீண்டும் தெளிவாகச் சொல்கின்றேன். சேரனை நான் மூர்க்கமாய் எதிர்க்கின்ற மிகமுக்கிய புள்ளியே இதுதான்… தான் எந்த இயக்கத்தைச் சாராதவன் என்று சொல்லிச் சொல்லியே நழுவுகின்ற மீனாய் அவர் எல்லா விமர்சனங்களிலிருந்தும் தப்பிக்கொள்கின்றார். புலிச்சார்பினூடாக எனது அரசியலை விளங்கவும் வாசிக்கவும் செய்கின்றேன். மேலும் நான் எந்தப்பொழுதிலும் ‘நடுநிலையாளன்’ ‘மனித உரிமைவாதி’ என்று எங்கேயும் என்னை வெளிப்படுத்தியதுமில்லை. எனது புலிச்சார்பு, புலித்தலைமையை வழிபடுகின்றதா, புலி வாலாக உருமாறிக்கொண்டிருக்கின்றதா, புலிகள் செய்யும் அட்டூழியங்களை ஏற்றுக்கொள்கின்றேனா என்பதை நான் எழுதியவற்றை வைத்து நீங்கள் கட்டுடைக்கலாம். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டும், தவறுகளைத் திருத்திக்கொண்டும் எப்போதும் வாழ்வில் தொடர்ந்து நகரவே விரும்புவேன்.
மேலும் சொல்வதனால், ஈழத்தில் இருந்தபோது என்னுடைய இளவயதில் எனக்கு இரண்டு தீர்க்கமான வழிகள் முன்வைக்கப்பட்டன, இலங்கை இராணுவமா அல்லது புலிகளா …நான் புலிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். புலிகளை ஆதரித்து எழுதியதை விட புலிகளை விமர்சித்து எழுதியதுதான் அதிகம் என்று இப்போதும் நம்புகின்றேன். (இப்படி புலிச்சார்பு என்று நான் கூறுவதை என்பதை இங்கேயிருக்கும் புலி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பது -முரணான- வேறுவிடயம், மிக நெருக்கமாய் இருந்த சில நண்பர்களை இப்படி புலிகளை விமர்சிக்கத்தொடங்கியதால் இழந்தது ஒருபுறத்தில் கவலை தரும் விடயமும்கூட). மற்றும்படி ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் அடிக்குறிப்பிட்டு நான் புலிச்சார்புடையவன் என்று எழுதிக்கொண்டிருக்கவேண்டுமா என்பதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களோ தெரியவில்லை.
உங்கள் பின்னூட்டங்கள்/பதிவுகளிலிருந்து நீங்கள் எந்தப்புள்ளியில் நிற்கின்றீர்கள் என்று குழப்பமாயிருக்கின்றது. எல்லோரும் அவரவர் சார்பில் நிற்கவேண்டும் என்று நீங்கள் வழிமொழிவதால் உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் உங்கள் அரசியல் சார்பையும் (புலி சார்பா, எதிரா, அல்லது நடுநிலையா? etc..) பொதுவில் முன்வையுங்கள்.
/சார்புகள் தான் எல்லாவற்றுக்கும் காரணம்; அது உங்களுக்குப் பொருந்துமெனில் எல்லோருக்கும் பொருந்தும். எமது சார்புகளை கடக்கிற நிகழ்வுகள் எம்மை உணர்ச்சிரீதியாவும் தூண்டுகிறது. அந்தவகையில் (நிச்சயமா எனது சார்புகளின் படிக்கு) தம் பெயர்களுக்க முன்னால XXXX இயக்கப் பேரோட தெருவில நாய்களைப் போல செத்துக் கிடக்கிறவர்கள் பற்றி அவர்களுக்கு அர்ப்பணிக்கும் ‘க/விதைகளை எழுதலாம். அவரவர்க்கு அவரவர் உணரச்சிகள் நேர்மையானவை. /
உண்மை. இதை நான் மறுக்கப்போவதில்லை. புலிகளின் தீவிர ஆதரவாளர்களும் எழுதுகின்றார்கள். பிறரும் எழுதுகின்றார்கள். நான், நீ இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று எவரையும் நிராகரித்ததில்லை. ஆனால் விமர்சனங்களுனூடாக ஊடாக அந்தப் படைப்புக்களை விளங்கிக்கொள்கின்றேன். புலியை வெறுக்கின்றேன் என்பவர்களைக் கூட, நீ அப்படியிருக்கக்கூடாது என்று நான் ஒருபோதும் உபதேசம் செய்ததுமில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களுடன் நம்பிக்கையுடன் இருக்கும் சுதந்திரத்தை என்றுமே மறுதலித்ததில்லை. அதனால்தான் புலிகளை கடுமையாக எதிர்க்கின்ற நண்பர்களே பெரும்பான்மையாக இலக்கியத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருப்பதில் என்னளவில் மகிழ்ச்சியான விடயமே.
ஆனால் விமர்சனம் என்பது உணர்ச்சிகளைத் தாண்டி அறிவுத்தளத்துக்கு நகரவேண்டும் என்பதே என் அவா (அது வ.கீதாவின் உரையைக் கேட்டதும் இன்னும் வெளிக்கிளப்ப அதைப் பதிவாய் இங்கே எழுதினேன்). இன்னும் ஏன் புலியெதிர்ப்பாளர்களை நோக்கித்தான் கேள்விகளை எழுப்பினேன் என்றால் அவர்களினூடாகத்தான் நம்பிக்கை அளிக்கும், அடுத்த கட்டத்துக்கு நகரும் அறிவுஜீவிகள் வருவார்கள் என்று -என் புலிச்சார்பின் ஊடாகக்கூட- இன்னும் நம்புகின்றேன். அந்தவகையில், இப்படி குண்டுச்சட்டிக்குள் நின்றுகொண்டு புலி எதிர்ப்பை மட்டும் செய்வதால் நீங்கள் சாதிக்கப்போவதில்லை எதுவுமில்லை என்ற ஆதங்கத்தில் அவர்களை நோக்கி நான் விமர்சனம் வைப்பது எனக்கு என்னளவில் மிக அவசியமாகின்றது.
அதேபோன்று நான் புலி ஆதரவுப் பிரச்சாரங்களினூடாக சுபத்திரனை விளங்கிக்கொண்டேன். அப்படியே தராகியை புலி எதிர்ப்பு ஊடகங்களினூடாக விளங்கிக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டு பேரும் முக்கியமானவர்களே, துரோகி-பாஸிஸ்ட் என்ற வார்த்தைப் பிரயோகங்களை மீறி நான் இவர்களை மட்டுமல்ல எல்லோரையும் விளங்கிக்கொள்ளமுயல்கின்றேன். அவ்வளவுதான்.
…..
எதை எழுதினாலும்
போலியாக இருக்கிறது
அல்லது
போலிகளைப் பேசுவதே
கலகமாகிறத
‘இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்’
அற்புத தரிசனங்கள் தருபவர்கள்
வரலாற்றை எழுதவும்,
பெண்களை
சிதைத்துச்செல்பவர்கள்
திசைகள் எங்குமலைந்து
அரசியல் பேசவும்
செய்யும் விசர்ப்பொழுதில்
எதைப் பேசினாலும் எடுபடாத
தோள்கள் தினவெடுத்தால்
கொன்று குவிக்கவும்
குறிகள் விறைத்தால்
புணர்ந்து களிக்கவும்
தமிழரென நாமமது
தரணியிலே கொண்டோம்
உமக்காய்.
கொல்லுங்களடா
கொல்லுங்களடா
வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களட
வரலாற்றின்
இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும்
எழுந்துவந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும்
இந்தப்பாவிகள
சுதந்திரக்காற்று பனிப்புலத்தில்
சுழன்றடிப்பினும் களிப்புறோம்
மனிதர்களையும்
இளமையையும் தொலைத்துவிட்ட
கடந்தகாலத்துயர்
விரும்பி யாசிக்கும்
மரணத்த
தங்கையிலும் துணையிலும்
அதிகாரம் அத்துமீறாதவரை
நுரைக்கும் பியருடன்
ஆட்டுக்கறி சுவைத்து
அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாம்
அரசியல் அறம்.
(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட தர்சினிக்கு…)
….
சில தனிப்பட்ட காரணங்களால் அனேக கவிதைகளை எனது தளத்திலிருந்து எப்போதோ எடுத்துவிட்டிருந்தேன். இங்கே வாசிப்பு இலகுவாயிருப்பதற்கு இடுகின்றேன். நன்றி
21
சாந்தகுணசீலதேவன் says:
May 16th, 2006 at 11:22 pm edit
நீங்கள் பேசிக்கொள்ளும் பிற் fit ஆ pit ஆ என்று அறியத்தருவீர்களா?
22
வசந்தன் says:
May 17th, 2006 at 10:23 am edit
//அட நாசமாய்போனவர்களே ஒரு கொலை நடந்தால் முதலில் அனைத்து விமர்சனங்களைத்தாண்டி கண்டனத்தைச் சொல்லி முதலில் மனிதாபிமானத்துடன் இருக்க முயற்சி செய்யுங்களடா என்றுதான் மனதில் கூறிக்கொண்டேன்.//
இதென்ன கூத்து?. அப்படி எதிர்பார்க்க முடியுமா?
சரத் பொன்சேகா செத்தால் என்னிடமிருந்து கண்டனத்தைப் பெறுவீர்களோ?
சும்மா ஒரு பம்மாத்துப் பதிவாவது எதிர்பார்ப்பீர்களா? (சந்தோசத்தை வெளிப்படுத்தாமலிப்பதே பெரிய விசயம்)
இப்படித்தான் எல்லோரும். எல்லாக் கொலைகளையும் எதிர்க்கிறோம் நாங்கள் சொல்வது வடிகட்டின பம்மாத்து. (அப்படிக் கண்டிப்பதுதான் மனிதாபிமானமென்றால், என்னிடம் அது இல்லை. இங்கே எத்தனை பேரிடம் அது இருக்கிறதென்று கேட்டு மற்றவர்களைப் பொய் சொல்ல வைக்க விரும்பவில்லை)
அப்படிச் சிலருக்குச் சொல்லமுடியும். யாருக்கு? இலங்கை எங்கிருக்கென்றே தெரியாத, உலகின் எங்கோ ஒரு மூலையில், காட்டில் இருக்கும் ஒருத்தன் சொல்லலாம், ‘இலங்கையில் நடக்கும் எல்லாக் கொலைகளையும் எதிர்க்கிறேன் என்று’.
ஆனால் ஏதோவொரு விதத்தில் சம்பந்தப்பட்ட யாருமே அப்படிச் சொல்லமுடியாது. அது நடுநிலை மத்தியஸ்தம் என்று வருபவர்களோ, கண்காணிப்புக்குழுவாக வருபவர்களோ யாராக இருந்தாலும் முடியவே முடியாது. அதுதானே நடக்கிறது இலங்கையில்?
இந்த நிலையில் எல்லாக் கொலைகளுக்கும் எதிர்ப்பும் கண்டனமும் எல்லாரிடமிருந்தும் எதிர்பார்ப்பது முடியுமா? உங்களால் பதிவுபோடுவதைத் தாண்டி மனத்தளவில் முடியுமா? ஆனால் இதைச் சொல்லும் நேர்மை பலரிடமில்லை.
“நடுநிலைமை” என்ற வார்த்தைக்குள் பம்மாத்துப் பண்ணத்தான் முடிகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரனுக்கே முடியவில்லை. ஏதோவொரு வகையில் புலியாலோ இராணுவத்தாலோ இரண்டுதரப்பாலுமோ பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா? இந்தவிசயத்தில் நீங்களும் “நடுநிலைமைப் போர்வையை”ப் போர்த்த முயல்கிறீர்கள்.
ஆனால் “நடுநிலைமை” என்ற போர்வைக்குள் இப்படிப்பட்டவர்கள் ஒளிந்திருப்பது குறித்துக் கேள்வி கேட்க வேண்டும்.
வெளிநாடுகள் புலிகளைத் தடைசெய்வதைப் பார்த்துப் பூரித்துப் போகும் ஒருவன்/ஒருத்தி எப்படி நடுநிலைவாதியாக இருக்க முடியும்? எப்படி ஈழத்தமிழர்கள் மேல் பரிவோ அக்கறையோ கொண்டவர்களாக இருக்க முடியும்? (இந்த விசயத்தில் புலியெதிப்பைத்தாண்டி ஈழ மக்கள் எதிர்ப்பு/அழிவு என்ற தளத்துக்குச் செல்கிறார்கள் இவர்கள்.)
