Tuesday, September 26, 2006

யசோதரா

புத்தரைப் பின் தொடரும்
தியானம் பூசிய
வாழ்வுத்தெருவில்
தற்செயலாய்ச் சந்தித்தேன்
பிரிய யசோதராவை
ஒரு மூலைக்கடையில
சேலைக்குப் பதிலாய்
short skirt அணிந்திருந்தாள்
இயல்பைமீறி அழகுசாதனங்கள்
அலங்கோலப்படுத்தினாலும்
மறந்துவிடாதிருந்தாள் புன்னகைப்பத
வெள்ளைத்தோலுடன் மண்ணிறக்காரனுக்கு
என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறதெனும்
வன்மம் ஒளிரக்கண்டோம்
அப்பொழுதில் தெருவைக்கடந்துபோன
காவற்துறையின் விழிகளுக்குள்ளும
ஒரு அகதியின் துயரங்களை
போரின் சிதைவுகளை
அவளுடன் பகிரப் பகிர
மனது குழைந்து
ஓவியமாயிற்று இரவு
‘ஆணின்’ தனித்துவத்தை
இழந்துவிடாதிருக்கும் கவனத்துடன்
எனக்கான நேரத்தை
முடக்குத்தெரு பெஞ்சில்
ஒதுக்கியமைக்கு நன்றியென
சில நோட்டுக்களை நீட்டினேன்;
செய்யாத தொழிலுக்கு
சம்பளம் பெறுவதில்லையென
மறுத்தாள் அதட்டிய குரலில்.
பின்
அவ் நெடுமிரவில்
கண்கள் கூசா வெளிச்சத்தில்
கிரீக் உணவும் வைனும்
பகிர்ந்துகொண்டிருக்கையில்
தன் உணர்வுகளை
சிகரெட் புகைக்குள் மறைத்தபடி
எங்கள் காயங்களும் வெறுமைகளும்
வேறுவிதமானவை
உனக்குப் புரியாதென்றாள்
விழிகளை ஆழ ஊடுருவியபட
சொல்லாத வலியின்
மெளனந்தாக்க
தியானங்கலைந்து
வனம் நீங்கி
பதட்டத்துடன்
தன் இல்லம் மீளக்கண்டேன்
புத்தரை
பின்னொருபொழுதில்.

தை 26, 2006

4 comments:

இளங்கோ-டிசே said...

1
பாலாஜி-பாரி says:
May 17th, 2006 at 9:54 am edit
இது மீள் பதிப்போ?
//வனம் நீங்கி
பதட்டத்துடன்
தன் இல்லம் மீளக்கண்டேன்
புத்தரை//
கவர்ந்த வரிகள்.
நன்றி
2
டிசே தமிழன் says:
May 17th, 2006 at 10:36 am edit
ஓமோம். சற்று திருத்திய (அல்லது திருந்திய) பதிப்பும் கூட :-). நினைவுகள் அவ்வவ்போது அலைக்கழிக்கும்போது இப்படித்தான்…… :).
3
வெற்றி says:
May 17th, 2006 at 10:40 am edit
டி.சே,
நல்ல கவிதை. எளிமையான தமிழில் யாரும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். இப்படி இன்னும் பல அருமையான கவிதைகளைத் தாருங்கள்.
அது சரி, இது என்ன கற்பனையா? அல்லது தங்களின் நிஜ அனுபவமா?
//தன் உணர்வுகளை
சிகரெட் புகைக்குள் மறைத்தபடி
எங்கள் காயங்களும் வெறுமைகளும்
வேறுவிதமானவை
உனக்குப் புரியாதென்றாள்
விழிகளை ஆழ ஊடுருவியபடி//
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள்.
பி.கு:- நீங்கள் தமிழ் பட்டதாரியா?
4
வசந்தன் says:
May 17th, 2006 at 11:00 am edit
//பி.கு:- நீங்கள் தமிழ் பட்டதாரியா? //
5
டிசே தமிழன் says:
May 17th, 2006 at 2:10 pm edit
வெற்றி பின்னூட்டத்துக்கு நன்றி.
….
/நீங்கள் தமிழ் பட்டதாரியா? /
நான் தமிழ் பட்டதாரி இல்லை. என்னுடைய பதிவுகளில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும், வாக்கியப்பிழைகளையும் பார்த்துக்கூட நீங்கள் இப்படி கேட்பது ஒருவிதத்தில் சந்தோசமாய்த்தான்
இருக்கின்றது :).
….
வசந்தன், நீர் ஸ்மிலியைப் போட மறந்துவிட்டீர் என்று நினைக்கின்றேன். என்டாலும் உந்த நக்கலுக்கு நீர் என்னிடம் ஒருநாள் அடிவாங்குவீர் என்பதை மட்டும் மறக்கவேண்டாம் :).
…….
சாந்தகுணசீலதேவன்! கார்த்திக் முதலில் தான் பின்னூட்டம் தவறாக இட்டதை விளங்கி சரியான இடத்திலும் பின்னூட்டம் இட்டிருந்தார். நான் தான் விளங்கிக்கொள்ளாமல் இரண்டில் ஒன்றை போஸ்ட் பண்ணினால் போதும் என்று தவறாய் அனுமதித்து விட்டிருந்தேன் என்பதால் உங்கள் பின்னூட்டத்தையும் வடிகட்டிவிட்டேன். கோபிக்கமாட்டியளதானே.

இளங்கோ-டிசே said...

http://elanko.blogspot.com/2006/08/blog-post.html

நளாயினி said...

பல நாட்களின் பின் வித்தியாசமான கவிதை வாசிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி.

Unknown said...

arumai nanbare...