அதைத்தான்,
// இஞ்சை பாருங்கோ, புலிவால்களோ, புலித்தலைமையை கொண்டாடுபவர்களோ தாங்கள் ‘நடுநிலைவாதிகள்’ என்று அடிக்கொரு தரம் மேற்கோள் காட்டிக்கொண்டிருப்பதில்லை, தங்களை ‘மனித உரிமைவாதிகளாய்’ எங்கும் பிரகடனப்படுத்துவதில்லை. அவர்கள் நேர்மையாகவே நாங்கள் புலிகளை ஆதரிக்கின்றோம், புலித்தலைமையை கேள்விகள் இல்லாது ஏற்றுக்கொள்கின்றோம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றார்கள். இந்த ‘நடுநிலைவாதிகளில்’ பலர் புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் செய்துகொண்டு நாங்கள் ‘நடுநிலைமைவாதிகள்’, ‘மனித உரிமைவாதிகள்’ என்று கூறுவதைத்தான் கட்டுடைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என்கின்றேன். மேலும் ‘நடுநிலைமைவாதிகள்’ என்று கூறிக்கொள்வது ஒருவித பாஷனாகிப்போய்க்கொண்டும், தமிழகத்தில் பேட்டிகள் கொடுப்பதற்கு இல்குவான உத்தியாகவும் இருக்கவும் செய்கின்ற நிலையில் - அதை சாட்டாக வைத்து முழுமக்களுமாய் தங்கள் ‘நடுநிலைமையே’ சரியென்று முழங்கிக்கொண்டிருக்கின்றபோது இவர்கள் உண்மையில் யார் என்று வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றையபொழுதில் இன்னும் அவசியமென்றே நினைக்கின்றேன். அதுகூட ஒருவகை அரசியல் அறம் என்றே இன்னும் நான் நம்புகின்றேன். புலியை ஆதரிக்கின்றேன், எதிர்க்கின்றேன், அரசு சார்பாய் இயங்குகின்றேன் என்பவனை கட்டுடைக்கவேண்டிய தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் கருத்தை நேரடியாகச் சொல்கின்றார்கள். அதனூடாக நாம் அவர்களை விளங்கிக்கொள்ளவும் விமர்சிக்கவும்முடியும். //
என்று சொல்கிறீர்கள் என்றளவில் ஒத்துப்போகிறேன்.
********************************
//உங்கள் பின்னூட்டங்கள்/பதிவுகளிலிருந்து நீங்கள் எந்தப்புள்ளியில் நிற்கின்றீர்கள் என்று குழப்பமாயிருக்கின்றது. எல்லோரும் அவரவர் சார்பில் நிற்கவேண்டும் என்று நீங்கள் வழிமொழிவதால் உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் உங்கள் அரசியல் சார்பையும் (புலி சார்பா, எதிரா, அல்லது நடுநிலையா? etc..) பொதுவில் முன்வையுங்கள்.//
இக்கேள்வியை எல்லோரிடமும் கேட்காதீர்கள். பலரால் பதிலளிக்க முடியாது;-) ஆனால் பெட்டையை நோக்கிக் கேட்கப்படவேண்டியதே.
******************************
சாந்தகுணசீல(த்)தேவன்,
நீங்கள் கேட்டது சரியான கேள்வி. சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என்று நினைக்கிறேன்;-) ஆனால் இங்கே ‘அரசியல் சாக்கடை’ என்றெல்லாம் சொல்லி ஒதுங்க முடியாதுங்கோ.
******************************
டி.சே.
என்ன இது?
‘ரீச்சர், பென்சில் களவெடுத்திட்டான்’ எண்ட கணக்கில பிரச்சினை போகுது?;-)
23
karthikramas says:
May 17th, 2006 at 11:07 am edit
டீசே, பொடிச்சி,
பொடிச்சியின் கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டாயினும் இத்த்கைய விவாத்ங்களை, அலசல் களை வெகுவாக வரவேற்கிறேன். நீண்ண்ண்ண்ண் ட பதிவுக்கு நன்றி ப்ரோ.
24
karupy says:
May 17th, 2006 at 12:11 pm edit
டீசே, ஜீவனுக்கு அவருடைய புத்தகம் திருப்பிக் கிடைத்து விட்டது என்று அறிந்து மிகவும் சந்தோஷமா இருக்கின்றது. அவர் அன்று பட்டபாடு தெரிந்தால் கூறுகின்றேன். தர்ஷனுக்குத் தெரியப்படுத்தி விட்டீர்களா? அவரும் மிகவும் குழப்பநிலையில்தான் வீடு போய்ச் சேர்ந்தார். இருந்தும் புத்தகத்திற்கு என்ன நடந்தது எப்படிக் கிடைத்தது என்றும் அறிய ஆவலாய் உள்ளேன்.
அடுத்து பல டொலர் செலவில் தனது ஓவியங்களுக்கு பிரேம் போட்டுப் பார்வைக்கு வைத்திருந்த ஜீவன் முதல் இரண்டு நாளும் யாராவது தட்டி உடைத்து விடுவார்களோ என்று அடிக்கடி மிகவும் அவதானமாய்க் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றாம் நாள் நிகழ்ச்சி நிறைவிற்கு வந்த நேரம் ஒரு முதியவர் ஒரு ஓவியத்தை தட்டி உடைத்து விட்டார். அந்த நேரம் பார்த்துத்தான் புத்தகமும் காணாமல் போய் இருந்தது.
மேலும் ம.கண்ணன் பேசுகையில் புகழேந்தியின் சிறுபிள்ளைக் கிறுக்கல்களுக்குக் கிடைக்கும் கவனமும், அவதானிப்பும் மிகவும் தரமான ஓவியர்களான கனடாவில் வசிக்கும் கருணா, ஜீவன் போன்றவர்களின் ஓவியங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டி, இவர்களின் ஓவியங்களில் சிலவற்றை அறிவிப்புகளில் பார்த்த போது அதன் தரத்தைத் தெரிந்து கொண்டும், சனாதனனின் ஓவியம் பார்க்கும் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் நம்பிக்கையிலும், மேலும் இன்னும் பல இலக்கிய நண்பர்களைச் சந்திக்கமுடியும் கனடா தமிழ் புத்தக நிலையங்களில் ஈழத்துப் படைப்புக்கள் பலவற்றைப் பெறலாம், பிடித்த ஆங்கிலப் படைப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும்தான் கனடா வரத் தான் சம்மதித்ததாக அவர் கூறியதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
அடுத்துத் திருமாவளவனின் //புகலிட இலக்கியம் நீத்துப்போய் விட்டது உண்மைதான். இதற்காண காரணம் தமிழக இலக்கிய மேலாண்மைதான்\\
இதற்கு வ.கீதாவின் //பாலஸ்தீனியப் படைப்புக்களுக்கு நிகராய் வீரியத்துடன் யுத்த அவதிகளினூடாக வெளிவந்திருக்கும் சாத்தியமுள்ள ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் ஏன் நனவிடைதோய்தல்களுடன் மட்டும் தேங்கிப்போயிருக்கின்றன என்ற கேள்வியை நமது ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் அனைவரும் தமக்குள் எழுப்புவது அவசியமாகின்றது\\ இந்தக் கருத்துத்தான் பொருந்துமே தவிர திருமாவளவன் சொன்ன கருத்துடன் என்னால் உடன்பட முடியாமல் இருக்கின்றது. சோபாசக்தியால் முடிகின்றதுதானே. அங்கே தமிழக மேலாண்மை எப்படி இல்லாமல் போனது?
பேசப்பட வேண்டும் என்றோ, எப்படியான கதைகள் கவிதைகள் இப்போது கவனத்தை எடுக்கின்றது என்றோ வரிந்து கொண்டு எழுதுதல் அபாயமானது. இயல்பாய் உண்மை நிலையில் எழுதும் போது அது தரமானதாக அமைந்துவிடும்.
25
டிசே தமிழன் says:
May 17th, 2006 at 1:24 pm edit
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
….
பதிவையும், (பெருமூச்சு விடுகின்ற அளவுக்கு) எழுதிய மேலேயுள்ள பின்னூட்டத்தையும் விட, இந்தக்கணத்தில் எனக்குச் சொல்ல வேறு ஒன்றுமில்லையென நினைக்கின்றேன். அதுதான் எனது பார்வையும் நிலையும் இப்போதைக்கு. ஆனால் அதற்காய் மற்றவர்களின் பார்வைகளை மறுதலிக்கின்றேன் என்று அர்த்தம் அல்ல. நன்றி.
….
கறுப்பி, ஜீவனின் புத்தக விடயம் தொடர்பாய்…வேறு புத்தகங்களோடு சேர்ந்து அந்தப் புத்தகமும் என்னிடம் ‘வந்திருந்தது’. விழா முடிந்து வீடடைவதற்கு முன்னரே இதுகுறித்து ஜீவனுக்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தேன். ஆரம்பத்தில் இருந்தே ஜீவனின் ஓவியங்களோடும் புத்தகங்களோடும் விளையாடிக்கொண்டிருந்தவன் என்றவகையில் இதற்கு முழுப்பொறுப்பெடுத்து, அசவுகரியங்களுக்காய் ஜீவனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன். ‘தம்பி நீ சும்மா இப்படி இருக்காமல், சைக்கோலஜி படித்து சமூகத்திற்கு உருப்படியான காரியம் எதையாவது செய்’ என்று அறிவுரையும், வரவர உன்னுடைய கவிதைகள் ஒன்றுமே பிடிக்கவில்லையென (ஒரு பக்கமாய் இழுக்கின்றதென்று) விமர்சனமும் வைக்கின்ற அண்ணாவுக்கு தம்பியின் குழப்படிகள் புரியாதா என்ன :)? ((தர்சன் என்னோடு சேர்ந்து ஒரு விடயம் செய்வதாய்க்கூறிவிட்டு, ட்ராமா ரிகர்சலுக்கு போகப்போகின்றேன் என்று ஓடிக்கொண்டிருக்கின்றார். ஒருக்காய் என்ன என்று கேளுங்கோ கறுப்பி :) ))
26
டிசே தமிழன் says:
May 17th, 2006 at 1:55 pm edit
ஒரேயோரு விடயம் மட்டும்….
/ ம.கண்ணன் பேசுகையில் புகழேந்தியின் சிறுபிள்ளைக் கிறுக்கல்களுக்குக் கிடைக்கும் கவனமும், அவதானிப்பும் மிகவும் தரமான ஓவியர்களான கனடாவில் வசிக்கும் கருணா, ஜீவன் போன்றவர்களின் ஓவியங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டி, இவர்களின் ஓவியங்களில் சிலவற்றை அறிவிப்புகளில் பார்த்த போது அதன் தரத்தைத் தெரிந்து கொண்டும்…/
கண்ணனின் உரையில் நான் குறிப்பிட மறந்த முக்கியபுள்ளியை நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் நன்றி கறுப்பி.
….
புகழேந்தியை கீழிறக்கித்தான் கருணாவையும் ஜீவனையும் பாராட்டவேண்டும் என்ற கருத்தில் எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலும், ஜீவா, கருணா போன்ற -நான் ஒருகாலத்தில் தொலைவில் இருந்து மிகவும் இரசித்தவர்களை- நண்பர்களாக்கி நட்பாய் பழகவும், அவர்களின் அனேக ஓவியங்களை நேரில் அசல் பிரதிகளாய்ப் பார்க்கவும் (ஜீவன் சுடச்சுட வரைந்து முடிந்தவுடனேயே சில ஓவியங்களை பார்க்கவும்..) சந்தர்ப்பம் வாய்த்ததில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி உண்டு.
….
கண்ணனுக்கு புகழேந்தி சார்ந்து நிற்கின்ற தமிழ்த்தேசியம் உவப்பாய் இலலாத காரணத்தாலும் புகழேந்தியின் ஓவியங்களை நிராகரிக்கக்கூடும் என்றாலும், எனக்கு புகழேந்தியின் ஓவியங்களும் பிடிக்கும். மேலும் 83ம் ஆண்டு இலங்கை கலவரம், குஜராத் பூகம்பம் என்று அவர் தன் உணர்வுகளை ஓவியங்களாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காய் ஆதரவுக்கரம் கொடுத்தவர் என்பதில் அவர் மீது தனிப்பட்ட மரியாதை எனக்கு உண்டு. நன்றி.
27
Snegethy says:
May 17th, 2006 at 2:51 pm edit
ஒரு நாள் அமர்வுக்கு மட்டுமே வந்ததால் தமிழியல் மாநாடு பற்றி அறிய வேண்டியது நிறையவுள்ளது.டிசேயைப் போல கறுப்பி மதியக்காவும் எழுதுங்கோவன்.
மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த ஜீவனின் ஓவியத்தைப் பார்க்க எதுவும் புரியவில்லை அவரிடம் கேட்டோம் என்ன பள்ளிவாசல் இருக்கு கீழே மனித உருவங்கள் மாதிரி..என்ன இது? பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த பலர் கொல்லப்பட்ட சம்பவத்தைதான் இதில் கீறியுள்ளேன் என்றார்.
நானொன்றும் படம் கீறக் கற்றுக்கொள்ளவில்லை சும்மா இயற்கைக் காட்சிகளைத்தாக் கீறினேன் காலம் போக பல விடயங்களையும் வரைகிறேனென்றார்.மற்ற ஓவியர்களைப்போல கோபம் என்றால் சிகப்புத்தான் பூச வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் எனக்கில்லை..என் படங்களைப் பார்த்தால் கோபத்தைப் பிரதிபலிக்க நீல நிறத்தையும் பயன்படுத்தியிருப்பேன் என்று சொன்னார்.
28
டிசே தமிழன் says:
May 17th, 2006 at 3:06 pm edit
சினேகிதி, வெள்ளி மாலை நடந்த நிகழ்வில் ஜீவனின் ஓவிய persentation அரங்கில் நடைபெற்றது. முக்கியமாய் அவர் ட்சுனாமி குறித்து வரைந்த ஓவியங்கள் பரவலாய் பலரது பாராட்டைப்பெற்றிருந்தது (எனக்கும் அவை மிகப்பிடித்திருந்தன). இன்னும் நான் தனிப்பட்டளவில் பார்த்து இரசித்த சில ஓவியங்களை ஏன் வைக்கவில்லை என்று கேட்டபோது நேரங்காணாததால் அவற்றை பொதுவில் அளிக்கவில்லையென அவர் கூறியதாய் நினைவு. அண்மைக்காலத்தில் அவர் வேறொரு தளத்தில் வரையத்தொடங்கியுள்ளார் என்று நினைக்கின்றேன். எனக்குள்ள ஓவிய அறிவில் என்னால் அவற்றை முழுமையாய்ப் புரிந்துகொள்ளமுடியாவிட்டாலும், ஜீவன் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் வரைந்துபார்க்க முயற்சித்துக்கொண்டிருப்பது நல்லதொரு விடயமே.
29
ranji says:
May 18th, 2006 at 3:23 am edit
இன்று புலி சார்பானவர்களும் புலிஎதிர்ப்பாளர்களும் ஒரே மாதிரித்தான் பிரச்சினையை பார்க்கிறார்கள் இனி இல்லையென்ற படுபிற்போக்குத்தனமா ஆதரவு hபடுபிற்போக்குத்தனமான எதிர்ப்பு யார் இங்கு மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். யாரும் இல்லை புலி எதிர்ப்பு வாதிகள் ஜேவிபியயுடன் அரசாங்கத்துடன் சேர்ந்தாவது புலியை எதிர்ப்பதில் உள்ளார்கள் புலிகளோ துரோகிகள் பாஸிட்டுகள் என்று சொந்த தமழ்மக்களைனயே அளிக்கிறார்கள். ஒரு கர்ப்பிணப் பெண் தற்கொலைதாரியாக போனது பற்றி யார் வாய் திறந்தார்கள் அல்லது இராணுவத்தால் பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தர்சினிக்காக இவர்கள் எல்லாம் குரல் கொடுத்தார்களோ அல்லது மட்டக்களப்பில் சிறுவர்களை கடத்திக்கொண்டு போவது பற்றி வாய்திறப்பதேயில்லையே மக்களை கேட்டுப்பாருங்கள் ஐயோ சாமி எங்களை நிம்மதியாக இருக்கவிடுங்கோ போரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எனத் தான் அழுகிறார்கள்.
(மற்றும்படி போராளிகள்/இராணுவம் என்பதைமீறி, மக்கள் பாதிக்கப்படுவதுதான் அனைத்தையும் மீறி என்னை பாதித்துக்கொண்டிருக்கின்றது. அவர்கள்தான் என்னுடைய முதன்மையான காரணிகள் ஆகின்றனர்.)
ranji
30
P.V.Sri Rangan says:
May 18th, 2006 at 7:31 pm edit
புலிகளோ துரோகிகள் பாஸிட்டுகள் என்று சொந்த தமழ்மக்களைனயே அளி(*-*)க்கிறார்கள
Ranji,We are all leaves on a tree,not one similar to the other,and yet all equally important to the whole!:-))))))
31
பொடிச்சி says:
May 23rd, 2006 at 12:47 am edit
Will write on this tomorrow.
thanks
32
தமிழ் வலைப்பதிவு » டொராண்டோ தமிழியல் மாநாட்டில் வ.கீதா ஆற்றிய உரை says:
May 24th, 2006 at 3:14 pm edit
[…] கீதாவினுடைய உரை குறித்த தொடர்-உரையாடலை டீஜே தமிழனின் வலைப்பதிவில் காணலாம். […]
33
sonador says:
May 25th, 2006 at 12:43 pm edit
(0)
-பதிவுகள் (www.pathivukal.com) விவாதக்களம் முன்னர் படித்தளவில்- எனக்குத் தெரிந்து (நினைவில் இருந்து) அதில் நீங்கள் ஒரு கருத்துத்திணிப்பிற்கும் ஆட்பட்டதாகவோ UTHR (http://uthr.org)—போன்ற அமைப்பை “நம்பி”யதாகவோ இல்லை. கூல் சகோதர்கள் எங்கிருக்கிறார்கள் போன்றதான (UTHR-குறித்து த.வி.பு.ஆதரவாளர்களிடமிருந்து வருகிற வழமையான) கேள்விகளையே அதில் படித்திருக்கிறேன்.
//இந்த அறிக்கை எழுதுகின்றவர்கள் எல்லாம் எந்தச் சார்பும் இல்லாது இருப்பவர்கள் என்று என்னைப்போன்று நம்பிக்கொண்ட பலரை இவர்களைப்போன்றவர்கள் ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்களை நம்பி மக்கள் போனால், அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை போலத்தான் ஆகிப்போகும்.//”
2004-ஆம் ஆண்டு பதிவுகள் இணையக் களத்தில் உங்களுக்கு UTHR குறித்து இருந்திருக்கக்கூடிய சந்தேகம் (தேவையான ஆதாரம் கிடைத்து) தெள்ளத் தெளிவாக கவிஞர் சேரனால் 2006-இல் போக்கப் பட்டிருக்கிறது; இதில் -லொஜிக்கின் படிக்கு- நீங்கள் நம்பி பின்னர் ஏமார்வதற்கு ஒன்றுமேயில்லை.
நம்பாத (ஃ = சந்தேகித்த) ஒன்றை நம்பிய (ஃ = சந்தேகிக்காத) ஒன்றாகப் போடப்பட்டிருந்ததாலேயே உங்கள் சார்பு குறித்துக் கேட்கத் தோன்றியது, தெளிவு படுத்திக் கொள்ள. அதிலிருந்து சில கருத்துக்களைக் கூற.
(1)
பதிவுகள் (www.pathivukal.com) விவாதக்களம் “வெறுமை”யில் போவதால்,அதை “மீளவும்” -படிப்பதற்கான தேவை இருப்பதுபோல் படாவிட்டாலும்- படிக்கமுடியவில்லை..
இந்தப் பதிவைப் படிப்பவர்கள் எல்லோரும் பதிவுகள் விவாகக் களத்தைப் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் “சில ஆவிகள்” குறித்த உங்களது குறிப்பை புரிந்து கொள்ளல் சிரமமாய் இருக்கும். -அந்த விவாதத்தைப் படித்திருக்கிற எமது- உரையாடல் எமக்கு மட்டுமானதாக இருந்தால் இப்படியான குறிப்புகள் உதவலாம்; அல்லாததால், நீங்கள் இழுக்கிற நபர்கள் குறித்த (எனக்குத் தெரிந்த) முழுமையான பெயர்கள் தருகிறேன்:
குறிப்பிடுகிற “ஆவி” வருகிற, சுபத்திரனின் ஆவி என்றொருவர், அதுபோல “மாற்றுக் கருத்தாளர்கள்” பிரிவில் இணையக் கூடியவர்களாக குருஅண்ணை, விகடகவி என்பவர்கள்.. வேறு பெயர்கள் ஞாபகமில்லை; த.வி.புலிகளின் வன்முறைகள் பற்றி தமது அபிப்பிராயங்களை முன்வைப்பவர்களாக இருந்தார்கள். ஒரு புறம் UTHR இலிருந்து வெட்டி ஒட்டினார்கள்; அந்த ‘மாற்றுக் கருத்து” வகைப் பிரிவுக்குள் வராதவர்கள் http://www.tamilnet.com/ இலிருந்து வெட்டி ஒட்டுவது போல இது நடக்கும்.
புலிகளின் ஊடகங்கள்போல ஏன் மாற்றுக் கருத்தாளர்கள் கூறுகிறவையும் தமது சார்பை வெளிக்காட்டக் கூடாது என்கிற கேள்வி சரியாகவே படலாம்-
எனக்குத் தெரிந்து சரிநிகர் போன்றவற்றின் (சந்திரிக்காவுடன் கொஞ்சிக் குலாவியது போன்ற வார்த்தையாடல்களுீடாக நீங்கள் சித்திரிக்கிற) “பின்னணி” தொடர்பாக ஒரு தமிழகப் சிற்றிதழில்கூட சேரனை -புலம்பெயர் யாரோ ஞாபகமில்லை- பேட்டியெடுத்தது 3-4 வருடங்களிற்கு முன்ன படித்தது ஞாபகம்.
—ஒவ்வொன்றினதும் பின்னணிகள் பற்றி விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து (மாற்று) விமர்சனம் இல்லை; அவை வைக்கப்படவேண்டியவையே, சந்தர்ப்பங்களில் வைக்கப் பட்டுமிருக்கின்றன.
ஆனால்
அந்தப் பின்னணியில் - இன்னார் ஆதரவு ஆசாமிகள் இருக்கிறார்கள் என்பதன் அர்த்தம் வி.பு.கள் குறித்து அதிலிருப்பவையை எல்லாம் “பொய்யாக்க” உதவுமென்றாலும், அவை எத்தனை வீதம் “பொய்கள்” என்பதைக் குறித்த உரையாடலே -மக்கள் குறித்த அக்கறையாக - எந்தக் காலத்திலும் முக்கியமானது. அநியாயமாக மனிதர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பதே -மரணத்தை தவிர்க்க முடியாத யுத்தக்களத்தைத் தவிர - கொலைகளை விரும்பாதவர்கள் செய்யவேண்டியது (அறிக்கைகள் இன்ன பின்னணி என “கண்டபிற்பாடு” முற்று முழுதாக நிராகரிப்பதூடாக கொலைகளை ஆதரிக்காமல்) … அதுவே “புரிந்து”கொள்கிற, புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் செய்யக் கூடியது.
2002-இல் ஈழத்தில் சந்தித்த அங்கிருக்கக்கூடிய எழுத்தாளர்களிலொருவரே கூட, இது போன்ற அறிக்கைகள் “ஏன் புலிகள் செய்வதை மட்டும் சொல்கின்றன” என்றுதான் கேட்டனரே தவிர, கூல் எங்கிருக்கிறார் என்றோ, அதிலிருப்பவை குறித்த “நம்பகத்தன்மை”யிலோ தொங்கவில்லை (அங்கிருந்துகொண்டே இப்படிக் கருத்து வைத்திருப்பது பெரிய விடயமாகப் படுவதால் சொல்கிறேன்).
“மாற்று” ஊடகங்களின் குரலின் தேவையை எந்தப் பின்னணி சொல்லியும் மறுக்க முடியாது; அமெரிக்க அரசுசாரா நிறுவனங்கள் எனப்படுகிறவை “வளரும்” (எனப்படுகிற) நாடுகளில் செய்கிற சுரண்டல்கள் (தொண்டர்களாக இருக்க (volunteer) பணம் கொடுக்கிற NGO-க்களின் வருகையால் ‘சமூக பிரக்ஞை’யுடைய தொண்டர்களது வருகை குறைந்து, பொருளாதாரத்தை முன்னிறுத்திய மாணவர்கள் வருவது போன்றனவில் ஆரம்பித்து) என்பனவை அறிந்திருக்கிற போதும், “மற்றவர்களிற்கு” மட்டும் மனித உரிமை போதிக்கிற சிந்தாந்தத்தில் ஊறிய நாடுகளிலிலிருந்து வருகிற குழுக்களாலேயே( அல்லது குழுக்கலாலும்தான்) ஈராக் Abu Ghraib சிறைக்கூட சித்ரவதைகளோ, பிற மக்கள் உரிமை மீறல்களோ வெளிவந்தன, வெளிவருகின்றன. கியூபாவில் இருக்கும் அமெரிக்க guantanamo bay சிறைக்கூடங்கள் பற்றியும் சிறு குழுக்களின் முயற்சியிலேயே தெரிய வருகிறது.அப்படியாக (சிறிய அளவிலேனும்) உலகில் “வெளி”வருகிற உண்மைகளுடைய பின்னணியும் “பிரச்சினை”க்குரியதான போதும், அவையே எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கிறவர்கள் சார்பான தவிர்க்க முடியாத வழிகளாக இருக்கின்றன.
(2)
நான் எந்த “புதிதாய்” வந்தவர்களுக்கும் எழுதுமளவு அனுபவம் வாய்ந்த, கற்பிக்கும் திறனுடைய “உண்மைகளை” தெரிந்த ஒருவராக என்னை “முடிவு” செய்யவில்லை. அத்தோடு என்றோ ஒரு போழுதும், ” ஒரு இலக்கிய/அரசியல் உலகில் புதிதாய் நுழைகின்ற ஒருவளாய் (சரமாரியாக வார்த்தை நளினங்களுக்கும், தத்துவார்ந்த சிக்கல்களுக்குள்ளும் சிக்கிக்கொண்டவளாய்)” நுழையவோ வெளியேறவோ இல்லை.
-எதாலும் நியாப்படுத்திவிட முடியாத - எல்லாவிதமான வன்முறைகளையும் வெறுக்கிற ஒருவராய், சுதந்திரமான இந்த இணையத்தில், “இந்திய நண்பர்களுக்காக” நான் எந்த எந்த உண்மையை “விளக்க” வேண்டுமென்பது பெரும் கேள்வியாக இருக்கிறது (கீழே விரிவாக).
இணையத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போராட்டம் சார்ந்த பிரச்சினைகளை அணுக விரும்பாததாலேயே (மூக்கன் (
http://dsonador.blogspot.com/2004/01/talking-to-me.html) போன்றவர்களின் தளத்தில் நடந்திருக்கக்கூடிய “விவாதம்” -அதிலிருந்த புரிதல்- மிகவும் அச்சுறுத்தியதாலும்(எதிர் அர்த்தத்தில்)) பல விசயங்களைப் பேசவில்லையே தவிர அவை குறித்து எனக்கும் “கருத்துக்கள்” இருக்காது என நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!
எனது சார்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள்.
எல்லோருக்கும் தமது சார்பை “வெளிப்படையா”க் கூறுவது சுலபமல்ல என்றால் அதற்கு நிறைய நியாயமான காரணங்கள் உண்டு. சரி அல்லது தவறு என்று இரண்டு பக்கத்தில ஒரு பக்கத்தத் தேர்வது வாழ்க்கையில் சிரமமான காரியம் கிடையாது!
எப்படியோ, எனது சார்பு:
வலைப்பதிவொன்றில் ஒரு ஈழப் பதிவர் ஒருபோது “எமது இராணுவம் விடுதலைப் புலிகள்” என எழுதியிருந்தார்.
அதை முற்று முழுதாக ஒத்துக்கொண்டு, எனது இராணுவத்தின் பிரச்சினைகளை, அதன் மீதான ஆட்சேபணைகளை (யாரோ அல்லது எனக்குப் படுகிறபோது நானேயோ) எழுதுவதும் பேசுவதும் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதிலும் –சில உண்மைகளை பேசக் கூடாது — போன்ற மனத்தடைகளோ சுயதணிக்கைகளோ இல்லாமல் பேச வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது.
அதனாலதான் ஈழம் சார்ந்து -பிற விடயங்கள் போல - தடையின்றி எழுத முடியாமலிருக்கிறது, அதனாலேயே (எழுத வேண்டிய) பல இடங்களில் அதைத் தவிர்த்திருக்கிறேன்.
மற்றபடி, இன்னொரு புறத்தில்,
பாருங்கள், தமிழ் தேசீய ஆண்களின் உணர்ச்சிவசப்படுதல்களுக்குத் தகுந்து (அவர்கள் விரும்புகிற மாதிரி எல்லைக்குள் நின்று) சிந்திக்க முடியாது. (சாத்தியப்பட்டால்!) வருகிற தமிழீழம் சகலவிதத்திலும் சமத்துவ மிகுந்ததான நம்பிக்கை தோன்றாததாலும், வர முன்னையே, அவர்கள் செய்கிற காரியங்களைப் பார்க்கிறபோது ஈழத்தைச் சேர்ந்த பெண்ணாய் எழும் ஆட்சேபங்கள் எதிர்ப்புகள் என நிறைய. யுத்த பூமியில் இல்லாத ஒருவராய் செய்யக் கூடியது “நேர்மையாய்” மனித அழிவை அணுகுவதும் அதை எதிர்ப்பதும் மட்டுமே என நினைக்கிறேன். “வந்த பிறகு பார்க்கலாம்” என்ற தேர்வுக்குள் நிறைய கொலைகளை ஆதரிக்கவேண்டுமென்றால் அதை செய்ய விரும்பவில்லை.
(3)
//ஏன் நான் இப்போது சேரனின் வார்த்தைளோடு வருகின்றேன் என்றால் அவர் தனது சரிநிகர் சஞ்சிகையில் இவற்றை -சந்திரிக்காவின் ஆதரவு பின் தளத்தில் இருக்கின்றது என்று தெரிந்துகொண்டே- வெளியிட்டிருக்கின்றார். எவரும் எந்த சார்போடும் இருப்பது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இந்த ஆசாமிகள் சந்திரிக்காவுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டுதான் இந்த அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள் என்ற உண்மையை வாசிப்பவருக்கு பொதுவில் வைப்பதுதான் பத்திரிக்கை அறம் என்று நினைக்கின்றேன். இன்று புலிகளின் ஊடாக அறிகைகள் வரும்போது பொது வாசகருக்கு இது புலிகளின் அறிக்கை என்று தெளிவாகத் தெரிவதுபோல, அந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளும் அதன் அடிப்படையில் -அரசு சார்பில் வெளிவருகின்றன என்று கூறப்பட்டு- வெளிவந்திருக்கவேண்டும் என்பதே எனது கருத்து. அதைத் தெரிந்துகொண்டே மறைத்துக்கொண்டு வெளியிட்ட சரிநிகரும், அதைக் தெய்வமந்திரமாக்கி ‘ஆவியாகி’ காவிக்கொண்ட பிற ‘நடுநிலையாளர்களும்’ ஏன் அதை மறைத்தார்கள் என்ற கேள்விகள் முதலில் எழுப்பப்படவேண்டும். //
சரீ..
//புலிகளின் அறிக்கைகள் போல, இந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளும் ஏதோ ஒரு சார்பினூடாகவே வெளிவந்துதுகொண்டிருப்பதை மறைத்து, ஏன் தாம் எந்தச்சார்பில்லாதும் இருக்கின்றோம் என்று வேசம் கட்டினார்கள் என்பதே எனது முக்கியமான வினா. மற்றும்படி புலிகளின் அறிக்கைகளிலும், இந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளிலும் உண்மைகளும் இருக்கின்றன, பொய்களும் இருக்கின்றன என்பதை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் ஏதோ புலிகளின் அறிக்கை எல்லாம் பொய், இந்தா பிடி இந்த மனித உரிமை அறிக்கைகள் ‘மட்டுந்தான்’ உண்மை என்று ஒரு கருத்துத் திணிப்போரை எப்படி ஏற்றுக்கொள்வதாம்?////
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று யார் சொன்னார்கள்?
யார் ஏற்றுக் கொண்டார்கள்?
நீங்கள் குறிப்பிடுகிற, உங்களது த.வி.புலிகள் மீதான விமர்சனங்களால் இழந்திருக்கக் கூடியவர் போல, நண்பர் என்ற வகையில் உங்கள அறிந்திருக்கக்கூடிய ஒருவரே உங்களது புலி சார்பை (அதுவும் மக்களைமுன்னிறுத்திய சார்பை) புரிந்துகொள்ளாதபோது பிற கருத்துள்ளவர்கள் சமூகத்தில் எவ்வளவு தூரம் அந்நியப்படவேண்டடியதா இருக்கும்? அவர்களை அது இன்னமும் இறுக்கமாக்கவும் இன்னமும் மூர்க்கமாய் எதிர்க்கவும் சொல்லித் தந்தால் அதில் தவறென்ன?
பலரும் சொல்வதுபோல புலிகளை எதிர்க்கிற இணையத்தளங்கள் தங்களது நேரத்தை செலவளித்து “அவதூறுகளை” “புலிகள் தொடர்பான “புனைவுகளை” செய்வதற்கான சமூக உளவியல் பின்னணி என்ன? அப்படியான ச.உளவியலை ஏற்படுத்தியது எது?
இதையெல்லாம் அசட்டை செய்து, வ.கீதா சொன்னதை எப்படிப் புரிந்கொள்வது..?
எட்வரட் செய்ட் போன்ற அறிவுத்தளம் ஏன் எங்களிடையே (ஈழத்தில்) உருவாகவில்லை என்று கேட்ட அவர், முதன்மைக் குணமாக அவர் பற்றி சொன்னதே PLO இன் தவறுகளை கடுமையாக “விமர்சித்தவர்” அவர்களது தவறல்களின்போது அவர்களது கூட்டங்களுக்கே செல்ல மறுத்தவர் இத்தியாதி என்கிற அறிவு நேர்மைகளை முன்வைத்தே. பிழையைப் பிழையென எதிர்த்தல் என்கிற அளவிடலையே அவர் முன்வைக்கிறார். (இதில் மேலுள்ள அநானிக்கு என்ன புரிந்ததென்று அவர் தன்னையும் எஸ்.வீ.ஆர்-ஐயும் சொல்கிறாரா என வினவியிருக்கிறது?)
இங்கே உங்களது நண்பர் உட்பட -எமக்குள்ளேயே- (”ஆங்கிலத்தில் எழுதி வெளியாக்களுக்குச் சொல்லக் கூடாது”என்பதையும் ஏற்றுக் கொண்டு) பேசுவதற்கே தயாரில்லாத பொரும்பான்மை (தமிழ்) அரசியலை பேசாமல் எதிர்ப்பு அரசியலை எப்படி விளங்கி/புரிந்து கொள்வது?
நீங்கள் விடுதலைப் புலிகளை விமர்சித்த அளவிற்கே பிரிந்துபோனவர்கள் உங்கள் நேருக்கமான (உங்களை நன்கு தெரிந்த) நண்பர்கள் என்றால் மாற்றுக் கருத்தாளர்கள் இருக்குமிடம் இன்ன பிறவைப் பற்றி அறிவித்தே இருக்கவேண்டும் என எப்படி மிக இலகுவான முடிவுகளுக்கு வர முடிகிறது? அந் நண்பரைப் போன்றவர்களுக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவரது (புலி ஆதரவு நிலையிலிருந்து இறங்காத) கருத்தே “சகிக்க” முடியாமலிருக்கிறபோது பிற பாரதூரமான விடயங்களைப் பற்றி எதைத்தான் பேசி விட முடியும்?
(4)
இதில்
“மற்றதைப் பேசுதல்” குறித்து, உங்களிடம் அதை எதிர்பார்க்கிறேனே இல்லையா என்பதைப் பற்றி கீழே எழுதியிருக்கிறேன். அதற்கு முன் சிறீரங்கன் தொடர்பாக ஒன்று:
சிறீரங்கனுடன் ஒருமுறை மயூரனின் தளத்தில் -பொதுவுடமைவாதம் கதைக்கிற ஆண்களது பெண்கள் குறித்த பொதுமைப் படுத்தல் தொடர்பாக- முரண்பட்டிருந்தாலும் ஈழ அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சிறீரங்கனைவிடவும் ஒருவர் எப்படி நேர்மையாக இருக்க முடியும் என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு.
–படுகொலைகளை விமர்சிப்பார்
—அநாமதேயம் யாரும் இராணுவக் கூலி, “டக்ளஸ்” என்றால் “அந்த எருமையைப் பற்றிக் கதைக்காதீர்கள்” என்பார்
—-மீளவும் புலிகளது உரிமை மீறல்கள் பற்றிய செய்தி வருகிறபோது “பாஸிஸப் புலிகள்” எனக் கட்டுரை வரும்…!
(வ.கீதா ஈழத்தவர்கள் ஒரே நேரத்தில் பலவிதமான உணர்வுநிலைகளில் நிற்கிறோம் என்றார். புலிகளை எதிர்த்தால் இராணுவ வன்முறையை ஆதரிக்கப் போகிறோமா?
புலிகளை ஆதரித்தால் அவர்கள் செய்கிற சில உரிமை மீறல்களையும் ஆதரிக்கப் போகிறோமா? புலிகளை விமர்சிப்பது என்பது மற்றவர்களால் பயன்படுத்தப்படுமா? etc என்று.)
சிறீரங்கள் அப்படியாக தனது உணர்வுகளுக்கு நேர்மையாக இருக்கிறார். அவர் எப்படி தனது மக்கள் நலனை இவ் வலை கூறும் நல்லுலகில் ‘நிரூபித்து’க் காட்ட முடியும்?
(5)
அப்புறம் “நித்திய காதலன்” என எழுதி நான் “சேரனை நிராகரித்தது” -etc புரிதல் பற்றி:
எனது கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி நான் தெளிவாக இருக்கிறேன். சேரன் மீது நானோ/வேறு பெண்களோ வைக்கிற, வைக்கக்கூடிய “நித்திய காதலன்”போன்ற விமர்சனத்தை - நீங்கள் அல்லது வேறு ஆண்கள்- “விமர்சிக்க” முடியும் என்று எனக்குத் தோணவில்லை. நீங்கள் “மூர்க்கமாய்” எதிர்ப்பது அவரது புலி சார்பின்மையை மட்டுமே. இந்தப் பேட்டியில் கூட சேரனின் புலி சார்பை தேனீ பக்கம் “சாட”, அந்தச் சார்பும் “காணாது” என்பது தான் மற்றப் பக்க வருத்தமே. தவிர, அப்பால் அவருடன் -ஒரு ஆணாக பிரதிகளிலுள்ள பிரச்சினை- ஒரு பிரச்சினையாகவே இருக்கப் போவதில்லை. இதையே -முழுதாய் பிரசுரித்திராத - எனது விமர்சனத்தில் எழுதியிருந்ததும். ஆண்களிற்கு சேரனுடன் “அரசியலில்தான் முரண்பாடு.”
ஆனால்
சேரனை நான் ஃபிற் ஆக்கிக்கொண்டதாய் நீங்கள் சொல்கிற சுவாரஸ்யமான விசயம் எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது.
ஆனால் நீங்கள் “புரிந்துகொண்டிருப்பது” போல “தனிப்பட்ட ரீதியாக” யாரையும் நிராகரிக்கவில்லை.
எனக்கு சேரனுடைய ரெண்டோ மூண்டோ (அல்லது நாலோ ஐஞ்சோ)”கவிதைகள்” பிடிக்கலாம் அதில் ஒன்றை
-சிவரமணிக்கோ பிறவுக்கோ போடுகிறபோது - சடின் பிறேக் போட்டு நின்று, “விமர்சித்தேனே” என்றெல்லாம் மனத்தடைகள் கொள்ளவேண்டுமென்று நினைத்ததில்லை.
படைப்பு ரீதியாக, “பெயர்” என்பது பெயர் மட்டுமே! (வித்தியாசம் தெரியவேண்டுமென்றால் ஒரு கருத்தை எடுத்துப் போடுவது வேறு; படைப்பு வேறு)
(6)
//மேலும், நான் /அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை/யைச் சொன்னதன் காரணம், இன்று இந்த ‘மனித உரிமைவாதிகளும்’ அவர்களைக்காவிக்கொண்டு திரிபவர்களையும் மக்கள் முற்றுமுழுதாய் நம்ப, இவர்களும் புலிகளுக்கு நிகரான அமைப்பாய் மாறினால் மக்களுக்கு என்ன செய்வார்கள்/சொல்வார்கள்? இவர்களுடைய எதிர்கால இலக்குகள்தான் என்ன? என்னவிதமான கட்டமைப்பை மக்களுக்காய் வைத்திருக்கின்றார்கள்? இல்லாவிட்டால்,ஏன் சிங்கள அரசு நல்லாய்த்தானே இருக்கின்றது என்று தமிழ்மக்களின் தலைவிதியை சிங்கள அரசிடம் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? //
ஒன்று இல்லாதபோது அது குறித்த “மோசமான” கற்பனைகளைத்தான் தரவேண்டும் என்பதில்லை! ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறொன்றும் இல்லை என்று ஆ(க்)கிவிட்ட பிறகு, எந்த அறிவார்த்தமான (அறிவு என்றால் “படித்த” என்கிற அர்த்தத்தில அல்ல) ஆய்வுகளூடானதாக அல்லாமல், சும்மா ஒரு ஊகத்தை செய்வது யாருக்குமே பயனற்றது.. ஒரு காலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளர்களால் இருந்தவர்கள் இன்றேன் மாறினார்கள் என்பதற்குக் கூட “வேறு” “மாற்று” அமைப்பு எதுவும் இல்லை = “புலிகளைத் தவிர யாரும் இல்லை” - என்பதே பதில். அத்தகைய பதிலிற்கு ஏதாவது ஒரு முடிவு வரக் கூடாதா என்கிற இழப்புகளைத் தொடருகிற களைப்பினாலும் தான் வருகிறார்கள்.
(7)
//என்னைப் பொறுத்தவரை புலியெதிர்ப்பாளர்கள், சனநாயகவாதிகள் பற்றிய நம்பிக்கை பொய்த்துபோனது சென்ற ஆண்டு நடந்த சிவராமின் படுகொலையை அடுத்துத்தான். எனக்குத் தெரிந்த ‘நடுநிலை’ நண்பர்களில் பாதிப்பேர் இந்தப்படுகொலையை அறிந்து முதலில் கூறியது சிவராம் புலியின் ஆள் ஆகவே அவர் போனது பெரிய விடயமில்லை (இதேயேதான் புலிகளின் ஆதரவாளர்கள் துரோகிகள் என்று பிலாக்கணம் பாடும்போது இந்த நண்பர்களுக்கு கோபம் வருவது வேறுவிடயம்). மற்ற நடுநிலைவாதிகள் கூறியது என்னவென்றால், சிவராம் முந்தி புளொட்டில் இருந்தபோது யாரையோ இரண்டு பேரை போட்டுத்தள்ளுவதற்கு உடந்தையாக இருந்தார் ஆகவே இந்தக்கொலை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றார்கள். அட நாசமாய்போன்வர்களே ஒரு கொலை நடந்தால் முதலில் அனைத்து விமர்சனங்களைத்தாண்டி கண்டனத்தைச் சொல்லி முதலில் மனிதாபிமானத்துடன் இருக்க முயற்சி செய்யுங்களடா என்றுதான் மனதில் கூறிக்கொண்டேன். இவ்வாறான அதே காரணங்களைத்தான் புலிகள் மாற்று இயக்கதவர்களை போட்டுத்தள்ளும்போது புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வெளிச்சாயம் மட்டும் இந்த இரண்டு தரப்புக்கு வித்தியாசமே தவிர உள்ளுக்குள் இரண்டு தரப்புக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது பொதுவான ‘தமிழ்’ இரத்தம் போல.
…மேலும் சிவராம் துவக்கோடு பாதுகாவலர்கள் சகிதம் பிற்காலத்தில் திரிந்தவரும் அல்ல. பேனா ஒன்றை வைத்து எழுதித்தள்ளியதே அவர் செய்த தவறு. இன்னமும் ராஜினி திரணகமவையும் சபாலிங்கத்தையும் போதும் போதும் என்று ஸ்ரிரீரோ ரைப்பாகும் அளவுக்கு விளாசித்தள்ளும் நடுநிலையாளர்கள் இங்கே மட்டும் ஒளிந்துகொள்வதிலுள்ள அரசியல்/விமர்சனப்புள்ளிகளும் சுவாரசியம் வாய்ந்தவைதான் (உடனே இப்படிச்சொன்னதால் மேலே சொன்னவர்களின் கொலையை ஒத்துக்கொள்கின்றேன் என்று விமர்சனக்கத்திகளுடன் நண்பர்கள் வராதிருக்க இறைவன் இரட்சிப்பாராக).
…அதே போல ஒரு ‘மார்க்சியவாதி’ சிவத்தம்பி பாஸிஸ்ட் என்று தொடங்கி ஒரு கட்டுரை எழுத சிரிப்போடு அரைகுறையாய் வாசித்துவிட்டு விலகிவந்தாயிற்று. சிவத்தம்பியோடு, அவரது இலக்கிய/அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு. ஆனால் இன்றும் கொழும்பில் ஒரு இடர்பாடுடைய வீட்டில், அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால் நமது மனிதத்தின் அளவீடுகள்தான் என்ன? இவ்வாறான பொழுதுகளில் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு இவ்வாறான் அறிவுஜீவிகள், சன்நாயகவாதிகள் புலிகளுக்குப் பதிலாக களத்தில் நின்றிருந்தால் எங்கள் மக்கள் நிலைதான் என்னவாயிருக்கும். ஏதோ தன்ரை பாட்டில் இருக்கும் மனிதரை எல்லாம் பாஸிஸ்ட் என்று ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் நிகராய் எழுதிக்குவித்தால், இவர்களின் கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் இன்று புலம்பெயர் சூழலில் இருந்துகொண்டு ஒற்றைவரியாவது எழுதும் சுதந்திரம்கூட என்னைப்போன்றவர்களுக்கு இல்லாது போயிருக்குமோ என்ற அச்சம் எனக்கு வருகின்றது. //
உங்களை இறைவன் ரட்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது! எமது மனிதத்தின் அளவீடு “பேயும் இரங்கும் பெண்ணை” (ஸ்டீரியோ ரைப் இல.01) கொன்றதில் ஆரம்பித்து எத்தனையோ அளவீடுகளை கடந்தாகிவிட்டது. (நீங்கள் தருகிற தனிப்பட்ட தகவல்களின் படி) இப்படி வாழுகிற சிவத்தம்பியை எழுதுவது சம்மந்தப்படவர்கள்/அவரை தெரிந்தவர்கள் மனதை வருத்தினாலும், அப்படி ஒருவளு/னுக்கு தோன்றினால் அதை எழுதுவதால் மனிதத்தின் அளவீடு ஒன்றும் குறையாது (சிவத்தம்பியும் ஒத்த அளவீடுகளை செய்திராதவரும் அல்லர்).
உங்களுடைய பதிவில் எனக்கு உடன்பாடற்ற விடயமாக இருக்கிற இன்னொரு விசயம்: மிகை/பொதுமைப் படுத்துதல் சார் குறிப்புகள். சிவத்தம்பியை பாஸிஸ்ட் என்பதால் மனிதத்திற்கு என்ன குறைந்துவிடும்??
நீங்களே, தராக்கி பற்றி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள். “அவர் கொல்லப்பட்டதை எதிர்க்கவேண்டியது முதல்ல முக்கியம்” என்று. அதை நிறுவ, “ராஜினியை சபாலிங்கத்தை போதும்போதும் என்கிறளவு திரும்பத் திரும்ப சொல்பவர்கள்.. இதை சொல்ல முரண்டுவது சுவாரஸ்யம்” என்கிறீர்கள்.
எனக்கும் கருத்துகளை ஏற்க இயலாத அரசியற் கொலைகள் எதிர்க்கப்பட வேண்டியன என்பதுடன் உடன்பாடு உண்டென்றாலும் - ராஜனியும் தராக்கியும் ஒன்றே இல்லை. அதுபோல கொலையுண்டவர்களோ சிவத்தம்பி போன்றவர்களோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மாமனிதர்களும் கிடையாது (ராஜனியும் தான், ஆனால் இறுதியில் அவர்கள் கொண்டிருந்த சார்பின் நிமித்தம் சந்தர்ப்பவாதிகளையும் கொலைகாரர்களையும் திரும்பத் திரும்ப உன்னதர்களாகச் சொல்லிக் கொண்டிருத்தலை விட, -தனது சமூகத்தின் நன்மையை நினைத்ததைத் தவிர - ஒரு கொலையைத் தானும் செய்யாத ஒருவரை சொல்லிக் கொண்டிருத்தல் -தகுதியான ஒருவரை- நினைவுகூருகிற திருப்தியைத் தருகிறது)
ஃ சந்தர்ப்பவாதிகளை/சந்தர்ப்பவாதத்தை கூற வேண்டுமாயின் தராக்கி போன்றவர்கள் (ராஜனி போலவோ அல்லது அவர் போன்ற ரத்தம் படிந்த கைகள் இல்லாதவர்கள் போலவோ) விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அந்த வகையில “போட்டுத் தள்ளியவர்களுக்கும்” ஒவ்வொரு உயிரையும் (இயக்க வேறுபாடின்றி) மதித்தவர்களுக்குமான வித்தியாசம் ஒப்பிட இயலாதது!
மேலும், கொழும்பில் அரசாங்க ஓய்வு ஊதியம் அற்றிருக்கிற சிவத்தம்பியை யாரும் பாஸிஸ்ட் என எழுதினால் அவர்களது மனிதத்தின் அளவீடை யோசிக்க வேண்டியதன் தார்மீகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை விமர்சிக்கிற மார்க்சியர் யாரும் பிரான்ஸில் இருப்பதால் சொகுசாக இருப்பார்கள் என -தெரியாமல்- ஊகிக்க முடியுமா என்ன? (சிவத்தம்பி என்று இல்லை, பொதுவாக) ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், வயது முதியராக இருந்தால், “இளகியவராய்” இருந்தால் - மனித அழிவிற்கான என்ன கருத்துக்களையும் சொல்லலாம் என “excuse” ஏதும் இருக்கிறதா?
இன்றும், இங்கு பிறந்து வளர்கிற பிள்ளை கூட, சொல்கிற நபர் குறித்த எந்த அறிவும் அற்று “அவ கனக்க கதைச்சவா so they killed her” என்றோ அல்லது இன்னொரு சைட் ஆல “இப்பிடியும் ஒரு கதை இருக்காம்.. இவவ அவங்க கொல்ல இல்ல எண்டு” என்றோ இத்தனை வருசங்களிற்குப் பிறகும் போஸ்ட் மாடம் செய்துகொண்டும்:. உண்மையை ஏற்பதைத் தள்ளிப்போட்டுக் கொண்டும் அதூடா நியாயப்படுத்திக் கொண்டும், ஒரு அர்ப்பணிப்பை (**கொழும்பில வசதிகளுடன் தராக்கி இருந்ததற்கு எந்தவிதத்திலும் ஒப்பிட முடியா) நிராகரிக்க/மறுதலிக்க முடியுமெனில், -இன்னொரு அத்தகைய பெண்ணை- உருவாக்க முடியவிலலை எனில் — எத்தனை தரம் சொன்னால்தான் என்ன? அதனால் என்ன பிரச்சினை? மனிதர்களைப் “புரிந்துகொள்கிற” உங்களையே இவை உறுத்துகிறபோது உரையாடலை உண்மையில் எங்கு ஆரம்பிக்க வேண்டும்?
(**சம்பந்தமில்லாத குறிப்பு: கொழும்பில் வாழுவது தமிழீழத்தில் வாழுவதை ஒத்த (”சொந்த நாட்டிலேயே வாழும் உறுதி”) தியாக மிகுதியானது என்பது எனக்கு புதிய செய்தி!)
(8)
//பாஸிசம் பாஸிசம் என்று புலிகளை நோக்கி அறிக்கை அம்புகள் விடுபவர்கள் இன்னொரு பாஸிச அமைப்பின் மீது நிற்பது குறித்து ஏன் பொடிச்சி உங்களைப்போன்றவர்கள் கேள்விகள் எழுப்புவதில்லை. உங்களுக்கு அக்கறை மக்கள் மீதாயிருந்திருந்தால் முதலாவது கேள்வி அவர்களின் இருப்பு நோக்கியதாய் அல்லவா இருக்கவேண்டும்? இல்லாவிட்டால் ராம்.மாணிக்கலிஙமும், மற்றவர்களும் அப்படி இருக்கவில்லை என்று எங்கையாவது ‘ஆதாரமான’ செய்திகளைக் கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டீர்களோ தெரியவில்லை.//
எனது முடிவுகளை - நான் எங்கு கேட்டு “அமைதியாகவேண்டும்’ ?. வீட்டில் இருக்கிற -தோழன், அப்பா, அண்ணா போன்ற -ஆண்களிடமா?!
“பழைய போராளி” “இன்றைய புலி சார்பு” அப்புறம் அதி தீவிரமான(!) புலி எதிர்ப்பு என ஆண்களைத் தெரிந்திருக்கிறபோதும், வ.கீதா சொன்ன மாறுபட்ட மனோநிலைகளோ என்னுடைய -தனிப்பட்ட - யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்த இன்றைய புலி ஆதரவாளர் கூட ராஜினியை தராக்கியை மாறுபடுத்தியே பார்க்கிறார்கள்; ராஜினியை எத்தனை தடவை கூறினாலும் “போதும்” “போதும்” என அலுப்புறுவதில்லை.
மற்றப்படி, பொதுவாக ஆண்களைப் போல எதையும் “நிறுவவோ” “ஆதாரம்” தேடவோ இது எனது வாழ்க்கை பிரச்சினை அல்ல. இங்கிருந்து கொண்டு “எனக்கொரு நாடு வேண்டும்” என அங்கொரு நாட்டை நினைக்கிற அபத்தத்தை (பக்கா சுயநலத்தை) கடந்து, இங்கு பெற்ற அறிவுடன் அங்கு நடக்கிறவை தொடர்பாக “எனக்கு தெரியிற” உண்மைகளை பேசுவதே சரியெனப் படுகிறது.
மக்களது இருப்பை நிர்ணயிக்கிற பெரும்பான்மை அரசியலை உடைய நீங்களே -ஏதும் ஆழமாய் உரையாட முன்னரே- எனக்கு ‘ம்” போடுவதாய் எழுதுகிறீர்கள்.
நான் எழுதியதோ, எழுத நினைத்ததோ நீங்கள் ம் போடுவது தொடர்பானது அல்ல்; தனிப்பட்ட எனக்கு யாரும் “ம்” போடுவதால்தான் என்ன பயன்?!
உங்களது கருத்துகளிற்கு உடன்பாடல்லாத விசயங்களை -எனது கருத்துக்களை- எழுதுவது “பிரம்பெடுத்துக்கொண்டு” “போதிக்க” வருவதுபோல இருப்பது (முன்னர் ஒரு “மாற்றுக் கருத்து” ஆணொருவரும் ஒத்ததையே சொல்லியிருந்ததில்) ஆண்களிற்கு பெண்களிடம் கருத்து இருப்பதும் கருத்து சொல்வதும் அப்படித்தான் தொனிக்கிறதா??? உங்களைப் போல தமிழ்நாட்டு நண்பர்கள் “விளங்கிக்கொள்ள” என்றெல்லாம் கூட நான் அரசியல் பிரச்சினைகளை எழுதாதபோது, அது, எப்படி பிரம்போடு போதிக்க வருவதாய் தென்படுகிறதோ!
இதை “ஆணீய” சிந்தனைகளையும் விமர்சிப்பவராகிய நீங்கள் யோசித்துக் கொள்ளலாம். யோசிக்கிறீர்களோ இல்லையோ,
இலங்கையில் நடக்கிற சம்பவங்கள் குறித்து ஆண்கள் நீங்கள் நான் என்ன நினைக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அதைத்தான் எப்போதும் நானும் நினைத்தாகவேண்டும் என்று இல்லை என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.
(9)
மற்றது,
(பெயர் சொல்லி எழுதல் தொடர்பாக)
கவிதையைப் பற்றி என்று சொல்லவில்லை,(எழுதுகிறபோது கவிதையில் “திசைகள்” எங்கும் அலைந்துதிரியும் என்பது அப்போதுதான் திசைகள் சேரனது பேட்டியைப் படித்திருநததால் தோன்றியது - புஸ்பராஜா பேட்டியோட வரிகள் அப்படித் தோன்றவில்லை- ஆதலால் அதை குறிப்பிட்டிருக்கலாமே என்று நினைத்ததை எழுதினேன். ஆனால் அது எழுதுபவருடைய தேர்வுதான். . (அதுக்காக ஒருவரது கருத்தை எதிர்ப்பதை கவிதையில் கொணர்ந்து கட்டுரையாக்கோணுமென்பதில்லை, அடிக்குறிப்புப் போடலாம்! சண்முகம் சிவலிங்கம் தொடங்கி அடிக்குறிப்புக் கவிஞர்கள் பாரம்பரியம் ஈழத்திலுமுண்டே.. ) அனேகமாக அதன் பிறகான உங்களது பின்னூட்டங்களையும் வைத்துத்தான் எழுதினேன்; இந்தப் பதிவில கூட சிவத்தம்பியைப் பற்றின “மார்ச்சியக்”கட்டுரை (றயாகரன் என நினைக்கிறேன்)etc என்று அவர்களது இருப்பை -அவர்களது பக்கத்தை- (உங்களுடைய தேர்வுதான் என்றாலும்) -பெயர் எழுதாமல்- அலட்சியம் செய்வதுபோலவே எனக்கு தொனிக்கிறது. அது disturb பண்ணுவதால்தான் எழுதினேன். நான் பெரிதும் சொல்ல வந்தது அப்படியாக “பெரிய கட்டுரை எழுதிறது” —- “நான் மதிக்கிற ஒருவர்” இப்படி எல்லாம் எழுதப்படுவது ஒரு நபர் குறித்த “ஊகங்களை”ச் செய்யவே தூண்டும் என்பதைத்தான். அது உங்களது தேர்வு சம்மந்தப்படடது; அது அவசியமில்லை என நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்றால் அது சரிதான்.அதில் எதிர்க்கருத்து இல்லை.
முக்கியமாக இங்கே எழுத விரும்புவது (உறுத்தலல்ல) :-
உங்களுடைய குறிப்பிட்ட (மேலுள்ள) கவிதைக்குப் பிறகு வந்த பின்னூட்டங்களில் -
நீங்கள் மாற்றுக்கருத்தாளர்கள் பற்றி நிச்சயமா ஏதோ சொல்ல, அதற்கு பதில் சொல்ல வந்த சி.ரங்கனிடம், மேலுள்ள கவிதைக்கு (இத்தனை தரம் வந்து பார்த்திருக்கிறீர்கள் என்ற ஸ்ராற் கவுன்ரர் தகவலுடன்) (ஒரு பெண் வன்புணரப்பட்ட சம்பவம் குறித்து உங்களுக்கு ஒன்றும் சொல்ல இல்லை நீங்கள், ஆனால் மாற்றுக் கருத்தை சொன்னதும் பதில் எழுதுகிறீர்களே.. என்றதுவரை அந்த ஸ்ராற் கவுன்ரர் முதலாய விடயங்களுடன் (நானுங்கூட நிறையத் தடவை வந்து பார்த்திருப்பேன், அதுக்கென்ன?? என்கிற அடிப்படையில்) சேர்த்துத்தான் ஆட்சேபித்து எழுதத் தோன்றியது. ஒருவரை “வேவு” பார்த்து “ஏன் இதற்கு எழுதாமல் அதற்கு எழுதினாய்” எனக் கேட்பது “மற்றதை”க் குறித்ததில்லியா? என்கிற அடிப்படைகளில். (இவ்விடத்தே “மற்றது” குறித்த அனைத்து அபிப்பிராயங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.)
அதே கேள்வி திரும்ப என்னிடம்!
//இங்கே ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கப்பட்டாள் என்ற விசயத்தை விடவும், உங்களுக்கு ‘நடுநிலையாளரை’ போட்டு அடித்துவிட்டான் என்ற முதலில் கோபந்தான் வருகின்றது. இதைத்தான் மேலே சொன்னேன், கொலையோ, வன்புணர்வோ விமர்சனங்களை மீறி முதலில் கண்டணஞ் செய்யுங்கள். அதுதான் குறைந்தபட்ச அறமாய் இருக்கும். அதைத்தான் அனைத்து விமர்சனங்களை மீறி முதலில் நாமனைவரும் செய்யவேண்டியது. நீங்கள் அதற்கு ஒரு சிறு கண்டனம் -இப்போதுகூட- கூறாது நடுநிலையாளருக்கு கவசமாக, சரியாகத்த
34
sonador says:
May 25th, 2006 at 12:46 pm edit
..continued from above(9)
//இங்கே ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கப்பட்டாள் என்ற விசயத்தை விடவும், உங்களுக்கு ‘நடுநிலையாளரை’ போட்டு அடித்துவிட்டான் என்ற முதலில் கோபந்தான் வருகின்றது. இதைத்தான் மேலே சொன்னேன், கொலையோ, வன்புணர்வோ விமர்சனங்களை மீறி முதலில் கண்டணஞ் செய்யுங்கள். அதுதான் குறைந்தபட்ச அறமாய் இருக்கும். அதைத்தான் அனைத்து விமர்சனங்களை மீறி முதலில் நாமனைவரும் செய்யவேண்டியது. நீங்கள் அதற்கு ஒரு சிறு கண்டனம் -இப்போதுகூட- கூறாது நடுநிலையாளருக்கு கவசமாக, சரியாகத்தான் பிரயனத்தப்படுகின்றீர்கள். நல்ல விசயந்தான். மனதில் எது உறுத்திக்கொண்டிருக்கின்றதோ அதுதானே முதலில் வரும். பரவாயில்லை அங்கே சிறிரங்கனோ அல்லது வேறு யாரோ கிட்டத்தட்ட இதேமாதிரி கேள்வியோடு ஒடிவந்தார்கள் என்று நினைவு. இப்போது காலம் தாழ்த்தி ‘நடுநிலையாளர்களின் மானம்’ காக்க நீங்கள் ஓடிவருகின்றீர்கள். அவ்வளவுதான். மற்றும்படி உங்களின் விமர்சனங்களைத்தாண்டி நான் ‘கவிதை’ என்று எழுதி அங்கேயெழுப்பிய கேள்விகளில் நியாயம் உள்ளது என்று இப்போதும் உறுதியாக நம்புகின்றேன். //
மேலே சொன்னதுபோல, உங்களது கவிதை பற்றி அதில் நீங்கள் எழுப்பிற கேள்விகள் குறித்து இங்கு நான் ஒன்றும் சொல்லவில்லை. அது நிச்சயமாக உங்களுடைய உணர்வுகளுக்கு உண்மையானதாகவே இருக்கும்.
ஆனால் உங்களது கவிதையைப் படித்துத்தான் நான் ஒரு பெண் வன்புணரப்பட்ட “விசயத்தை” பொருட்படுத்தவோ, அல்லது “கண்டிக்கிறேன்” என -இப்போதுகூட - உங்களது தளத்தில் கண்டனமோ ஆட்சேபனையோ செய்தால்தான் **அவளைப் பற்றி நான் உணர்வதை நீங்கள் அப்றூவ் பண்ணுவீர்கள் என்பதோ அதிகாரமாக இருக்கிறது எனக்கு. அது போன்ற தொனிகளையே இங்கே உங்களிடம் முரண்பாடாய்க் காண்கிறேன். அந்த, எது மக்களுக்கானது, எது (தனிப்பட்ட)கருத்துக்கானது என்பதை நிர்ணயித்துச் சொல்கிற “இடத்தில்” இருக்கிற ஆதிக்கத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
(**இந்த இடத்தில் ‘பெண்கள்தான் தமது பிரச்சினைகளை சொல்ல” “தலித்கள் தான் தமது தலித் பிரச்சினைகளை சொல்ல - என்கிற வகையான நம்பிக்கைகளை நினைவு கூரப் பாருங்கள்). அத் தொனிக்காக யாருக்கும் எனது “எதிர்ப்பை” “கோபத்தை” “மனிதாபிமானத்தை” “தோசாபிமானத்தை” “கருணையை” “காட்டிக்கொள்ள”வேண்டிய அவசியம் இவவிடம் இல்லை;
இங்கே - நான் தனியே தொடரும் இராணுவப் படுகொலைகள் பற்றி மட்டுமல்ல, தர்சினியைப் பற்றியோ, கிழக்குப் படுகொலைகள் பற்றியோ, தற்கொலைக்குண்டுதாரி கர்ப்பிணி(கேள்விக்குறியைப் போட்டும் விலக்கியும்), லீலாவதி (கீழே வரும்) பற்றியோ எழுதவேவயில்லை. நீங்கள் வெருகல் ஆற்றைப் பற்றி ஒரு குறிப்புக் கூற மட்டும் அந்தக் கவிதையைப் போட்டதன் “அச்சொட்டான” காரணத்தை -உங்களவுக்கு - நான் அறிந்திருக்கவில்லை என்பதை(யும்) வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது (அதேபோல சேரனின் கவிதை போட்டது தொடர்பான புரிதல் குறித்தும் கீழே).
ஈழப் பிரச்சினை தொடர்பாக, அங்கு நிகழுகிறவை தொடர்பாக உடனடிஉடனடியாக தோன்றுகிறவையை குறிப்புகளாக எழுதலாம், ஆனால் குறிப்புகளைத் தாண்டி ஏதாவது எழுதுவதையே விரும்புவதால்-
எனது வலைப்பதிவில் -அதுவும் தமிழில்- நான் யாருக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்? எனது மனத் துக்கத்துக்காக ஒன்றை எழுதுவேனாயின் அதை பிரசுரிக்கிற தேர்வு யாருடையது? என்பன பற்றி விரும்பின் யோசிக்கலாம் (நீங்கள்). இராணுவம் செய்கிற வன்முறைக்கு நான் ( அல்லது சிறீரங்கன்) வந்து கருத்து சொல்லி என்னை காட்டிக்கொண்டே ஆகவேண்டும் என்கிற உங்களது சிந்தனை -அந்த மனோநிலை- பிரச்சினையே அற்றதென்கிறீர்களா? யாருக்கு யாரை (ஏன்) நிரூபிக்க வேண்டும்?
இத்தகைய யோசனைகளுடன்தான் - நான் எனக்கு தோன்றுகிறதை ஆறுதலாகவே எழுதிக் கொள்ளலாம் - என்று இருக்கிறேன்.இதனால் என்னைப் போல ஒருவருடைய சார்பு சர்ச்சைக்குரியதோ சுவாரஸ்யமோ அற்றது!
அப்பாவி சிறீரங்கனிடமோ அல்லது பாவிகளிடமோ தர்சினியைவிட மாற்றுக்கருத்து முக்கியமா எனுகிற உங்களிடம் (”மற்றது” குறித்த ஒத்த கேள்வியை) இப்படிக் கேக்கலாம்:-
அதே காலம் தேனீயில் மட்டும் “புலிச் சாயல் பூசியும்” நிதர்சனத்தில் ஒழுக்கமற்ற பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டிருந்த லீலாவதி என்கிற ஒரு பாலியல் தொழிலாளியின் மரணம் (80களில் இயக்கங்கள் “சுடப்”பழகிய மனநோயாளர்க்ள, பாலியல் தொழிலாளர்கள் - இலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல்) தமிழ் ஆண் தனத்தை தன்னுடையஉறுப்பை வெட்ட வக்கில்லாத கேவலத்தை மீள நிரூபித்து சென்றிருந்தது.
இச் சம்பவம் குறித்து - குறிப்பிட்ட பெண் குறித்து - உங்களைக் கவிதை எழுதக் சொல்லி (”மற்றதை” ப் பற்றி எழுதச் சொல்லி) -நீங்கள் அப்படி நான் சொல்லுவதாக நினைப்பதுபோல - நான் சொல்லவில்லை.
தமிழ் தேசீய ஆண்மகனை, “அந்நிய” இராணுவத்தால் (”சிங்களவனால்”) தனது இனப்பெண் வன்புணரப்பட்டு கொலையுண்டது “கொதிக்க” செய்வதுபோல, ஏதோ ஒரு சாராரால் லீலாவதியின் கொலை உரிய கண்டனத்திற்கு உள்ளாகிற சூழல் இருக்கவே என்னைப் போல ஒரு பெண் விரும்புவாள் (கவனியுங்கள்: அதுகுறித்தும் பதிவோ கவிதையோ நான் எழுதவில்லை). ஒரு பாலியல் தொழிலாளி (இள வயது அல்லாத, பிள்ளைகளுக்குத் தாயான) “எனது இன” ஆண்களால் கொலைசெய்யப்படுதல் -எந்தவிதத்திலும் தர்சினியின் இழப்பிற்கு மேலான துயரமோ குறைவானதோ அல்ல. ஆனால் எ/உங்களுடைய ஊடகங்களில் எதில் அது -முன்னதற்கான நியாயமான எதிர்ப்புகளுடன்- பதியப்படுகிறது? இதுவரை எழுதப்பட்டுள்ள - புலிகள் சார்பான அல்லது பெண்ணிய பதிவுகளில் தானும் -தர்சினி போல - லீலாவதி குறித்து இருந்ததா?
(நீங்கள் படிக்காத) “தேனீ”யில் இணையத்தில் நிதர்சனத்தில் சிறு செய்தியாக வந்த “ஒழுக்கமற்ற” இந்தப் பெண்ணைப் பற்றி தமிழரசன் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை (பிற எந்த மாற்றுக் கட்டுரையும்) முழுமையானதாக இருக்க வேண்டியதில்லை; தவறற்றோ விமர்சனமற்றோ இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறது. சார்புடைய கவிஞன்கள் (கவிஞைகள் உட்பட) காணாத/பாடாத ஒருத்தியைப் பற்றியது. அத்தகைய பக்கத்தை, ஒரு “நியாயமான” பக்கத்திற்கெதிரானதான இன்னொரு பக்கமே -தனது நலன்களின் பொருட்டு - முன்னிறுத்துமாயின் -எந்த நலன்களையும் விலத்தி- என்னைப் போன்றவர்களுக்கு அத்தகைய ஊடகங்களின் “இருப்பு”ம் தேவையும் முக்கியமானதாய் இருக்கிறது. அதை “புனைவு” என்றோ “படிப்பதில்லை” என்றோ சொல்வதை விட அதை முன்வைத்து - அதன் விசயங்களை முன்வைத்து - பெரும்பான்மை ஊடகங்கள் பேசாதவையை முன் வைத்து பேசுதல் முக்கியமா இருக்கிறது.
உங்களை கவிதை எழுத சொல்லவில்லை. ஆனால் “தேனீ’ எல்லாவற்றுக்கும் புலிச் சாயல் பூசுகிறது என (லீலாவதியின் மரணத்தைவிட “முக்கியமானதாக”) நீங்கள் சொல்லலாம் - ஆனால் தமிழ் ஆண் எந்த இயக்கமென்றாலும் இதைத்தான் செய்வான் என பூசி மெழுகலாம். ஆனால்
எங்களுடையதென தற்சமயம் இனியும் இருக்கப் போகிற ஒரு இராணுவம் (நன்றி: அந்த வலைப்பதிவர்)
முக்கியமாக பெண் உடல் மீது அத்துமீறலை நிகழ்த்தும் சிங்கள/இந்திய/பிற இராணுவங்கள் அல்ல (- “இராணுவங்கள் “கற்பழிப்பது இயல்பு” - புஸ்பராஸா)
எமது, எங்களுக்கான இராணுவம
அதுவும் எங்களை அடித்தால் தனது காமத்திற்காக உருவாக்கிவிட்டு கொன்று போட்டால், அதைப் பற்றி ஆண்களிற்குப் பிரச்சினை இருக்கப் போவதில்லை. இந்த தொழிலாளி போனால் இன்னொருவர்.
இத்தகைய ஒடுக்கப்பட்ட பேசப்படாத -முக்கியமற்ற - குரல்கள் குறித்தும் எழுத யாரோ என்றாலும் வேண்டும்.
(10)
//சரி எல்லாவற்றையும் போதிக்க நீங்கள் பிரம்போடு வெளிக்கிடும்போது இன்னொரு ‘ம்’ போட்டு நீங்கள் கவிதை குறித்தும் கவிதையின் அறம் குறித்தும் போதிப்பதை கேட்கவேண்டியதுதான். இதில் நகைச்சுவை என்றால் அவரின் பாதிப்பு இவரில் இருக்கின்றது இவரின் பாதிப்பு இன்னொருவரில் இருக்கின்றது என்ற கவிதை விமர்சனம் எழுதி பிச்சுப்பிடுங்கிற நீங்களே பெயர்களைக் குறிப்பிட்டுத்தான் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வரைவிலக்கணம் தந்து அறம் எங்கே என்று வினாவுவதற்கு…. இன்னொரு ‘ம்’.
இப்போது உங்களின் ‘·பிற்’ உண்மையை பாவிக்கும் சூழல் குறித்து…. நீங்கள் சேரனை நித்திய காதலன் என்று நிராகரித்து ஒரு விமர்சனக்கட்டுரை எழுதிவிட்டு, பிறகு உங்களுக்கு ‘·பிற்றாகின்ற’ சேரனின் ஒரு கவிதையை -சிவரமணி பற்றிய எழுதிய- எந்த விளக்கமும் இல்லாது உங்கள் பதிவில் பிறகு பிரசுரித்துள்ளீர்கள். நீங்களும் தொப்பிக்கேற்றமாதிரி ‘·பிற்றான’ கவிதை போடுகின்றீர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். என்னாலும் -உங்களைப்போல- சேரனை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது. சேரன் அல்ல, எந்தப்படைப்பாளியையும் விமர்சனங்களுடன் உள்வாங்கிக்கொள்கின்றேன். அவ்வளவுதான்.//
-நான் மட்டும்- இன்னாரை விமர்சிக்கவில்லை,நிராகரிக்கிறேன் என எப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?
நடுநிலமையாளர் (அதாவது இங்கே “திசைகள்” என எழுதுவதுதொடர்பாக எழுதியது) சேரனைப் பற்றி எழுதுவது “பொறுக்க முடியாமல்” இருந்தால் நான் ஓடிவந்த வேகத்தில் - கவலைப்படாதீர்கள்- பதிவுச்சொல்எல்லாம் இட்டு அன்றே அதற்கான ஆட்சேபணையைத் தெரிவித்தே இருப்பேன்! ஒன்றும் அவரசமில்லை!
ஒருவரைப் பற்றி விமர்சித்த பிறகு அவர்கள் குறித்ததாய் -படைப்புகள் தவிர - எதையும் கொண்டு திரிவதில்லை. நீங்கள் கூறுகிற நிராகரிப்பு நிகழ்ந்திருந்தால் அந்தப் படைப்பு அங்கே போடப்பட்ருக்காது! நாங்கள் விமர்சிக்கிறவர்கள் தொடர்பான கற்பிதங்களைக் கொண்டிருக்கிறோம் என்றால் அது அவர்களது தவறாகத்தர்ன இருக்க வேண்டியதில்லை. ஏனோ சேரனது கவிதையைப் போட்டது தொடர்பான உங்களது தொனி (நான் கேட்டதற்குப் பதிலுக்கு என்னிடம் கேட்பதாய் அமைந்திருந்தாலும்) -எழுதிய விமர்சனத்தை விட்டுட்டு - ‘சேரனுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா” எனக் கேட்கிறவர்களுடைய தோரணையையே நினைவூட்டியது.
அத்தகைய சுவாரஸ்யம் தேடும் நோய்க் கூறுகளிற்கு ஒன்றும் செய்ய முடியாது.
நான், ஒரு உரையாடலை (விமர்சித்த) அவர்கள் தொடர்பாக, எதையும் - குறித்த விமர்சனத்தை முன்வைத்த விவாதத்தை- ஏற்படுத்த விரும்பின் அவர்களது படைப்புக்களை உள்ளிடுகிறேன்.
மற்றப்படி, சக்கரவத்தியின் கவிதை -தர்சினியின் கொலைக்க முன்பாகவே- நிகழ ஆரம்பித்த கிழக்குப் படுகொலைகள் பற்றியது, -கவிதை என்கிற ரீதியில் அதப் பார்க்க முடியா/அப்படி என்னால் சிலதைப் பார்க்க முடியாது. அந்தப் பிரதியோட பின்னணி, குரல்- அது நிரம்பவும் பாதித்தது, எனது சகோதரனுடன் நடந்திருக்கக்கூடிய நிலப் பரப்பில், ஒவ்வ்வொரு நாளும் எதுவுமறியாத பிள்ளைகள் இரண்டு தரப்பு மோதலில் அநியாயத்துக்கு பலியாவதும்-
அங்கிருந்து வந்திருந்து ஒரு களச் செயற்பாட்டாளர் “ஒரு நாளைக்கு ஒரு கொலையாவது விழும்” என்று சொன்னதும் தந்த தாக்கத்தை நிரப்புவதாக இருந்ததாலும் - அது தொடர்பாக ஏதும் எழுதலாம் என இருந்து பிறகு எழுத முடியவில்லை ஆதலால்- பிறகு அதை முன்வைத்து எழுதலாம் என்று (”பலிவதம்” கவிதை) உள்ளிட்டிருந்தேன். உங்கட பதிவில வந்து பின்னூட்டம் இடுகிறபோது அது நினைவில் இல்லவே இல்லை. அப்படி எல்லாம் யாருக்கோ பதில் சொல்ல அற்ப சந்தோசங்களின் நிமித்தம் எல்லாம் அதைப் போடவில்லை (கவிதை யாரையும் தாக்கினால், அது நிச்சயமா கவிதையோட அரசியல் தாற தாக்கம்தான், அது எனக்கு உடன்பாடானதும்தான்).
மற்றது, நீங்கள் குறிப்பிடுகிற “3″ கவிதைகளை எடுத்துப் போட்டு நர்ன எழுதியது கூட “விமர்சனம்” அல்ல. அது ஒரு வாசிப்பின் தொடர்ச்சியான சிறிய அவதானம் மட்டுமே. கவிதை குறித்த எனது பதிவுகளில் “கவிதைக்கு வலைவிலக்கணம் விற்கிறேன், வாங்குங்கள்” என்று சொன்னதில்லை! எனக்கு “கவிதை” என்பது தொடர்ந்தும் ஒரு மிகப் பெரிய பகடியாகவே இருக்கிறது, இருப்பு சார்ந்த கவிதை அல்ல. பிற பிற! கவிதை குறித்த உரையாடல்கள், கவிஞன்கள் (கனவான்கள்) மனுசனாய்க் கூட இருக்க முடியாதவன்களது உன்னதங்கள் எண்டு, அது ஒரு தொடர் பகடியே. இங்க எழுதிய எந்த விசயததிலும் முக்கியமானது அல்ல.
//.மற்றும்படி ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் அடிக்குறிப்பிட்டு நான் புலிச்சார்புடையவன் என்று எழுதிக்கொண்டிருக்கவேண்டுமா என்பதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களோ தெரியவில்லை. //
உங்களுடைய சார்பு என்பது அல்ல, நான் “தேனீ” படிப்பதில்லை போன்ற ஸ்டேட்மன்ற் உடன் எப்படி -நீங்கள் விரும்புகிற - அறிவுத் தளத்தில் உரையாட முடியும் (இதே கேள்வியை யாரும் தமிழ்நெற் படிப்பதில்லை என்றாலும் கேட்கலாம்) போன்ற கேள்விகளின் அடிப்படையிலிருந்தே தோன்றுகிற எனது கருத்துக்களை வைக்கிறேன். இன்ன பக்கத்திலிருந்துதான் நேர்மையான அறிவுஜீவிகள் வருவார்கள் என்பதெல்லாம் அளவீடு கிடையாது. உண்மையில் வ.கீதாவின் அவதானம்போலவே -நேர்மையாக இருக்க வேண்டுமென நினைப்பவர்கள்- ஒரே உணர்வுடன் இருத்தல் என்பது சிரமமானதே. (அதை முதலில் புரிந்தும் ஒத்தும கொள்ள வேண்டும்.)
எனினும், வெளி இடங்களில் இருந்து, எல்லா ஊடகங்களையும் “பக்கங்களையும்’ வாசிக்க முடிகிறவர்களால் -
“மற்றவர்களை” விளங்கிக் கொள்ளுதல் என்பதைச் செய்யிறதைத் தவிர பெண்ணியம். தலித்தியம் இன்ன பிறவென கதைப்பவர்கள் செய்யயற்கரிய விசயம் ஏதும் இல்லை. எனவே நீங்கள் எல்லோரையும் விளங்கிக் கொள்ள விரும்புதல் என்பதையும் அவ்வாறே பார்க்கிறேன்.
ஆனால் உங்களது அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களது பதிவுகளில் -நடக்கிற வன்முறைகளிற்கு - கண்டனங்களைத் தெரிவிப்பதூடாகத்தான் ஏதோ வகையில் “மற்றவர்களுடைய” மக்கள் மீதான அக்கறைகளும் கருணையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற வகையில் எழுதுவதூடாக அது சாத்தியப்படுமா என்று யோசிக்க தோன்றியது.
எனக்குத் தோணுகிறவையை தெளிவாக எழுத முடிந்ததா தெரியவில்லை; முடிந்தவரை தோணுகிறவற்றை எழுதியிருக்கிறேன். கருத்துப் பரிமாற்றமாக இருந்தால் -தேவையெனில்- தொடரலாம்.
அப்புறம், கார்த்திக்: மேலே கருத்தென்று ஒன்றும் சொல்லவில்லை; குறிப்பிட்ட கேள்விதான் உள்ளது. இதில் நீங்கள் என்னுடன் முரண்படுகிற இடத்தை எழுதினால், தொடர்ந்து விவாதிக்கலாம், அது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்!
—பொடிச்ச
//ஆனால் விமர்சனம் என்பது உணர்ச்சிகளைத் தாண்டி அறிவுத்தளத்துக்கு நகரவேண்டும் என்பதே என் அவா (அது வ.கீதாவின் உரையைக் கேட்டதும் இன்னும் வெளிக்கிளப்ப அதைப் பதிவாய் இங்கே எழுதினேன்). இன்னும் ஏன் புலியெதிர்ப்பாளர்களை நோக்கித்தான் கேள்விகளை எழுப்பினேன் என்றால் அவர்களினூடாகத்தான் நம்பிக்கை அளிக்கும், அடுத்த கட்டத்துக்கு நகரும் அறிவுஜீவிகள் வருவார்கள் என்று -என் புலிச்சார்பின் ஊடாகக்கூட- இன்னும் நம்புகின்றேன். அந்தவகையில், இப்படி குண்டுச்சட்டிக்குள் நின்றுகொண்டு புலி எதிர்ப்பை மட்டும் செய்வதால் நீங்கள் சாதிக்கப்போவதில்லை எதுவுமில்லை என்ற ஆதங்கத்தில் அவர்களை நோக்கி நான் விமர்சனம் வைப்பது எனக்கு என்னளவில் மிக அவசியமாகின்றது.
அதேபோன்று நான் புலி ஆதரவுப் பிரச்சாரங்களினூடாக சுபத்திரனை விளங்கிக்கொண்டேன். அப்படியே தராகியை புலி எதிர்ப்பு ஊடகங்களினூடாக விளங்கிக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டு பேரும் முக்கியமானவர்களே, துரோகி-பாஸிஸ்ட் என்ற வார்த்தைப் பிரயோகங்களை மீறி நான் இவர்களை மட்டுமல்ல எல்லோரையும் விளங்கிக்கொள்ளமுயல்கின்றேன். அவ்வளவுதான்.//
35
டிசே தமிழன் says:
May 25th, 2006 at 5:02 pm edit
பொடிச்சி, உங்கள் விமர்சனங்களையும் விசனங்களையும் உள்வாங்கிக்கொள்கின்றேன். உங்களின் நீண்ட பின்னூட்டத்தை வாசித்தபின்னும் மேலே நான் கூறிய விடயங்களில் -என் நிலைப்பாட்டில்- பெரிதாய் மாற்றமில்லை என்றே நம்புவதால் பதிலாய் எழுதுவதற்கு இப்போதைக்கு எதுவுமில்லையென்றே நினைக்கின்றேன். நன்றி.
36
டிசே தமிழன் says:
May 25th, 2006 at 8:29 pm edit
பொடிச்சி, உங்கள் பின்னூட்டங்களோடு எனது தளம் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருப்பதால், நீங்கள் நினைத்து எழுதிய முழுதையும் இங்கே பதிவிலிட்டு இருக்கின்றேனோ தெரியவில்லை. எதாவது சேர்க்கவேண்டுமெனில் தெரியப்படுத்தவும். சில பின்னூட்டங்கள் -என்னைக் கேட்காமலே- முன்பக்கத்தில் வந்தும்விடுகின்றன :-(.
37
Madhunila says:
May 30th, 2006 at 1:27 pm edit
椼,
¿ýÈ¡¸ ±Ø¾£¸¢È£÷¸û. «ó¾ ¸¡ÄòÐ ¸¾¢¨Ã/À¢Â÷ «Ãº¢Âø/þÄ츢 ŢÁ÷ºÉò¾¢Öõ, þó¾ ¸¡ÄòÐ ÒÄ¢/ÒÄ¢ ±¾¢÷ôÒ ºõÀó¾Á¡É Thenee, Blog Å¢Á÷ºÉò¾¢Öõ «ÖòÐô§À¡ö, ¿õÀ¢ì¨¸ «üÚ §À¡ö þÕó¾ÅÛìÌ, ¾¢ÕôÀ¢ ¸¨¾ì¸¢È¾üÌ º¢È¢Ð ¯üº¡¸õ ¾ó¾¾üÌ ¿ýÈ¢.
ÒÄ¢Ôõ ºÃ¢, ÒÄ¢ ±¾¢÷ôÀ¡Ç÷¸Ùõ ºÃ¢, ´ýÚ ÁðÎõ ´üÚ¨Á¡¸ ¦ºö¸¢È¡÷¸û - ¾í¸Ù¨¼Â þÕô¨À ±§¾¡ ´Õ Å¢¾Á¡ö ¿¢¨Ä ¿¢Úò¾¢ ¦¸¡û¸¢È¡÷¸û. þ¾ü¸¡¸ ¡ռÛÁ¡ÅÐ ±ôÀÊ §ÅñÎÁ¡É¡Öõ §Åºõ §À¡ÎžüÌ ¾Â¡÷. ´ÕÅÕõ þí¸¢ÕóÐ ´ýÚõ «íÌ ¸‰¼ Àθ¢È Áì¸ÙìÌ ´ýÚõ À¢Îí¸¢ ÌÎì¸ô§À¡Å¾¢ø¨Ä. ¯í¸ÇÐ Blog ø ÌÈ¢ôÀ¢ð¼ º¢Äâý ( §ºÃý, º¢È¢¸Ãý, Hoole ¯ðÀ¼ ) ¸¼ó¾/¿¢¸ú ¸¡Ä «Ãº¢ÂÖõ, ±ØòиÙõ 100% §¿÷¨Á¡ɨÅ¡Å×õ, ÅÄ¢¨Á¡ɨÅ¡Å×õ þÕó¾¢Õó¾¡ø, ¿¢îºÂÁ¡¸ ±í¸û §À¡Ã¡ð¼õ þùÅÇ× À¢ýɨ¼óÐ, º¢¨¾óÐ §À¡Â¢Õ측Ð. ÒĢ¢ø À¢¨Æ þÕìÌ ¾¡ý - ±ø§Ä¡ÕìÌõ ¦¾Ã¢Ôõ ( ტɢ, ӉĢõ Áì¸û, ¸¡ò¾¡ý ÌÊ, …). «¨Ãîº Á¡¨Å ¾¢ÕôÀ¢ «¨Ãì¸ Å¢ÕõÀ þø¨Ä.
±ýÛ¨¼Â ¾í¸õ ±ýɦÅÉ¢ø, þÕ À̾¢Â¢ÉÕìÌõ Áì¸¨Ç Óý ¿¢¨Ä ÀÎò¾¢, Í ŢÁ÷ºÉõ ¦ºö §ÅñÊ §¾¨Å þÕìÌ. ÒĢ¢ý Ô¾ ÀÄÓõ, þÅ÷¸Ç¢ý «È¢×õ (Í ¿ÄÁüÈ) ±ôÀÅ¡ÅÐ §º÷ó¾¢Âí¸¢É¡ø ¾¡ý Áì¸ÙìÌ Å¢Ê× ÅÕõ. «Ð ŨÃ, ÒÄ¢¸û ¸¡ð¨¼ ûÅ¡÷¸û. ÁüÈÅ÷¸û (ÒÄ¢¨Â ±¾¢÷ôÀÅ÷¸û) ¦ÅÇ¢ ¿¡ð¨¼ ûÅ¡÷¸û (±øÄ¡ Àð¼í¸Ù¼Ûõ, ź¾¢¸Ù¼Ûõ). Áì¸¨Ç Â¡÷ ¾¡ý ¯ñ¨Á¢ø §Â¡º¢îº¡÷¸û?
38
டிசே தமிழன் says:
May 30th, 2006 at 1:51 pm edit
டிசே,
நன்றாக எழுதீகிறீர்கள். அந்த காலத்து கதிரை/பியர் அரசியல்/இலக்கிய விமர்சனத்திலும், இந்த காலத்து புலி/புலி எதிர்ப்பு சம்பந்தமான Thenee, Blog விமர்சனத்திலும் அலுத்துப்போய், நம்பிக்கை அற்று போய் இருந்தவனுக்கு, திருப்பி கதைக்கிறதற்கு சிறிது உற்சாகம் தந்ததற்கு நன்றி.
புலியும் சரி, புலி எதிர்ப்பாளர்களும் சரி, ஒன்று மட்டும் ஒற்றுமையாக செய்கிறார்கள் - தங்களுடைய இருப்பை எதோ ஒரு விதமாய் நிலை நிறுத்தி கொள்கிறார்கள். இதற்காக யாருடனுமாவது எப்படி வேண்டுமானாலும் வேசம் போடுவதற்கு தயார். ஒருவரும் இங்கிருந்து ஒன்றும் அங்கு கஷ்ட படுகிற மக்களுக்கு ஒன்றும் பிடுங்கி குடுக்கப்போவதில்லை. உங்களது Blog ல் குறிப்பிட்ட சிலரின் ( சேரன், சிறிகரன், Hoole உட்பட ) கடந்த/நிகழ் கால அரசியலும், எழுத்துகளும் 100% நேர்மையானவையாவவும், வலிமையானவையாவவும் இருந்திருந்தால், நிச்சயமாக எங்கள் போராட்டம் இவ்வளவு பின்னடைந்து, சிதைந்து போயிருக்காது. புலியில் பிழை இருக்கு தான் - எல்லோருக்கும் தெரியும் ( ராஜினி, முஷ்லிம் மக்கள், காத்தான் குடி, ஸ). அரைச்ச மாவை திருப்பி அரைக்க விரும்ப இல்லை.
என்னுடைய தங்கம் என்னவெனில், இரு பகுதியினருக்கும் மக்களை முன் நிலை படுத்தி, சுய விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இருக்கு. புலியின் யுத பலமும், இவர்களின் அறிவும் (சுய நலமற்ற) எப்பவாவது சேர்ந்தியங்கினால் தான் மக்களுக்கு விடிவு வரும். அது வரை, புலிகள் காட்டை ள்வார்கள். மற்றவர்கள் (புலியை எதிர்ப்பவர்கள்) வெளி நாட்டை ள்வார்கள் (எல்லா பட்டங்களுடனும், வசதிகளுடனும்). மக்களை யார் தான் உண்மையில் யோசிச்சார்கள்?
(Madhunila’s comment was converted to unicode by me -DJ)
39
டிசே தமிழன் says:
June 6th, 2006 at 9:46 pm edit
/ இரு பகுதியினருக்கும் மக்களை முன் நிலை படுத்தி, சுய விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இருக்கு. புலியின் யுத்த பலமும், இவர்களின் அறிவும் (சுய நலமற்ற) எப்பவாவது சேர்ந்தியங்கினால் தான் மக்களுக்கு விடிவு வரும்./
இப்படித்தான் நானும் சிலவேளைகளில் நினைப்பதுண்டு மதுநிலா.

பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து நேரங்கிடைக்கும்போது அதில் எழுதலாமே,
40
Madhunila says:
June 13th, 2006 at 10:11 am edit
Thank you for the encouragement. Need to learn the unicode typing. I will try it one day.
41
சத்தியக் கடதாசி » Blog Archive » காலச்சுவடும்.. திருமாவும்.. says:
August 15th, 2006 at 1:52 pm edit
[…] அண்மையில் கனடாவில் நடந்த நிகழ்வொன்றில் தோழர் கண்ணன்.எம், காலச்சுவடு இதழின் தினமலர், RSS தொடர்பு குறித்தும் கா.சுவின் பார்ப்பனச் சாய்வு குறித்தும் பேசியதை டிசே தமிழன் தனது பதிவில் குறிப்பிட அதற்கு கவிஞர் திருமாவளவன் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார்: “//இந்திய அரசியல் போலவே இலக்கிய அரசியலும். இதில் யாரை யார் நம்புவது. வந்திருந்த புதியவரும் கூட இந்த (பதிப்பக) இலக்கிய அரசியலுக்குள் உள்ளவர்தான். (அடையாளம் என்ற பதிப்பகம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டார். தகவல் தவறாகவும் இருக்கலாம்.) அதுவல்ல பிரச்சனை. புகலிட இலக்கியம் நீத்துப்போய் விட்டது உண்மைதான். இதற்காண காரணம் தமிழக இலக்கிய மேலாண்மைதான். பின் நவினத்துவம் தலித்தியம் என்கிற சொலாடல் கவர்ச்சியும் அ. மார்க்ஸ், சாருநிவேதா போன்றவர்களின் வெளிநாட்டு வருகைகளும், எமது இந்திய மோகமும் இயல்பாகவே அடித்து சென்றுவிட்டது. நாங்கள் இப்பொழுதும் இதையேதான் செய்துகொண்டிருக்கிறேம். முடிவாக தேவகாந்தன் சொன்னதே சரி. எமக்கென்றொரு பதிப்பகம், விமர்சன உலகம், வாசகர் வட்டம் இல்லாத வரை ஈழத்து இலக்கியம் தனித்து தளிர்த்து வளர முடியாது.//” […]